TEACHER IMAGE- AN ENDOWMENT-2
ஆசிரியர் பிம்பம்-- ஒரு மூலதனம் [சொத்து]-2
ஆசிரியர் --பிம்பம் என்பது நான் சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தை போல , பன் முக அமைப்பும் குழப்பமும் நிறைந்ததே . சரி, இவ்வனைத்தையும் தாண்டி, ஆசிரியப்பணி குறித்து ஒருவர் புரிந்து கொள்ள வேண்டியது பின் வரும் நுணுக்கங்கள் சார்ந்தது.
எனவே தன்னை கட்டமைத்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு ஆசிரியனின் கடமை . பின் வரும் அடையாளங்களை நீங்கள் ஏற்கிறீர்களா அன்றி மறுக்கிறீர்களா ?
1 கல்லூரி ஆசிரியர் [லெக்ச்சரர் /ப்ரொபஸர் ] இரண்டும் பெரும் தொழில் முறை அடையாளங்கள் [professional tags ]
2 இரண்டும் பிரத்யேக மதிப்பு கொண்டவை . வெறெந்தப்பணியாளரும் தங்களை இவற்றோடு பொருத்திப்பார்க்க இயலாது. ஏனெனில் இவ்வகைப்பணிகளில் எவரின் குறுக்கீடும் நுழையமுடியாது. இதையே towering independence [தொழில் புரிவதில் கோபுரம் போல நெடிதுயர்ந்த சுதந்திரம்]; இதை வேறு எந்த பணியிலும் இந்த எல்லை வரை செலுத்த இயலுமா ? ஒருவேளை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கும் வாகன ஓட்டிகள் விமான பைலட்கள் , ராணுவ ஜெனெரல்கள் போன்ற சில குறிப்பிட்ட பணியினருக்கு இது போன்ற செயல் சுதந்திரம் இருக்கக்கூடும் . வேறு பல பணிகளில் அவ்வப்போது குறுக்கீடு இருப்பதை பலரும் அறிவோம்.
வகுப்பறையில் இருக்கும் ஆசிரியரை வெளியில் அழைத்து பேசலாம் அல்லது அவ்வாசிரியரின் ஒப்புதலோடு மட்டுமே வகுப்பினுள் நுழைய முடியும் -முதல்வர் உட்பட எவரும்].
இந்த நடை முறை போதித்தல் பணியின் புனிதத்தன்மைக்கு தரப்படும் உன்னத மரியாதை.. எனில் ஆசிரியர் பிறரின் பணியாளர் அல்ல அவரின் தலையாய கடமை மாணவ/மாணவியரின் கல்வி குறித்த முனைப்பே; பிற அனைத்தும் இரண்டாம்/ மூன்றாம் நிலை பணிகளே என்ற தகுதி கொள்வ .
சென்ற பதிவில் கல்லூரிப்பணிக்கென்றே சில செயல் தேவைகளும் கட்டுப்பாடுகளும் உள என குறிப்பிட்டிருந்தேன் .
அவை, பெரும் எதிர்பார்ப்பையும் செயல் கம்பீரத்தையும் எதிர்நோக்கும் சூழல் தான். ஆம் தகுதி வாய்ந்த ஆசிரியன் குறிப்பாக UG /PG நிலையில் இயங்கும் நபர் தெளிவான விளக்கமும் சுறுசுறுப்பான இயக்கமும் கொண்டு மேலும் மேலும் தகவல்களை வெகு இயல்பாக பரிமாறும் ஆளுமை கொண்டவராக இருத்தல் வேண்டும் என பலராலும் எதிர்நோக்கப்படுவது .
இதில் நாட்டமோ ஆளுமையோ குன்றியதாக கருதப்பட்டால் அவ்வகை நபர்கள் வகுப்புகளில் பெரிதும் போராட வேண்டியிருக்கும். ஏனெனில் மாணவ மாணவியர் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தாமல் ஏனோ தானோ என செயல்பட்டு ஆசிரியரின் ஆர்வத்தை மேலும் மழுங்க அடித்து அவரை கேலிப்பொருள் ஆக்குவர் .
கல்லூரிச்சூழலுக்குள் பயிலும் எவரையும், பள்ளி மாணாக்கர்கள் போல மிரட்டி ஒடுக்க முடியாது. கல்லூரி மாணாக்கர்கள் கட்டுப்படுவது, மிகுந்த ஆளுமை கொண்ட போதனா முறையறிந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே.
இந்த உண்மையை கல்லூரியில் ஆசிரியப்பணிபுரிய விழைவோர் நன்றாக மனதில் இருத்துங்கள்.
சென்ற பதிவில் நான் இரு தகவல்களை கோடிட்டுருந்தேன் அவை UG /PG என்ற நிலைகள் குறித்ததே . முன்னதில் [UG இல் ] அனைத்துமுக்கிய விதிகளும் கோட்பாடுகளும் [RULES /DEFINITIONS /CONCEPTS ]தெளிவாக கற்பிக்க படுத்தல் வேண்டும் .
PG யில் விளக்கமாகபடிப்பீர்கள் என்பது , பின்னர் PG யில் முன்னமே UG யில் விளக்கி இருப்பார்களே என்று ஏமாற்றுவது நடைபெறுவதை நான் அறிவேன் . அது ஒரு நோயாளியின் மனோநிலை போன்றது.
நோயாளியிக்கு உடலிலும் மனத்திலும் தெம்பும் ஆர்வமும் குன்றியிருப்பதனால் அவர் சோர்ந்து அமர முயல்வார். ஆசிரியப்பணிக்கு அது அழகல்ல.. UG
யிலும் விளக்கி அதன் உள்ளார்ந்த பொருள்களை PG யிலும் மேலும் ஆழ்ந்து விளக்கினால் பல ஆண்டுகளுக்கு இந்த விளக்கம் எதிகர்கால சந்ததிக்கு போய்க்கொண்டே இருக்குமே அதை ஏன் பரவ விடாமல் தடுக்க வேண்டும்.?
இது போன்ற ஆழ்ந்த கோ ட்பாடுகள் [ IN -DEPTH ANALYSIS] அணுகுமுறைகளை தவிர்ப்பதால் நமது பட்டதகாரிகள் போட்டித்தேர்வுகளை சந்திப்பதை பிரசவ வேதனையாக எண்ணி குலை நடுங்குகின்றனர்.
நமது கல்வி பிற மாநிலங்களை விட மேம்பட்டது என தம்பட்டம் அடிப்பதில் பலன் இல்லை. மாறாக நீண்ட நெடிய வாதங்களும் விவாதங்களும் . அவ்வப்போது நிகழ்த்தப்படும் போது அச்சமும் தயக்கமும் அகலுவதுடன் , பல கருத்துகளையும் ஆழ்ந்து நோக்கும் முயற்சியும் பயிற்சியும் மாணவரை செம்மைப்படுத்தும் . அதுவே முறையான கல்லூரிக்கல்வி.
சென்ற நூற்றாண்டில் எழுதிவைத்த நோட்ஸ் என்னும் குறிப்பை மீண்டும் எழுதச்சொல்லி படித்துவிட்டு வருதல் எவர்க்கும் பலன் தருவதில்லை. புரிந்துகொள்ளாமல் எழுதிவைத்து கம்பராமாயணம் போல் சுமந்து கொண்டு திரிவதால் என்ன பலன் விளையும்? எனவே உயர் கல்வி பயிற்றுவிக்கும் வாய்ப்பினை இறைவன் கொடுத்த வரமாகப்பாருங்கள். நாட்டில் எத்துணை மாந்தர்க்கு இது போன்ற இளைய தலைமுறையினருக்கு போதிக்கும் உன்னத வாய்ப்பு கிடைக்கிறது.?
மகத்தான பொறுப்பல்லவா அஃது . இறைவன் கொடுத்த வரம் அதை கெடுத்த கயவன் இவ்வாசிரியன் என்ற பழிச்சொல் வரும்படி செயல் படுதல், தலை முறைகளைக்கெடுத்த கொடூரசெயல் என்று உணர்வோம்.
பெரும் புகழ் அடைய ஆசை கொள்கிறோம் அதற்கான முயற்சியும் பங்களிப்பும் இன்றி எது சாத்தியம்? முறை யான முயற்சி இன்றி ஆசிரியப்பணியில் வெற்றி ஈட்டுதல் எனும் எண்ணம் இல வுகாத்த கிளையை விட கொடூரம். இன்னும் பிற தகல்வகளை வரும் பதிவில் காண்போம் .
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment