Wednesday, May 22, 2024

FRAUDULENT GUYS

 FRAUDULENT GUYS      

ஏமாற்றுப்பேர்வழிகள்

என்ன ஏமாற்றுப்பேர்வழிகள்  என்று கிளம்புகிறீர்களே ? என்கிறீர்களா ? வேறென்ன செய்ய இவர்களை சொல்லவும் பிடிக்கவில்லை சொல்லாமல் செல்லவும் மனம் இல்லை .

சரி இவர்கள் யார் ? அது தெரிந்தால் நாம் ஏன் ஏமாறுகிறோம்.. எவனைப்பார்த்தால் நல்லவன் போல் தெரிகிறானோ, அவன் பெரும்பாலும் திறமையாக ஏமாற்றுபவன். நம்பகத்தன்மை குறைவான உருவம் கொண்டவர் பலர் நல்லோரே.

பாழாய்ப்போன மனம் தோற்றத்தின் வசீகரத்தை கவனிக்கறதே அன்றி, பேச்சில் ஒளிந்து கிடக்கும் நயவஞ்சகத்தை புரிந்து கொள்வதே இல்லை. வெறும் ஜோடனையாக வீடு தேடி வந்து மேடம் சார் இருக்காரா என்பான் .

அவர் மனைவி -"சார் இல்லையே" என்பர்.

உடனே வந்தவன் --ok மேடம் எப்ப வந்தா பார்க்கலாம் ? என்று அளந்து பேசுவான் பெரிய போனில் விவரம் குறிப்பது போல் .

 சொல்ல முடியாது ஒவ்வொரு நாள் 5.30, சில நாள் 6.30 என்று சொல்ல அவன் வரேன் மேடம் என்று மெல்ல கிளம்ப , இந்த பெண்மணி சார் 1 நிமிஷம் என்ன விஷயமா வந்தீங்க தெரிஞ்சுக்கலாமா என்பார் . இதை எதிர்பார்த்துதான் அவன் மெல்ல நடந்தான் . போகிற சனியன் போகட்டும் என்று விட வேண்டியது தானே..

விட மாட்டோமே, விட்டுட்டா நம்ம கிளப் ப்ரெசிடெண்ட் னு எப்பிடி சொல்லிக்கொள்வது ?

இப்படியே பேச்சுக்கொடுத்து ஒரு பெர்ஃயூம் பாட்டிலை தருவான். ஜெர்மன் ஸ்வாஷ்  மேடம் E A M  ஜெய்ஷங்கர் பேவரிட்  என்று வலை விரிப்பான். ஜஸ்ட் கால் 'ல் HAND ஓவர் இன் மினிட்ஸ் என்று கம்பீரமாக பேசுவான்.

இது எவ்வளவு சார் ?

உங்களுக்கு FREE MAM , எனி நம்பர் OF TIMES என்பான்.

பெரிய வலை விரித்து விட்டான் , அது உணரவே முடியாத படி பேசி ஆனால் ரொம்ப மரியாதைப்பட்டவன் மாதிரி நடப்பான் , நடிப்பான் . FREE எல்லாம் வேண்டாம் எங்க க்ளப்ல 52 மெம்பர்ஸ் இருக்காங்க 3ர்ட் SATUR DAYS 5.00-7.00   PM என்று கார்டை நீட்டினாள்

FREE BIRDS  என்று டர்காய் ஸ்  BLUE அச்சு , கீழே இடது விளிம்பில் ஸ்வாதி ப்ரெசிடெண்ட் FB என்று விலாசம்.

Oh --just 3 days away , ஷ்யூர்  வில் மீட் that day என்று மந்தகாசப்புன்னகை காட்டி கை அசைத்தான். மாலை யாவது காமாலையாவது , கணவனைத்தேடி வந்தவன் , இப்போது புறா கூட்டத்தை பிடிக்க போகிறான். . புறாக்கூட்டமா , பூரா கூட்டமா இனிமேல் தெரியும் . முன்னாளில் சொக்குப்பொடி போட்டு ஆண்களை மடக்குவர்.

இப்போதுபெர்ஃயூம், ஜப்பனீஸ் விசிறி, இன்னோரன்ன படாடோபங்கள் வழங்கி கூட்டங்கூட்டமாக மயில்கள், குயில்கள், சிறகொடிந்த பறவைகள் அனைத்தையும் எளிதில் வளைக்க சி எம் வாராரு மேடம் டீவி கவரேஜ் இருக்கு; யாருக்கு front row வேணும் லிஸ்ட் கொடுங்க என்று அவ்வளவு பெண்களின் பெயர் போன் நம்பர் பகிரப்பட்டு படித்த மகளிர்  பள்ளிக்கு செல்லாத அரசியல் வாதியின் அருகில் நிற்க அலைவது விளம்பர மோகம் அன்றி வேறென்ன? .

அவன் ஏமாற்றுகிறானா /நாம் ஏமாறுகிறோமா ?  கம்பன் ஏமாறுவது இருக்கட்டும் அவ்வை கௌந்தி அடிகள் எல்லாமே ஏமாறும் என்பது உணர்த்துவது யாதெனில் மென்மையான பேச்சு உண்மையான பேச்சா என்று ஆய்வதில்லை.

 அதைக்கேட்டால் கோபம் பீறிட்டு வீட்டில் டிபன் கட் ஸ்விக்கியில் வாங்கிக்கொள் என்று கணவனுக்கு கட்டளை.

ரொம்பப்பேசினால் நீ என்றாவது perfume வாங்கி தந்தாயா ? என்று வாழ்வியலின் அஸ்திவாரமே   perfume தான் என்ற நிலைக்கு போய்விடுகிறார்கள் பலர். இது என்ன வகை மனோபாவம் ?

மேலும் விரிவாக பேச வேண்டிய அவலங்கள் உள்ளன வரும் பதிவுகளில் புரிந்து கொள்ள முயல்வோம்

அன்பன் ராமன் .

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...