Wednesday, May 29, 2024

T M SOUNDARARAJAN-6

 T M SOUNDARARAJAN-6

டி எம் சௌந்தரராஜன்-6

"சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ" சந்திரோதயம் [1966] வாலி , எம் எஸ் விஸ்வநாதன் , குரல்கள் டி எம் எஸ் / பி எஸ்

1966 ம் ஆண்டு ஒரு வித்யாசமான ஆண்டு -குறிப்பாக தமிழ்த்திரை இசையைப்பொறுத்தவரை. ஆம் அதற்கு சில மாதங்கள் முன்னர் வி-ரா பிரிவு நிகழ்ந்து இருவரும் தனித்தனியே பயணிக்க நேர்ந்தது .முதலில் சற்று குறைந்திருந்த எம்எஸ் வி யின் ,திரைப்பயணம் மீண்டும் பொங்கிப்பிரவாகிக்கத்தொடங்கியது 1966 இல் இருந்து என்று சான்றுகளுடன் விவாதிக்க இயலும். அதுவல்ல நமது தேவை.

அது போன்ற தருணங்களில் இசை அமைப்பாளர்கள் யாராயினும் அவர்கள் எதிர்நோக்குவது பெரிய banner எனப்படும் தயாரிப்பு நிறுவங்கள் அல்லது முன்னணி நடிகர்களின் படங்கள் இவையே.

. எம் எஸ் வி நன்கு அறியப்பட்ட ஆளுமை எனினும் அவருக்கும் அப்படி ஒரு நிலை தோன்றி அவர் திடீரென விஸ்வரூபம் எடுத்தார் எனில் மிகை அன்று. ஆம் அன்றைய மாணவர்களிடையே தீராத விவாதம் யார் முதன்மையான இசைஅமைப்பாளர் விசுவா? ராமமூர்த்தியா ? என்பதே. . நீ, அன்பே வா , சந்திரோதயம், நெஞ்சிருக்கும் வரை என எண்ணற்ற இசைக்காவியங்களைப்படைத்து அசைக்கமுடியாத ;ளுமை என தன்னை நிலைப்படுத்திக்கொண்டார் எம் எஸ் வி. அப்படி ஒரு படத்தில் அமைந்த வெற்றிப்பாடல்கள் இரண்டினைக்காண்போம்.

"சந்திரோதயம் ஒரு பெண்ணா னதோ'  வாலி , டி எம் எஸ் சுசீலா குரல்களில். சொல்லை ப்பிரித்து பாட வைத்து கிறக்கம் விளைவிப்பதில் விஸ்வநாதன் ஒரு எம கிங்கரன் . சந்த் ---ரோதயம் என பிரித்து அடுத்து செந்தா --மரை  என்று மீண்டும் அழுத்தி ஆட்கொண்டவர் "இரு கண்ணானதோ ' என விரைந்து பாடவைத்து

மீண்டும் பொன் --ஓவியம்  என்று பேரா ---னதோ என்று உணர்ச்சியை பிழியவைக்கிறார் கவனியுங்கள் . பின்னர் வரும் சரணங்களில் இந்த உத்தியைபெரிதாகத்தொடாமலேயே  உணர்ச்சிப்பிழம்பாய் பாடல் பயணிக்கிறது. என்று கேட்டாலும் அதே இனிமை, குன்றாத இளமை வற்றாத ஊற்றென பொங்கும் சொல்கவர்ச்சி என எப்போதும் ஆட்கொள்ளும் அதீத குரல் வளம். எம்ஜி ஆரே பாடுவதாக/ ஜெயலலிதாவே பாடுவாதாக நம்ப வைக்கும் மன்னரின் இசைக்கோலம் சொல்லி மாளாது. கேட்டுக்கொண்டே இருக்கலாம் . மேலும் இதே தககவல்களை வெகு நேர்த்தியாக விளக்கும் QFR பதிவிலும் ரசித்திட இணைப்புகள் இதோ :

https://www.youtube.com/watch?v=NtEqNb8G_ZI [1966]Chandrodhayam 1 pennaanadho                                  vali msv, tms ps

https://www.youtube.com/watch?v=YbnfKIEfh0c QFR

மற்றுமோர் இசை மயக்கம்  சந்திரோதயம் -1966

"எங்கிருந்தோ ஆசைகள்" . முந்தைய பாடலின் அதே அதகள க்கூட்டணி . வெகு சிறப்பான மிரட்டல் வகை இசை. இதற்கு முன்னும் /பின்னும் இப்படி ஓர் ஆக்கம் வந்ததில்லை , வருவதற்கில்லை. . பாடலில் தாளம் இல்லை இடைஇசைக்கு மாத்திரம் ஒலி க்கும் brush drum .  அப்படி ஓர் அமைப்பும் பாடப்பட்ட விதமும் . ..... சை என்று நீட்டி ஆசையின் ஆழம் உணரவைத்த வித்தகமா , ஆடவன் பார்வையையில் ஆயிரம் இருக்கும் என்ற ஹார்மோன் விளையாட்டின் பாலபாடம் சொல்லும் வாலியையா ,   

 நான் ஏன் இன்று மாறினேன் என்று ஜெயலலிதாவின் விரகத்தை சுமந்து ஏக்கம் காட்டிய சுசீலாவையா , பாடலை முடிக்கவென்றே எண்ணற்ற உத்திகளை காட்டி மிரட்டும் எம் எஸ் வியை யா ? எதைச்சொல்ல? சொல்லவொண்ணாமல் தவிப்பதை விடுத்து இணைப்பு இதோ : இதிலும் QFR விளக்கங்கள் பயன் தரும் ரசியுங்கள்.

https://www.youtube.com/watch?v=8IOdW_hd1Bk ENGIRUNDHO AASAIGAL

https://www.youtube.com/results?search_query=QFR+EPISODE+432

“முத்துக்களோ கண்கள் “, நெஞ்சிருக்கும் வரை [1967] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் சுசீலா

இந்த உரையாடல் அந்நாளில் பிரபலம்

ஏண்டா -- விசு   இன்னிக்கு என்னடா பாட்டு ? -கவி அரசர்

டூயட்  தான் னு நினைக்கிறேன்- எம் எஸ் வி .

நாட்ல வேற ஒண்ணுமே இல்லையாடா? எப்பப்பாரு எவளையாவது தொரத்திக்கிட்டு போங்கடா -கண்ணதாசன்

ஸ்ரீதர்:  அண்ணே காதலைப்பத்தி ஒரு 2 வரி யில சொல்லலாமா?

 ரெண்டு வரி யில?   கண்ணதாசன் ,        ஆமாம் -ஸ்ரீதர்

சரி --  டே   விசு பாரு

"முத்துக்களோ கண்கள் ? தித்திப்பதோ கன்னம்?

"சந்தித்தவேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை " - போதுமா பல்லவிலயே சொல்லியாச்சு அவ்ளவு தான் காதல் முடிஞ்சு போச்சு -கண்ணதாசன்  

 வேறென்ன வேணும் ? -கண்ணதாசன்

வேறென்ன சரண வரிகள் தான் - ஸ்ரீதர்.

அடுத்த 10 நிமிடங்களில் கவிதை ரெடி தொடர்ந்து 5 நிமிடங்களில் மெட்டு ரெடி என்று எம் எஸ் வி பாடிக்காட்ட ஒரு 20 நிமிடங்களில் பாடல் தயார் .                          அப்படி வெறித்தனமாக உழைத்த கூட்டணி உருவாக்கிய பாடல் தான்

“முத்துக்களோ கண்கள்” . இன்னும் 50 ஆண்டுகள் ஆனாலும் சுவையும் கம்பீரமும் குன்றாத ஒரு நளினம்.

 பாடலின் தனிச்சிறப்பு வேறெங்கும் கவிஞர் கையாலாகாத சிலசொற்கோவைகள்

“கன்னிப்பெண்ணை மெல்ல மெல்ல தென்றல் தாலாட்ட

"கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட "

எழுந்த இன்பம் என்ன ?  உன் கண்கள் எங்கும் ஏக்கம் என்ன ?

விருந்து கேட்பதென்ன? அதையும் விரைந்து கேட்பதென்ன  ?  உன் கைகள் மாலையாவதென்ன?  போன்ற உவமைகள்

எண்ணற்ற எதுகை மோனைகள் நிறைந்த

நளினமான கனவுக்காட்சி ஒப்பனை இன்றி சிவாஜி கணேசன் கே ஆர் விஜயா பங்கேற்ற காட்சி ரசிக்க இணைப்பு  இதையேற்கும் QFR இணைப்பு உள்ளது ரசிப்பீர்

https://www.youtube.com/watch?v=H-Pw9ZDhcMw MUTHUKALO

https://www.google.com/search?q=muthukkalo+kangal+qfr+video+song&newwindow=1&sca_esv=3ffb1b30b2a08560&sca_upv=1&sxsrf=ADLYWIJUoLyQ9J1OdBunF5Bnf3v62yvClw%3A1716283454403&ei=PmhMZo QFR

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...