Thursday, May 2, 2024

P.MAADHAVAN -4

 P.MAADHAVAN -4 

இயக்குனர்  பி மாதவன்-4

தேன் சிந்துதே வானம் -பொண்ணுக்கு தங்க மனசு [1973] கண்ணதாசன் , இசை ஜிகே வெங்கடேஷ் , குரல்கள் எஸ்பி பாலசுப்ரமணியன் , ஜானகி

இளமை தெறிக்கும் குரல் , காதலை மென்மையாகப்பேசும் பாடலும் இசையும் , பெரிதும் பேசப்பட்டன, கவிஅரசரைப்போல் சொற்கோவைகள் பிற யாப்புகளில் காண்பதரிது . "வைதேகி முன்னே ரகு வம்ச ராமன் விளையாட வந்தால்  வேறென்ன வேண்டும்"  என்ற  தொடரில் வைதேகி [சீதை] மற்றும் ராமனின் ரகு வம்ச பிறவி குறித்து கண்ணதாசன் போல் வலுவாக கையாண்ட வேறு எவரையும் எனக்கு நினைவு வரவில்லை. பலர் சீதையை ,'சீதை'என்றே எழுதுவர் , கவிஞர் கண்ணதாசன்தனித்துவமாக  மாற்றுப்பெயர் இயன்ற அளவு உபயோகிப்பவர் [மாணவன் படத்தில் கல்யாண ராமனுக்கும் கண்ணான ஜானகிக்கும் என்ற சொல்லாடல் , மூன்று தெய்வங்களில் வசந்தத்தில் ஓர் நாள் மணவரை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ  ] இப்படி எல்லாம் சந்த அமைப்பு மாறாமல் தந்த பாடல் சுகமாக ஒலிப்பது என்பது இயல்பு தானே?

கேட்டு மகிழ

PONNUKKU THANGA MANASU1973  –THEN SINDHUDHE VAANAM –KANNADAASAN SPB JANAKI

https://www.google.com/search?q=THEN+SINDHUDHE+VAANAM+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=ee88421e58fba9e6&sca_upv=1&sxsrf=ACQVn0-Z39qxRbUhvc1WeSPO4BpXvYhRHg%3A17140059451 DEVARAJ MOHAN DIRECTORS

வந்தாலும் வந்தாண்டி ராஜா -சித்ரா பௌர்ணமி [1976] , கண்ணதாசன் எம் எஸ் விஸ்வநாதன் , குரல் டி எம் எஸ் ,சுசீலா

ஒரு கலகலப்பான பாடல் , கதைக்களம் புரியாததால் பாடலை விளக்க இயல வில்லை. . போகட்டும் இது போன்ற காட்சியில்  முன்னணி நட்சத்திரங்கள் ஏன் எப்படி சொல்ல தெரியவில்லை ஆனாலும் இந்நாளிலும் நினைவில் நிழலாடும் அந்நாளையப்பாடல் . ஓங்கி ஒலிக்கும் டி எம் எஸ் குரல் இனி கனவில் தான் கேட்கவேண்டும். இணைப்பு இதோ :

1976  CHITRAPOURNAMI” VANDHAALUM “ KD MSV TMS PS

https://www.google.com/search?q=VANDHAALUM+VANDHANDI+RAAJA+VIDEO+SONG&oq=VANDHAALUM+VANDHANDI+RAAJA+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKAB

வீட்டுக்கு வீடு வாசப்படி [1979] படமும் பாடலும் அதுவே ராஜன் நாகேந்திர இசையில் ஒலித்த எஸ்பி பாலசுப்ரமணியன் சுசீலா குரல்கள். மிகுந்த தத்துவார்த்தமான பாடல். இதில் சிறப்பு எஸ்பிபி திடீரென்று நடிகர் சுருளிராஜனின் குரலில் பாடி அசத்தியுள்ளார். இதுபோல் வீவேறு குரலில் அடுத்தடுத்துப்பாட வெறும் முயற்சிமட்டும் உதவாது அசத்திய குரல் கட்டுப்பாடு வாய்க்க வேண்டும் . இணைப்பு அதிலக் யூட்யூப் காணப்பட்டு என்ற இணைப்பை க்கொண்டு கேளுங்கள் 

VEETTUKKU VEEDU VAASAPPADI

https://www.google.com/search?q=veettukku+veedu+vaasappadi+vishayangal++video+song&newwindow=1&sca_esv=ee88421e58fba9e6&sca_upv=1&sxsrf=ACQVn08uGsd7QbSymAxvHzGNdJaehzruCA%3A1714

காதல் ராஜ்ஜியம் எனது [மன்னவன் வந்தானடி - 1975 ] KAVIARASAR , எம் எஸ் வி, குரல்கள் பிசுசீலா, டி எம் எஸ்

அதியற்புதமான பாடல் ;இப்படியெல்லாம் கூட சொல்லை வளைத்துப்பாடி ரம்மியத்தை உருவாக்க முடியுமா என்று எம் எஸ் வி மிரட்டிய பாடல். பாடலைக்கேட்ட எவரும் நிச்சயம் மயங்குவர். கவி அரசர் சொல் விளையாட்டு ஒருபுறம், எம் எஸ் வியின் இசை ராஜ்ஜியம் ஒருபுறம் என கம்பீரமாக            

ஒலித்து[ராஜ பார்ட் ரங்கதுரையில் கேட்ட அதேவகை சந்தக்குவியல்கள்]  எப்படி இவரால் எழுத அவரால் இசைக்ககிளிபோல் கட்டுப்பட்டு வண்ணஜாலம் காட்ட முடிகிறது ? சுபஸ்ரீ அவர்களின் விஸ்தாரமான வர்ணனையில் பாடலை ரசித்தபின் படத்தின் காட்சியைப்பாருங்கள்.

 https://www.google.com/search?q=QFR+SONG+KADAL+RAAJIYAM+ENADHU&oq=QFR+SONG+KADAL+RAAJIYAM+ENADHU&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKAB0gEJMTk4NzRqMGo0

இத்தனையையும் தாண்டி ஒரு நல்ல பாடலை நாறடித்த பெருமை இந்த படக்குழுவுக்கே சாரும். பாடல் கம்பீரமாக குதிரையின் ஓட்டத்தை அடிநாதமாக வைத்து ஓடி இயங்க, காட்சியில் குதிரை ஆடி அசைந்து நடக்கிறது. பார்க்கவே மோசமாக இருக்கிறது . அப்படியெனில் இசை அமைப்பாளரிடம் தெரிவித்த காட்சி அமைப்பு வேறு , படப்பிடிப்பில் நடந்தது வேறு. எப்படியாயினும் பாடலை [ஆடியோவை]  கேளாமல் படம் பிடித்துவிட்டனர் போலும்  குறைந்த பட்சம் வாய்- வாய்ஸ் ஒருங்கிணைப்பிற்காவது பார்த்திருப்பார்கள். என்ன நடந்தது ? புரியவில்லை. மதுரை மொழியில் சொல்வதானால் "நாங்களும் சொதப்புவம்ல " என்று ஒரு படக்குழு இயங்கியிருக்கிறது. பாடலை கெடுக்க இதுபோன்ற ஒரு படத்தொகுப்பை காண்பதரிது. கேட்டு/பார்த்து குமையுங்கள் 

KADHAL RAAJIYAM ENADHU –MANNAVAN VANDHAANADI     VAALI  tms ps msv

https://www.google.com/search?q=KAADHAL+RAAJIYAMENADGHU+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=ee88421e58fba9e6&sca_upv=1&sxsrf=ACQVn0-F4a-6CENiVOz6PPAsRHLuEJ7dFw%3A1714006638814


No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...