DIRECTOR: B R PANTULU-2
இயக்குனர் பி ஆர் பந்துலு
-2
தாமரைப்பூ குளத்திலே " முரடன் முத்து -1964 டி ஜி லிங்கப்பா , டி எம் எஸ், பி எஸ்
முரடன் முத்து முதலில் கன்னட மொழியில் சின்னத கொம்பே என்ற பெயரில் வந்தது [நாயகி ஜெயலலிதா முதலில் கன்னட மொழியில் தான் அறிமுகம் . பின்னர் தான் தமிழில் "வெண்ணிற ஆடை "யில் தோன்றினார் .]தமிழ் முரடன் முத்துவில் நாயகி தேவிகா , இணை சிவாஜி கணேசன். டி ஜி லிங்கப்பாவின் இசையில் அமைந்த பாடல்.
கிராமீய மணம் கமழ்ந்த பாடல் 1964 ல் . கேட்டு மகிழ் இணைப்பு
https://www.youtube.com/watch?v=1-PdhqbCfBI
MURADAN MUTHU TGL 1964 , PS TMS
அத்துணை பாடல்களும் கம்பீரமாக ஒலித்த படம். மேலும் வி ரா வின் பன்முகத்திறமையை வெளிச்சம் போட்டுக்காட்டிய படம் . மேலும் இசை அமைப்பிலும் கருவிகளிலும் மகோன்னத நுணுக்கங்கள் கொண்ட நேர்த்தியான தொகுப்பு எனில் மிகை அன்று. இவை நீங்கலாக கவி அரசரின் சொல்வன்மையை சுவீகரித்த கதைக்களம் ,
இசையிலும் கருவிகளிலும் எம் எஸ் வி காட்டியிருந்த கட்டுக்கடங்காத ஆளுமை அனைத்து பாடல்களிலும் பீறிட , ஒன்றும் நடவாதது போல் அமைதிகாத்து பெருமை கொண்ட விஸ்வநாதன் . இவ்வகை இசைக்கூறுகளை வெறெந்தப்படத்திலும் அவர் பயன் படுத்தாமல் இருந்தது ஒரு தனிச்சிறப்பு. அதிலும் வட இந்திய இசைக்கருவிகளை சில குறிப்பிட்ட கலைஞர்களையும் 'கர்ணன்"படத்தில் மாத்திரம் கையாண்டு பெரும் சவால் முடிந்தால் முயன்று பாருங்கள் என்பதாக சொல்லாமல் சொன்னார் .
மேலும் கண்ணதாசானும் -விஸ்வநாதனும் படத்தின் 14 பாடல்களையும், கவிதை மெட்டு, இசை என இரண்டரை நாள்களில் முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட தயாரிப்பாளர் பந்துலு கொந்தளித்துகூக்குரல் இட " எல்லாம் முடிச்சாச்சு என்று கண்ணதாசன் சொல்ல , என்ன? முடிச்சாச்சா ? என்று பந்துலு அதிர 14 பாடல் இசை அமைப்பு உள்ளிட்ட பதிவுகளை பார்த்து கதி கலங்கிப்போனார் பந்துலு.
ஏனெனில்
பெங்களூர்
உட்லண்ட்ஸ்
ஓட்டலில்
அரை
எண்
121 என
நினைவு
.10 நாட்களுக்கு
இவர்களுக்கு
ஒதுக்கிக்கொடுத்திருக்க
, இவர்கள்
அசுரர்கள்
2 நாளில்
முடித்து
விட்டு
போடா
போர்
அடிக்குது
என்று
ஊர்
திரும்பிவிட
[விவரம்
தெரியாமல்]
பந்துலு
குதித்ததில்
வியப்பென்ன?
இப்போதென்னடா வெனில்
ஒவ்வொரு
பாடலுக்கும்
ரசிகர்கள்
குதிப்பதை
60 ஆண்டுகள்
கடந்தும்
பார்க்கிறோமே.
இந்தப்பாடலை
சொல்லில்
விளக்குதல்
எளிதன்று.
கேட்டு
ரசிக்க
இணைப்பு
இதோ:
https://www.youtube.com/watch?v=qjS-HB8Qqs8
KANGAL INGE KD VR PS
நாணமோ "ஆயிரத்தில்
ஒருவன்
" 1965 வாலி
, விஸ்வநாதன்-ராமமூர்த்தி
, டி
எம்
எஸ்
, பி
சுசீலா
போகிற போக்கில் பட்டையைக்கிளப்பிய பாடல். அதென்ன போகிற போக்கில்? ஆமாம் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் பிரிந்து போகிறபோக்கில் அமைத்த இசை இந்தப்படத்திற்கு தான் . ஆயினும் பாடல்கள் அனைத்தும் இன்றளவும் மங்காப்புகழ் கொண்டவை. இப்பாடலில் இருந்த ராக நெளிவுகளும் , கருவிகளின் துடிப்பும் வழங்கிய மதி மயக்கும் ஓசை நயங்களும் காலத்தால் அழியாதவை. சுசீலா எப்படி ஜெயலலிதாவாகவே ஒலித்தார் -விந்தையிலும் விந்தை இருவருக்கும் வயது வேறுபாடு 20 ஆவது இருக்கும் ஆனாலும் இளமை பொங்கிக்கொப்பளிக்கும் வசீகரம் சுசீலா அவர்களின் குரலில். பல்லவி -சரணம் -பல்லவி என்ற தொகுப்பில் இணைப்புப்பாலம் இசைக்கருவிகளே . அதிலும் நாணமோ என்றதும் அதிர்ந்து துடிக்கும் போங்கோ , மாண்டலின் , சந்தூர் ஒலிக்கலவை கிளப்பும் சிருங்காரம் என்று பாடலின் பயணம் நெடுகிலும் இசை சாம்ராஜ்ஜியம் தான். என்னவொரு பாடல் ? பாடலின் வயது 59 . மனித வாழ்வியல் மொழியில் சொன்னால்" கிழம் ".
கிழமா இது
? இன்னும்
துடித்து
துள்ளும்
கன்றுபோல்
வசீகரிக்கிறதே
? என்ன
விந்தை.
இசையின்
வலிமை
ஆட்டிப்படைக்கிறது
. கேட்டு
ரசிக்க
இணைப்பு
https://www.youtube.com/watch?v=Xn-lCF3aiTM
NANAMO VAALI V R TMS PS
இது போன்ற
எண்ணற்ற
படைப்புகள்
பந்துலு
ஆக்கியவை
வளரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment