Friday, May 31, 2024

SALEM SUNDARI - 18

 SALEM SUNDARI - 18

சேலம் சுந்தரி-18

மாமி சுப்பிரமணியனை  "உக்காருப்பா சார் ஸ்வாமிக்கு பூஜை பண்ணிட்டு வருவார் என்று சொல்ல சரிம்மா என்றான் சுப்பிரமணி. என்ன கல்யாண ஏற்பாடு ஆரம்பிச்சாச்சா ? என்றார் மாமி.

கல்யாண ஏற்பாட்டுக்கு ஏற்பாடு செய்யறதே பெரிய வேலையா இருக்கும் போல இருக்கும்மா ' என்றான் சுப்பிரமணி.

என்னப்பா ஆச்சு என்று மாமி துருவினார்.எங்கம்மா பொண்ணை வீ டியோவுல பாக்கணுமாம்  என்றான் .

ஏண்டா நீ பார்க்க வேண்டாமா  . என்று மாமி வேவு பார்க்க , அம்மா-- பார்க்கும் போது நானும் பாத்துருவேன் என்றான்.

மாமி "சரி அவ ஒன்ன பாக்கவேண்டாமா ?என்று நைசாக பொடி வைத்தார்.

அதுவும் தான் அவ மட்டும் சும்மா இருப்பாளா , அதுவும் இந்தஅக்காலத்துப்பொண்ணு " என்றான் சுப்பிரமணி.

மாமி "தேவலையே நீ, பூனையாட்டம் இருக்க , இவ்வளவு பேச்சு பேசற   , நீ பழைய சுப்பிரமணி இல்லடா என்றார் மாமி..

சுப்பிரமணி சிரித்துக்கொண்டே தலையை குனிந்து கொண்டான். இதை அவ்வளவையும் எழுத்து பிசகாமல் கேட்டுக்கொண்டே வந்த பிகே என்னப்பா என்றார்.

மாமி ம ள    ம ள     என்று வீடியோ பெண்/ பிள்ளை மியூச்சுவல் பார்த்தல் பற்றி சொல்ல ,

சுப்பிரமணி ஆண்ட்ராய்டு போன் வாடகைக்கு வாங்க -ணும் சார் என்றான்

. டே ஒன்னும் வேணாம் , நான் போன் நம்பர் தரேன் குறிப்பிட்ட நாள் ல நீயும் அம்மாவும் இங்க வாங்க இங்கிருந்தே பேசிட்டுப்போங்க. வாடகைக்கு வாங்காத அதெல்லாம் நம்ப முடியாது பொண்ணு போட்டோவை எடுத்துவெச்சுக்கிட்டு ஏதாவது வம்பு பண்ணுவானுக ; நீங்க இங்க வந்துடு ங்க என்று சொல்லி போன் நம்பர் கொடுத்து அவங்க போன் நம்பரை வாங்கி வச்சுகிட்டு அப்புறமா இந்த நம்பர் கொடு என்றார்    பி கே.    "சரி சார் என்றான் சுப்பிரமணி

ஆமாம்ப்பா அப்பிடியே அந்தப்பொண்ணை நானும் பாத்துருவேன் என்றார் மாமி.

சரிங்கம்மா புடிக்கலைன்னா சொல்லிருங்கம்மா என்றான் சுப்பிரமணி.

அப்பிடியெல்லாம் யோசிக்காத நல்ல பொண்ணா தான் இருப்பா நீ ஏன் கவலைப்படற ? என்றார் மாமி

ராமசாமி வழியே வீடியோ வழி சந்திப்பிற்கு ஒப்புதல் மற்றும் பி கே சார் இல்லத்தில் இருந்து தான், தனது தாயார் மற்றும் சிலர் [ஒரு முன் எச்சரிக்கையாக] என தெரிவித்தான் சுப்பிரமணி.

விரைவில் சுந்தரிக்கு போனில் சொல்லி விட்டார் ராமசாமி. அவள் மறவாமல் மாடசாமி க்கு தெரிவித்து தங்கையை திருச்சிக்கு வர வைக்கிறேன் அவள் சரியாக என்று வர முடியும் என்று தெரிவித்ததும் மேல்விவரம் சொல்வதாக சொல்லலாமா என மாடசாமி அபிப்ராயம் பற்றி கேட்டாள் .

அவங்க பி கே சார் வீட்டுல இருந்து பேசுவாங்கன்னா இங்க நீங்களும் உங்க தங்கச்சியும் ராமசாமி சார் வீட்டுல இருந்து வீடியோ பேசுங்க. உங்க சைடுக்கு ராமசாமி, மாமி ரெண்டு பெரியவங்க பேசவும் ,ஆசி/ ஆலோசனை வழங்கவும் உதவியா இருப்பாங்க என மாடசாமி தனது யோசனையை முன் வைத்தார்.

மீண்டும் ஒரு சங்கடம் வயிற்றில் சுந்தரிக்கு. இப்பேற்பட்ட அண்ணனைப்போய் வேலைக்கு வரல்ல னு அசிங்கமா கம்பளைண்ட் சொன்னேனே என்ன ஜென்மம் நான் என்று உள்ளூர வருந்தினாள். மீண்டும் மாடசாமியே ராமசாமியிடம் பேசி ராமசாமி சரிடா நீயும் வா என்றார். நான் எதுக்குடா என்றார் மாடசாமி.

டேய் நீ தாண்டா பொண்ணுக்கு அம்மான் [மாமன்] என்று மனப்பூர்வமாகவே சொன்னார் ராமசாமி.

தொடரும்                       அன்பன் ராமன்    

Thursday, May 30, 2024

DIRECTOR: B R PANTULU-2

 DIRECTOR:   B R PANTULU-2

இயக்குனர்  பி ஆர் பந்துலு -2

தாமரைப்பூ குளத்திலே " முரடன் முத்து -1964   டி ஜி லிங்கப்பா , டி எம் எஸ்,  பி எஸ்

முரடன் முத்து முதலில் கன்னட மொழியில் சின்ன கொம்பே என்ற பெயரில் வந்தது [நாயகி ஜெயலலிதா முதலில் கன்னட மொழியில் தான் அறிமுகம் . பின்னர் தான் தமிழில் "வெண்ணிற ஆடை "யில் தோன்றினார் .]தமிழ் முரடன் முத்துவில்  நாயகி தேவிகா , இணை சிவாஜி கணேசன். டி ஜி லிங்கப்பாவின் இசையில் அமைந்த பாடல்.

கிராமீய மணம் கமழ்ந்த  பாடல் 1964 ல் . கேட்டு மகிழ் இணைப்பு

https://www.youtube.com/watch?v=1-PdhqbCfBI MURADAN MUTHU TGL 1964 , PS  TMS

 

 கண்கள் இங்கே  'கர்ணன் "1964 , கண்ணதாசன் , வி ரா, குரல் பி சுசீலா

அத்துணை பாடல்களும் கம்பீரமாக ஒலித்த படம். மேலும் வி ரா வின் பன்முகத்திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டிய படம் . மேலும் இசை அமைப்பிலும் கருவிகளிலும் மகோன்னத நுணுக்கங்கள் கொண்ட நேர்த்தியான தொகுப்பு எனில் மிகை அன்று. இவை நீங்கலாக கவி அரசரின் சொல்வன்மையை சுவீகரித்த கதைக்களம் ,

இசையிலும் கருவிகளிலும் எம் எஸ் வி காட்டியிருந்த கட்டுக்கடங்காத ஆளுமை அனைத்து பாடல்களிலும் பீறிட , ஒன்றும்  நடவாதது போல் அமைதிகாத்து பெருமை கொண்ட விஸ்வநாதன் . இவ்வகை இசைக்கூறுகளை வெறெந்தப்படத்திலும் அவர் பயன் படுத்தாமல் இருந்தது ஒரு தனிச்சிறப்பு. அதிலும் வட இந்திய இசைக்கருவிகளை சில குறிப்பிட்ட கலைஞர்களையும் 'கர்ணன்"படத்தில் மாத்திரம் கையாண்டு பெரும் சவால் முடிந்தால் முயன்று பாருங்கள் என்பதாக சொல்லாமல் சொன்னார்

மேலும் கண்ணதாசானும் -விஸ்வநாதனும் படத்தின் 14 பாடல்களையும், கவிதை மெட்டு, இசை என இரண்டரை நாள்களில்  முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட தயாரிப்பாளர் பந்துலு கொந்தளித்துகூக்குரல் இட " எல்லாம் முடிச்சாச்சு என்று கண்ணதாசன் சொல்ல , என்ன? முடிச்சாச்சா ? என்று பந்துலு அதிர 14 பாடல்  இசை அமைப்பு உள்ளிட்ட பதிவுகளை பார்த்து கதி கலங்கிப்போனார் பந்துலு

ஏனெனில் பெங்களூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் அரை எண் 121 என நினைவு .10 நாட்களுக்கு இவர்களுக்கு ஒதுக்கிக்கொடுத்திருக்க , இவர்கள் அசுரர்கள் 2 நாளில் முடித்து விட்டு போடா போர் அடிக்குது என்று ஊர் திரும்பிவிட [விவரம் தெரியாமல்] பந்துலு குதித்ததில் வியப்பென்ன?

இப்போதென்னடா வெனில் ஒவ்வொரு பாடலுக்கும் ரசிகர்கள் குதிப்பதை 60 ஆண்டுகள் கடந்தும் பார்க்கிறோமே. இந்தப்பாடலை சொல்லில் விளக்குதல் எளிதன்று. கேட்டு ரசிக்க இணைப்பு இதோ:

https://www.youtube.com/watch?v=qjS-HB8Qqs8 KANGAL INGE KD VR PS

நாணமோ "ஆயிரத்தில் ஒருவன் " 1965 வாலி , விஸ்வநாதன்-ராமமூர்த்தி , டி எம் எஸ் , பி சுசீலா

போகிற போக்கில் பட்டையைக்கிளப்பிய பாடல். அதென்ன போகிற போக்கில்? ஆமாம் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் பிரிந்து போகிறபோக்கில் அமைத்த இசை இந்தப்படத்திற்கு தான் . ஆயினும் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் மங்காப்புகழ் கொண்டவை. இப்பாடலில் இருந்த ராக நெளிவுகளும் , கருவிகளின் துடிப்பும் வழங்கிய மதி மயக்கும் ஓசை நயங்களும்  காலத்தால் அழியாதவை. சுசீலா எப்படி ஜெயலலிதாவாகவே ஒலித்தார் -விந்தையிலும் விந்தை இருவருக்கும் வயது வேறுபாடு 20 ஆவது இருக்கும் ஆனாலும் இளமை பொங்கிக்கொப்பளிக்கும் வசீகரம் சுசீலா அவர்களின் குரலில். பல்லவி -சரணம் -பல்லவி என்ற தொகுப்பில் இணைப்புப்பாலம் இசைக்கருவிகளே . அதிலும் நாணமோ என்றதும் அதிர்ந்து துடிக்கும் போங்கோ , மாண்டலின் , சந்தூர் ஒலிக்கலவை கிளப்பும் சிருங்காரம் என்று பாடலின் பயணம் நெடுகிலும் இசை சாம்ராஜ்ஜியம் தான். என்னவொரு பாடல் ? பாடலின் வயது 59 . மனித வாழ்வியல் மொழியில் சொன்னால்" கிழம் ".

கிழமா இது ? இன்னும் துடித்து துள்ளும் கன்றுபோல் வசீகரிக்கிறதே ? என்ன விந்தை. இசையின் வலிமை ஆட்டிப்படைக்கிறது . கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.youtube.com/watch?v=Xn-lCF3aiTM NANAMO VAALI V R TMS  PS

இது போன்ற எண்ணற்ற படைப்புகள் பந்துலு ஆக்கியவை

வளரும்

அன்பன் ராமன்

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...