Wednesday, May 1, 2024

T M SOUNDARARAJAN -2

 T M SOUNDARARAJAN -2

டி எம் சௌந்தரராஜன் -2

கொக்கர கொக்கரக்கோ சேவலே -பதி பக்தி -1957 பட்டுக்கோட்டை , வி ரா,         டி எம் எஸ் , ஜிக்கி

கோழியை வைத்துக்கொண்டு ஆண்  பெண் போராட்டமாக அமைந்த பாடல் பீம்சிங் இயக்கத்தில் வந்த ராணுவ வீரர் வாழ்வின் சூழலை காட்டிய படம் சிவாஜி, எம் என் ராஜம் நடிப்பதைப்பாருங்கள் இணைப்பிற்கு

https://www.youtube.com/watch?v=a4MKC-I7SAg kokkara kokkarako  PATTUKKOTTAI , VR pathibakthi 1957 , TMS JIKI

இதே படத்தில் ராணுவ வீரர்கள் வீடுநோக்கி வரும் பாடல் , பட்டுக்கோட்டையின் கற்பனை, வி, ரா இசையில் டி எம் எஸ் குரலில் . குழுவில் ஓஹோ என்று ஓங்கி ஒலிப்பது ஜி கே வெங்கடேஷின் குரல் . கேட்டு மகிழ இணைப்பு

https://www.google.com/search?q=veedunokki+odi+vandha+nammaiye+video+song&oq=veedunokki+odi+vandha+nammaiye+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgk

PATHIBHAKTHI 1857  PATTUKKOTTAI VR TMS

முல்லை மலர் மேலே -அம்பிகாபதி- 1958, பாடல் மருதகாசி , இசை ஜி ராமநாதன், குரல் டி எம் எஸ், சுசிலா

ஒவ்வொரு நாளும் முழங்கிய அந்நாளையபாடல் அற்புதமான ராக பாவம் , வெகு சிறப்பான ஆலாபனை மற்றும் நளின ரசம் நிறைந்த ராகவேறுபோராடுகள். கேட்பவரை மயக்கி முடக்கும் வலிமையான ராக விளையாட்டு எளிமையான கருவிகளின் உதவியுடன் , சும்மாவா சொன்னார்கள் இசை மேதை என்று திரு ஜி ராமனாதன் அவர்களை.. ராகங்களை குழைத்து மெருகேற்றுவதில் அவர் ஒரு தனி ரகம் . பாடகர்கள் எவ்வளவு அழகாக பங்களித்துள்ளனர் .. கேட்டு மகிழ இணைப்பு 

AMBIGAPATHY ,1958  MARUDHAKASI , GR , TMS, SUSEELAA

https://www.google.com/search?q=mullai+malaqr+pole+video+song+&newwindow=1&sca_esv=618eadb7918fb614&sca_upv=1&sxsrf=ACQVn0-q89qAmx5lrmAwbSURy-IPQiaykA%3A1713783441039&ei

முல்லை மலர் மேலே -அம்பிகாபதி- 1958, பாடல் மருதகாசி , இசை ஜி ராமநாதன், குரல் டி எம் எஸ், சுசிலா

இப்பாடலை திரு அனந்து [எம் எஸ்வியின் குழுவில் நீண்ட பங்களித்தவர்] எப்படி அணு அணுவாக அலசியுள்ளார் கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=mullai+malaqr+pole+video+song+&newwindow=1&sca_esv=618eadb7918fb614&sca_upv=1&sxsrf=ACQVn0-q89qAmx5lrmAwbSURy- ANANTHU IPQiaykA%3A1713783441039&ei=kUIm

ஏன் பிறந்தாய் மகனே , பாகப்பிரிவினை 1958, கண்ணதாசன், வி, ரா, டி எம் எஸ்

ஏழையின் குழந்தைக்கு தகப்பனின் தாலாட்டு . சொற்களில் தவழும் யதார்த்தம் மற்றும் சோகம் , எதிர்கால எதிர்பார்ப்பு என்று அந்நாளைய படங்களின் பண்பு விலகாமல் அமைந்த நயம் மிகு பாடல். டி எம் எஸ் குரலில் தவழும் சோக உணர்வுகளை கூர்ந்து கேளுங்கள்.. அந்நாளைய கலைஞர்கள் வணக்கத்துக்குரியவர்கள் என்பது எளிதில் விளங்கும். பாடலுக்கு இணைப்பு 

 BAGAPIRIVINAI 1959  KD VR TMS

https://www.google.com/search?q=yen+pirandhaai+magane+video+song&newwindow=1&sca_esv=ef60048de08cc37c&sca_upv=1&sxsrf=ACQVn08xhiAdg9_iqOhdp-7nBXOPUIextA%3A1714300378956&

வளரும்

அன்பன் ராமன்

2 comments:

  1. காட்சிகளும் சரி.... பாடல்களும் சரி.... இசையும் சரி..... பாடுகின்ற அழகும் சரி..... அந்த காலத்து கலைஞர்களின் அர்பணிப்புகளை வார்த்தைகளில் சுருங்கி விடுகிறது முடியாது. நம்முள் பொங்கி வரும் அந்த உணர்ச்சியில் அவர்கள் ஆத்மாவை நனையவிடுவதே நாம் அவர்களுக்கு அளிக்கின்ற பாராட்டு.

    ReplyDelete
  2. சுருக்கி விட முடியாது

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...