SALEM SUNDARI- 17
சேலம் சுந்தரி -17
காலை 11.02
க்கு சுப்பிரமணிக்கு அம்மாவுக்கு போன் போட்டுவிட்டு சுந்தரி , அம்மா
நீங்க பெரியவங்க பேசுங்கம்மா என்று போனை அம்ஜம் கையில் தந்தாள் .
அம்ஜம் "ஹலோ , சுப்பிரமணி அம்மாவா சௌக்கியமா
இருக்கேளா ? என்றார்
அம்ஜம்
மறுமுனையில் டேய் யாரோ ஐயர்
வீட்டு அம்மா பேசுறாங்க? அந்தப்பொண்ணு ஐயராடா ? அதெல்லாம் நமக்கு சரிப்பட்டு
வருமாடா , ஏண்டா
இப்பிடி பண்ற?
சுப்பிரமணி : சும்மா இரும்மா
எனக்கு தெரியாதா என்று சீறி போனில் அம்மா சுப்பிரமணி பேசறேன் என்றான் .சௌக்கியமாப்பா
நான்தான் ராமசாமி wife பேசறேன்
நல்ல இருக்கீங்களா ? எங்கம்மா
நான் ஏதோ ஐயர் பொண்ண பிடிச்சுட்டேன்னு கத்தறாங்க . அந்த பொண்ணு அக்கா இருந்தா
அம்மாட்ட பேச சொல்லுங்க என்றான்.
சுந்தரி நேரடியாக பேசி தகவல் பரிமாற , போட்டோவுல நல்லா இருக்குது நேர்லயும் இப்பிடியிருக்குமா என்று
சுப்பிரமணி தாயார் கேட்க "நல்லா இருப்பா வீட்டு வேலை தையல் எம்பிராய்டரி
எல்லாம் செய்வா என்றாள் சுந்தரி.
சரி இப்பவெல்லாம் போன்ல வீடியோ பேசறாங்களே அதுல
அந்த பொண்ண வரச்சொல்லமுடியுமா , நான் இவனையும் வேட்டி கட்டி வரச்சொல்லி நேர ஒரு வாட்டி பாத்துட்டு
அப்புறம் முகூர்த்தம் பார்த்துரலாம் என்றாள்
சுப்பிரமணி தாயார்.
அம்ஜம் “கல்யாணத்துக்கு பொண் வீட்டுல என்ன செய்யணும்” ?
சுப்பு வின் தாய் :”நாங்க வளையலும் தாலியும் செய்வோம். அவங்க தோடு பொண்ணு
மாப்பிள்ளைக்கு புடவை வேட்டி
கல்யாணச்செலவு பாதி பாதி
அவ்வளவு தான்.
நாங்க ஒரு 5 , 6 பேர்
வருவோம். வேற ஒன்னும் வேண்டாம் அவனுக்கு எந்த ஆடம்பரமும் பிடிக்காது கோயில் ல தாலி கட்டுறான்னா கூட
சரி னு சொல்வான் கஷ்டப்பட்டு கரையேறின பையன்
எங்களப்பத்தி சொல்ல வேற என்ன இருக்குது என்றார் சுப்பிரமணி யின் தாயார். சுந்தரி
திக்கு முக்காடிப்போனாள் எவ்வளவு கௌரவம் ஏழ்மையிலும் என்று . புதன் வியாழனில் பேச
ஏதுவாக போன் நம்பர் தந்தால் வீடியோ வில் விசாலாட்சி யை வரச்சொல்றேன் அல்லது நானே
அவளை காட்டுகிறேன் பாத்துட்டு நல்ல தகவல் சொல்லுங்க என்றாள் சுந்தரி.
இப்போது தான் யோசிக்கிறான்
சுப்பிரமணி ஆஹா வீடியோ ல வரச்சொல்லிட்டாங்க அம்மா . நம்ம கிட்ட அந்த மாதிரி போன்
இல்லையே , அவங்க
கிட்டயிம் இருக்கோ இல்லையோ , எதுவும் கேட்டுக்காம ம்ம் வீடியோ ஆடியோ அது இது னு
இந்தம்மா பாட்டுக்கு சொல்லிரு ச்சு , ஐயையோ இப்ப மாட்டிக்கிட்டோமே
என்று கவலையில் ஆழ்ந்தான். சரி ஆண்ட்ராய்டு போன் வாடகைக்கு கிடைக்குமா அப்படியே
கிடைச்சாலும் எவ்வளவு நேரத்துக்கு ? அந்த நேரத்துக்குள்ள டவர்
கிடைக்கலைன்னா ரொம்ப சகுனமில்லாம ஆயிரும் ;ஆஞ்சநேயா நீ தான் வழி
சொல்லணும் என்று வானத்தைப்பார்த்தான் மேகக்கூட்டத்தில் பெரிய ராவணன் போல உருவம் தெரிய [1
வினாடி தான் -மாடசாமி, அவரின் உற்ற தலைவர் பி கே என்று மனம் சஞ்சரிக்க , உடனே
சைக்கிளில் பறந்தான் பிகே சார் வீட்டிற்கு ;மணி 12 .00
அப்போது தான் அவர் குளித்து முடித்து துணிகளை மாடியில்
உலர்த்திவிட்டு கீழே வந்தார்.
வெராந்தாவில் சுப்பிரமணி .
என்னப்பா ஏன் வெளில நிக்கற
உள்ள வா என்றார். தயங்கி தயங்கி வந்தான் . ஏதாவது கல்யாணச்செலவுக்கு பணம் வேணுமா? என்றார்
பி கே . அதெல்லாம் வேணாம் சார் கடன் வாங்கி கல்யாணம் பண்றதாவது ?
அப்பிடியாவது முகூர்த்தம் வேணுமா , இல்ல
சார் வேண்டாம் என்றான் சுப்பிரமணி. .
சின்னப்பையனாக இருந்தபோது
பிச்சை எடுக்கறதும் பொய் சொல்றதும் பிடிக்காது சார்னு சொன்னான் , இப்ப
கடன் வாங்கறதையும் வெறுக்கிறான் -நல்ல குணவான் தான் என்று உள்ளூர மகிழ்ந்தார் பி
கே.
சரி இவன் நம்ம கிட்ட பேச
மாட்டான் என்று புரிந்துகொண்ட பி கே உள்ளே சென்று மனைவிஇடம்- நீ போய் பேச்சுகுடுத்து என்னனு கேளு என்று மாமியை
அனுப்பினார்.
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment