SALEM SUNDARI-10
சேலம் சுந்தரி -10
நீ என்ன முயன்றாலும் உன்னால் என் மீது பழிசொல்ல முடியாது என்று கௌரவமாக
வாதிடும் மாடசாமியை எதிர்கொள்வது பெரும் ஜாம்பவான்களுக்கே சவால் , சுந்தரிகளும் சௌந்தரிகளும் என்ன செய்ய முடியும்?. உருவம் உடல், செயல் உள்ளம் அனைத்திலும் உயர்ந்த மாடத்தில் இருப்பவர்
மாடசாமி அதை புரிந்துகொள்ள மட ஆசாமிகளுக்கு வெகுகாலம் தேவைப்படும். இது நமது
அன்பர்களுக்கு தெரியும் , சுந்தரி
சமீபத்திய வரவு அல்லவா? போகப்போக
அவளுக்கும் தெளிவு பிறக்கும். சரி ,என்ன மாதிரி பேசி மாடசாமியிடம் தனது சூழலை விளக்குவது என்று
நன்கு மனதில் அமைத்துக்கொண்டு பேசத்துவங்கினாள் .
சார் எனக்கு ஒரு தங்கை இருக்கிறாள் , 8 வகுப்பு தான் படிப்பு, ஆனால் டெய்லரிங், எம்ப்ராய்டரி, சமையல், . வீட்டுவேலை எல்லாம் நன்றாக செய்வாள். அவளுக்கு ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு வந்திருக்கு. வீட்டுல பெரியவங்கனு யாரும் இல்லை, தெருவுல நல்ல அனுசரணையான குடும்பங்கள் இருக்கு அது தான் எனக்கு தைரியம். அவங்க அவளை பாதுகாப்பா பாத்துக்கறாங்க . பகல்ல ஒரு கார்மெண்ட் கடைல வேலை பாக்குறா. சொந்தமா பாவாடை, ஜாக்கட் ,சுடிதார் ,குழந்தைங்க டிரஸ் நல்லா தைக்கரா , கௌரவமா வண்டி ஓடிக்கிட்டு இருக்கு..மாசம் 5000/-6000/- வரை வருமானம் வருது.
அவளை கரை ஏத்தறது விஷயமா உங்க கிட்ட
அவசரமா பேச உங்களை எதிர்பார்த்து காத்து காத்து ஏமாந்து, சுயநல வேகத்துல நீங்க இன்னும் வேலைக்கு வரல்லன்னு போய்
புகார் சொல்லி , அப்புறம்
நடந்தது தான் உங்களுக்கே தெரியும் . தயவுசெய்து மன்னிச்சிருங்க சார்”.
சரி, உங்களுக்கே இன்னும் கலியாணம் ஆகல்லைனு
கேள்விப்பட்டேன். அதுக்குள்ள தங்கச்சிக்கா ? என்று இழுத்தார் மாடசாமி.
சுத்திவளைச்சு சொந்தம்னு சொல்லிக்கிட்டு 2 வாரம் முன்னால பக்கத்து ஊர் காரங்க என் தங்கச்சிக்கு ஜாதகம் கேட்டு வந்தாங்கனு பக்கத்து வீட்டு ஐயா போன்பேசி சொன்னார். நான் கறாரா சொல்லிட்டேன் ஏதாவது கவர்மெண்ட் வேலை பையனைத்தான் பாக்குறோம். சொந்த பிசினஸ், கொத்தனார், கார்பன்டர், எலக்ட்ரீசியன் இவங்கல்லாம் வராதீங்கன்னு சொல்லி அனுப்பிவிட்டாச்சு..
இனிமேலும் நம்ம சுதாரிக்கலைன்னா பெரியம்மா அத்தை னு சொல்லிக்கிட்டு பரிசம் போட வந்துருவாங்க , அப்புறம் உறவு விட்டுப்போகக்கூடாதுனு அளுது பெரிய சிக்கல் வரும் . எனக்கு தெரிஞ்சு ஒருத்தனுக்கு க்கூட கௌரவமான வேலையோ ,நல்லபழக்கமோ அந்த வட்டாரங்கள்ல இல்ல. முக்கால் வாசியும் குடிகாரங்க
இன்னும் 3 எழுத்து சமாச்சாரம் எல்லாம் உண்டு . கிளியை வளர்த்து
பூனைகிட்ட கொடுக்கவா? அந்த
அர்ஜன்டுல என்ன செய்யறோம் னு புரியாம உங்களை புண் படுத்திட்டேன் சார் என்று
மீண்டும் கண்ணில் நீர் தளும்ப விம்மினாள். .
-என் மனசு ரொம்ப தவிக்குது, உங்கள மாதிரி பெரிய மனுசாள் உதவினா கௌரவமா காலம் தள்ளலாம்
அதுக்கு தான் சார் இப்ப கிட்டத்தட்ட 9, 10 நாளா அலை மோதிக்கிட்டுருக்கேன்."
சரி அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? என்றார் மாடசாமி.
‘நீங்க, தப்பா நெனைக்கலைனா,
அன்னிக்கு குண்டக்கல் லிருந்து சுந்தரமணின்னு ஒருத்தர் உங்களை பார்க்க வந்தாரே
அவரை வேணும்னா என் தங்கச்சிக்கு பாக்கலாமான்னு தோணுது. நீங்க கொஞ்சம் கேட்டு
சொன்னா பெரிய உதவியா இருக்கும்”.
நீங்க குண்டூர் சுப்பிரமணிய சொல்றீங்கனு நெனைக்கிறேன். பையன் நல்லவன் ஆனா
அட்டெண்டர் லெவல் வேலைல இருக்காரே பரவாயில்லையா? மேலும் அவங்க மத்த விவரம் எதுவும் தெரியாது. மிஞ்சி போனா
பஞ்சாபகேசன் சாரை வெச்சுதான் பேச முடியும்.
சரி அந்தப்பையனை ஏன் யோசிக்கிறீங்க? என்றார் மாடசாமி .
"வேற ஒன்னும் இல்ல சார் சேலத்து காரர் னு அன்னக்கி சொன்னீங்க ,சேலம் நா நம்ம பக்கம் ஊர் அதுதான் எனக்கு ஒரு காரணம்.
என்
பார்வையில ரொம்ப கௌரவமான நடத்தையா இருந்தாரு , என் தங்கச்சிக்கு ரொம்பவே பொருத்தமா இருக்கும். எப்படியாவது
உதவி செய்ங்க சார். உங்களுக்கு ரொம்ப புண்ணியமா போகும்" என்று
கையைக்கூப்பினாள் .
ஒரு வினாடி யோசித்தார் மாசா , நாளைக்கு ஒரு இடத்துல போய் பேசுவோம்; இந்த விஷயத்துல பலே கில்லாடி நம்ம நண்பர் ராமசாமி ய வெச்சுகிட்டு முயற்சி பண்ணினா கண்டிப்பா நல்லா முடியும். அதோட அந்த அவரு மனைவி மஹாலக்ஷ்மி மாதிரி . அவங்க ஆசி இருந்தா என்னைக்கும் நல்லா இருக்கலாம்..
நீங்க செக்ஷன் போங்க நான் சில
ஏற்பாடு முடிச்சுட்டு வரேன் அப்புறம் எங்க எப்ப மேற்கொண்டு விவரம் சொல்றேன் , சனி வேண்டாம், ஞாயிறு full இதுதான், காலைலே
போயிருவோம். என்று பிளான் சொன்னார்.
இப்போது சுந்தரி கண்களில் மாடசாமி தெய்வமாய் உயர்ந்தார்.
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment