Friday, June 21, 2024

SALEM SUNDARI-24

 SALEM SUNDARI-24

சேலம் சுந்தரி -24

விசாலாக்ஷிக்கு இனம் புரியாத மகிழ்ச்சியும் , ஒருவித பயமும் சூழ்ந்தது. சின்னவள் அல்லவா? அதுவும் வேறு வீட்டிற்கு போக வேண்டும் , அடிக்கடி அக்காவைப்பார்க்க முடியாது ஏதோ தெலுங்கு பேசற ஊராம், ஆனா அந்த ஆளுங்க எல்லோருமே தமிழ் தான் பேசுனாங்க , பரவால்ல பரவலா சமாளிக்ச்சுரலாம் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டாள். 

மனக்கண்ணில் சுப்பிரமணியை  நினைவு படுத்திப்பார்த்தாள் , ஏதோ நிழலாடியது சரியாக மனதில் பதியவில்லை. அக்கா நல்லா பாத்துக்கடின்னு தான் சொன்னாங்க நான் ரொம்ப ஈஸியா நான் பாத்தாச்சு னு சொல்லிப்புட்டேன் , [இப்ப அந்த ஆள் முகம் கூட சரியா பதியலையே என்று இயல்பான தடுமாற்றத்திற்கு உட்பட்டாள்] . 

100க்கு 96 கேஸ் இப்படித்தான் ஒரு அரை மணி நிகழ்வில் 3 நிமிடம் பார்த்ததை எப்படி நினைவில் கொள்ள முடியும்? அவ்வளவு ஏன்? கண்ணை மூடிக்கொண்டு உங்கள் கணவரையோ மனைவியையோ மனக்கண்ணில் நிறுத்துங்கள் உருவம் அவ்வளவு எளிதாக வந்துவிடுகிறதா என்ன

இந்த முகத்தை மனக்கண்ணுல வேற பார்க்கணுமா என்று கோபம் கொள்ளாதீர்கள். நன்கு தெரிந்த உருவமே எஸ்கேப்  ஆகும் போது , புது முகம் --அப்படித்தான் .

பாவம் விசாலாட்சி இதெல்லாம் இப்ப புரியுமா?.

ஆனால் தனிமையில் இருந்து தன்னையும் வீட்டையும் பார்த்துக்கொண்டு நாலு காசு சம்பாதித்தவள், இது போன்ற புதிய சூழல்களை எளிதாக கையாள்வாள்.  மேலும், கையில் தொழில் வைத்திருக்கிறாள்:  இல்லாவிடில் முதலாளி அம்மா 3 நாள் அக்காவீட்டிற்கு போய் வருகிறேன் என்று விசாலாட்சியின் கோரிக்கைக்கு மறுப்பேதும் சொல்லாமல் அனுமதித்தார் அல்லவா அதுதான் கைத்தொழில் ஒருவருக்கு ஏற்படுத்தித்தரும் "இன்றியமையாத்தன்மை" [indispensability].  எனவே அவள் சிறியவள் ஆயினும், சுப்பிரமணி உள்பட எவரையும் சமாளிப்பாள் . ஏனெனில் அக்கா போல் பேசமாட்டாள். .

எதுவும் பேசாதவரைக் கையாள்வது எளிதல்ல ஏனெனில் அவர் என்ன நினைக்கிறார் என்று யூகிக்கமுடியாதபடி அமைதி காத்து எவரையும் மடக்கி விடுவார்கள்.       

அந்த விசாலாட்சிக்கு மண்டை குடைகிறது.  

அந்த "உமா பி .கே " யார்?  அக்காவை ஏய் நீ சிவகாமி தானே என்று கொக்கிபோட்டு பிடித்தாரே?  அக்காவை கேட்டுவிடுவது என்று தீர்மானித்தாள்

அக்கா உங்களை "சிவகாமி" னு விடாம கேட்டு மடக்கிப்பிடிச்சாங்களே அவங்க யாருக்கா? சேலம் னு வேற சொன்னாங்க ? என்று குடைந்தாள்.

அவங்க நம்மதெருவில தான் இருந்தாங்க., இப்ப யாரும் இல்லை வீடையும் வித்துட்டாங்க என்றார் சுந்தரி. இப்ப அந்த பெரிய வீடு அலுமினிய கம்பெனி சேட்டு வீடு தான் உமா அம்மா வீடு. 

அவங்க அப்பா பெரிய பதவில இருந்தவர். உமா ம்மாவுக்கு 1 அண்ணன் , 1 தம்பி , எல்லாம் நல்லா படிச்சவங்க. இந்த அக்கா கலியாணத்துக்கு அப்புறம் 3, 4 வருஷத்துல உமா ம்மாவுடைய தாயார் இறந்துட்டாங்க.. அண்ணன் தம்பி வெளிநாட்டுல வேலை , பெரியவர் மகன்களோட போய்ட்டாரு . 

அதோட நம்ம தெருவே செத்துப்போச்சும்மா. 

சாப்பாடு , உதவி எல்லாம் கிடைக்கும்நம்ப அம்மா அவங்க வீட்டுல வேலை செஞ்சாங்க , அதுனால நான் போவேன் என்னைத்தெரியும்   , பட்டாசு, துணி மணி சாப்பாடு , தீபாவளி பலகாரம் எல்லாம் நல்லா குடுப்பாங்க. 

அதுனால நான் செலவுக்கு கஷ்டமில்லாம  மேல மேல படிச்சேன்.. அந்த குடும்பம் இல்லாம ஆனதும் அம்மாவும் தளர்ந்து சோர்ந்துட்டாங்க; நம்மளை கரை ஏத்தணும் னா அரசாங்க வேலை தான் சரிப்படும் னு ரொம்ப உழைச்சு வேலைக்கும் வந்துட்டேன். நம்ப அம்மா வேற இறந்துட்டாங்க

நீ வீட்டு வேலை டெய்லரிங்  டிசைன் , பூவேலை செய்யறதால உனக்கு கார்மெண்ட் கடைல முதலாளி அம்மா வேலை கொடுத்தாங்க, தெருவுக்காரங்க உன்னை பார்த்துக்கறாங்க அதுனால தான் கொஞ்சம் தைரியமா வெளியூரில் வந்து வேலை பாக்கறேன். எங்க ஆபீஸ் ஆளுங்கல்லாம்   ரொம்ப திறமை சாலிங்க , ஆஞ்சநேயர் நம்மள நல்ல காப்பாத்துறாரு. இதுதான் மா நம்ம வீட்டு கதை. எல்லாம் உமா அம்மாவுக்கு தெரியும் 

அவங்க இத்தனை வருஷம் ஆனாலும் 'சிவகாமினு சொல்லி கேட்டாங்க பாரு. அவங்க கேக்கலைன்னா எனக்கும் தெரிஞ்சிருதுக்காது --ஹூம் என்று பெருமூச்செறிந்தாள்

அப்படீன்னா நான் அந்த அம்மா வீட்டுல தான் போய் இருக்கணுமா ? என்றாள் விசாலாட்சி.

"இருக்காது, வீடியோ பேசறதுக்கு எல்லாரும் உமா அம்மா வீட்டுக்கு போயிருந்துருப்பாங்க.என்று விளக்கினாள் சுந்தரி.. 

அந்தப்பையன் நல்லவன் கவலைப்படாத , உன்னை நல்லா பாத்துக்குவான் னு தான் எல்லாருமே சொல்றாங்க என்று தங்கைக்கு தைரியம் சொன்னாள் சுந்தரி.

உள்ளூர மகிழ்வும் நிம்மதியும் கொண்டாள் விசாலாட்சி. 

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

PATTU IYENGAR- LYRICIST

 PATTU IYENGAR- LYRICIST  பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார்   என்னது பட்டு ஐயங்காரா ?   அவர் என்ன பட்டு வ்யாபாரியா அல்லது எல்...