Friday, May 31, 2024

SALEM SUNDARI - 18

 SALEM SUNDARI - 18

சேலம் சுந்தரி-18

மாமி சுப்பிரமணியனை  "உக்காருப்பா சார் ஸ்வாமிக்கு பூஜை பண்ணிட்டு வருவார் என்று சொல்ல சரிம்மா என்றான் சுப்பிரமணி. என்ன கல்யாண ஏற்பாடு ஆரம்பிச்சாச்சா ? என்றார் மாமி.

கல்யாண ஏற்பாட்டுக்கு ஏற்பாடு செய்யறதே பெரிய வேலையா இருக்கும் போல இருக்கும்மா ' என்றான் சுப்பிரமணி.

என்னப்பா ஆச்சு என்று மாமி துருவினார்.எங்கம்மா பொண்ணை வீ டியோவுல பாக்கணுமாம்  என்றான் .

ஏண்டா நீ பார்க்க வேண்டாமா  . என்று மாமி வேவு பார்க்க , அம்மா-- பார்க்கும் போது நானும் பாத்துருவேன் என்றான்.

மாமி "சரி அவ ஒன்ன பாக்கவேண்டாமா ?என்று நைசாக பொடி வைத்தார்.

அதுவும் தான் அவ மட்டும் சும்மா இருப்பாளா , அதுவும் இந்தஅக்காலத்துப்பொண்ணு " என்றான் சுப்பிரமணி.

மாமி "தேவலையே நீ, பூனையாட்டம் இருக்க , இவ்வளவு பேச்சு பேசற   , நீ பழைய சுப்பிரமணி இல்லடா என்றார் மாமி..

சுப்பிரமணி சிரித்துக்கொண்டே தலையை குனிந்து கொண்டான். இதை அவ்வளவையும் எழுத்து பிசகாமல் கேட்டுக்கொண்டே வந்த பிகே என்னப்பா என்றார்.

மாமி ம ள    ம ள     என்று வீடியோ பெண்/ பிள்ளை மியூச்சுவல் பார்த்தல் பற்றி சொல்ல ,

சுப்பிரமணி ஆண்ட்ராய்டு போன் வாடகைக்கு வாங்க -ணும் சார் என்றான்

. டே ஒன்னும் வேணாம் , நான் போன் நம்பர் தரேன் குறிப்பிட்ட நாள் ல நீயும் அம்மாவும் இங்க வாங்க இங்கிருந்தே பேசிட்டுப்போங்க. வாடகைக்கு வாங்காத அதெல்லாம் நம்ப முடியாது பொண்ணு போட்டோவை எடுத்துவெச்சுக்கிட்டு ஏதாவது வம்பு பண்ணுவானுக ; நீங்க இங்க வந்துடு ங்க என்று சொல்லி போன் நம்பர் கொடுத்து அவங்க போன் நம்பரை வாங்கி வச்சுகிட்டு அப்புறமா இந்த நம்பர் கொடு என்றார்    பி கே.    "சரி சார் என்றான் சுப்பிரமணி

ஆமாம்ப்பா அப்பிடியே அந்தப்பொண்ணை நானும் பாத்துருவேன் என்றார் மாமி.

சரிங்கம்மா புடிக்கலைன்னா சொல்லிருங்கம்மா என்றான் சுப்பிரமணி.

அப்பிடியெல்லாம் யோசிக்காத நல்ல பொண்ணா தான் இருப்பா நீ ஏன் கவலைப்படற ? என்றார் மாமி

ராமசாமி வழியே வீடியோ வழி சந்திப்பிற்கு ஒப்புதல் மற்றும் பி கே சார் இல்லத்தில் இருந்து தான், தனது தாயார் மற்றும் சிலர் [ஒரு முன் எச்சரிக்கையாக] என தெரிவித்தான் சுப்பிரமணி.

விரைவில் சுந்தரிக்கு போனில் சொல்லி விட்டார் ராமசாமி. அவள் மறவாமல் மாடசாமி க்கு தெரிவித்து தங்கையை திருச்சிக்கு வர வைக்கிறேன் அவள் சரியாக என்று வர முடியும் என்று தெரிவித்ததும் மேல்விவரம் சொல்வதாக சொல்லலாமா என மாடசாமி அபிப்ராயம் பற்றி கேட்டாள் .

அவங்க பி கே சார் வீட்டுல இருந்து பேசுவாங்கன்னா இங்க நீங்களும் உங்க தங்கச்சியும் ராமசாமி சார் வீட்டுல இருந்து வீடியோ பேசுங்க. உங்க சைடுக்கு ராமசாமி, மாமி ரெண்டு பெரியவங்க பேசவும் ,ஆசி/ ஆலோசனை வழங்கவும் உதவியா இருப்பாங்க என மாடசாமி தனது யோசனையை முன் வைத்தார்.

மீண்டும் ஒரு சங்கடம் வயிற்றில் சுந்தரிக்கு. இப்பேற்பட்ட அண்ணனைப்போய் வேலைக்கு வரல்ல னு அசிங்கமா கம்பளைண்ட் சொன்னேனே என்ன ஜென்மம் நான் என்று உள்ளூர வருந்தினாள். மீண்டும் மாடசாமியே ராமசாமியிடம் பேசி ராமசாமி சரிடா நீயும் வா என்றார். நான் எதுக்குடா என்றார் மாடசாமி.

டேய் நீ தாண்டா பொண்ணுக்கு அம்மான் [மாமன்] என்று மனப்பூர்வமாகவே சொன்னார் ராமசாமி.

தொடரும்                       அன்பன் ராமன்    

No comments:

Post a Comment

Oh Language – a changing Scenario -3

  Oh Language – a changing Scenario -3 Before getting into scenario-3, I am obliged to respond to questions raised   in connection with Oh...