Friday, June 28, 2024

SALEM SUNDARI -26

SALEM SUNDARI -26

சேலம் சுந்தரி-26

மாலை 5.05 மெல்ல அலுவல் முடிந்து கீழிறங்கி முன் வாயில் வழியே சுந்தரி  வெளியேறி ராமசாமி -மாடசாமி உதவியுடன் கல்யாண மண்டபம் பார்க்க போக வேண்டும்.

பின்னால் ஏதோ இடைஞ்சல் -- என்றுணர்ந்த கழுகு திரும்பிப்பார்க்க அங்கே சுப்புரெத்தினம் நோட்டம் பார்த்தபடி வந்துகொண்டிருந்தார்.

“அவரவர் தற்செயலாக போவது போல் வெவ்வேறு திசையில் போவோம் , இந்த குடைச்சல் ஸ்கூட்டரில் போனதும் நான் நிற்கும் இடத்திற்கு தனித்தனியே வாருங்கள் என்று சொல்லி கையை ஆட்டிவிட்டு கலைந்து போய் மர நிழலில் நின்ற ரா சா , பஸ்ஸில் யாருடனோ பேசிக்கொண்டே சுப்புரெத்தினத்தை கண்காணித்து விட்டு, அவர் காஜாமலை ரோட்டில் போனபின், வாங்க என்று கையசைக்க மாடசாமியும் சுந்தரியும் எதிர் பிளாட்பாரம் நோக்கி விரைந்து வலது புறம் திரும்ப ரயில் கல்யாணமண்டபம் திருச்சி என்ற வளைவுப்பலகை வரவேற்றது..

ராமசாமியை, கணபதி வரவேற்று உள்ளே அழைத்துச்சென்று காட்டினார். மண்டபம் புதுப்பிக்கப்பட்டு,  பழைய ஆஸ்பெஸ்டாஸ் கூரை க்கு பதில் கான்க்ரீட் , உள்ளே  பான்,  லைட் , எல்லாம் புதிது. சுமார் 250-300 பேர் அமரவும் அதே போல் மாடியில் 125 பேர் ஒரே நேரத்தில் சாப்பிடவும் ஹால்.

சார் இது மினி ஹால் -55 -60 பேர் பங்குகொள்ளும் சிறிய நிகழ்ச்சிகள் -காது குத்து, பூணூல், வளைகாப்பு செய்ய போதுமானது. கிச்சன் தனித்தனியே; பாத்திரம் வாடகை தனி , கரண்ட் பில் ரீடிங் படி கட்டவேண்டும் . என்று ஒப்பித்தார் கணபதி.

வாடகை? என்றார் ராமசாமி  பெரியஹால் 14000/- [36 மணி நேரம் ] மினிஹால் 4000/-[ 24 மணி நேரம்], 5500/-[36 மணி நேரம்] ;எதுவானாலும் அட்வான்ஸ்  3000/- ரயில்வே ஊழியர்களுக்கு மட்டுமே இடம் கிடைக்கும்.

மாடசாமிக்கு முழு திருப்தி;

சுந்தரிக்கு --என்ன செய்வது? புரியவில்லை.

ராமசாமி சொன்னார் "அம்மா மினி ஹால் ஒரு 4 தேதிகள் [36 மணி நேர terms ]புக் பண்ணிடுவோம். “ஆனால் எந்த தேதி சார் என்றாள் சுந்தரி .

உனக்கு என்ன-- யோசிக்கவே வராதா.? எந்த மாசம் கல்யாணம் வெச்சுக்க முடியும் ?           2,   21/2  மாசம் டயம் வேணும் சார்.

இவ்வளவு தானே டேய்கணபதி ஆகஸ்ட் மாசம் 15 தேதிக்கு மேலே முகூர்த்தம் என்னன்ன இருக்கு  பாரு என்றார் ரா சா.

அவன் ஒரு 5 தேதிகள் 17 லிருந்து 30க்குள்  சொன்னான் . சரி- 2, 3, 4 வது முகூர்த்தங்களை எங்க பேர்ல பிளாக் பண்ணி வை சரியா முஹூர்த்தம் பிக்ஸ் ஆனதும் மத்த 2 முகூர்த்தம் ரிலீஸ் பண்ணி யாருக்காவது குடு. என்று சொல்லி

சுந்தரியை பார்த்தார். ஏம்மா ATM கார்ட் இருக்கா? டக் னு 3000/- எடுத்து அட்வான்ஸ் குடுத்து பில் போட்டு வாங்கிக்க.

அவ்வளவு தான்  மண்டபம் பிக்ஸ்ட் என்றார்.

சார் எந்த ஹால் புக் பண்ணட்டும் என்றாள் .

“கூட்டம் ஜாஸ்தி வராது னு சொன்னஞாபகம் அதுனால மினிஹால் போதும். .நமக்கு, 30-50க்குள்ள தான் வருவாங்க அதுனால மினிஹால் போதும் சுந்தரி என்று முதல் முதலாக பெயரை ச்சொல்லி பேசினார் மாடசாமி. சுந்தரிக்கு ஒரே மகிழ்ச்சி மாடசாமி FORMAL ஆக பேசாமல் இயல்பாக பேர்சொன்னது ரொம்ப சந்தோஷம் மனதில்.. ரொம்ப நன்றி சார் என்று இருவருக்கும் கை கூப்பி வணக்கம் தெரிவித்தாள்.

மத்த ஏற்பாடெல்லாம்? என்றாள் சுந்தரி

எவ்வளவு பேர் னு தெரிஞ்சா . தான் சமையல், தாம்பூலம், சீர் வகை எல்லாம் பிளான் பண்ணிடலாம்.

வீக் எண்டு ஸ்ரீரங்கம் வாங்கோ என்னென்ன முடியுமோ அனாவசிய செலவு ஆடம்பரம் எதுவும் இல்லாம ஆனா முக்கியமான எதையும் விட்டுடாம கல்யாணத்தை செஞ்சுடலாம். பி கே சார் வருவார் , ஆபிஸ் காரங்க ஒரு 10-15 வருவாங்க , அதுனால நல்ல சமையல் ஏற்பாடு செய்யணும் .

 [திடீரென்று கவலையுடன் N V   எல்லாம் என்னால ஏற்பாடு செய்ய முடியாது என்று ராமசாமி வாழ்விலேயே முதன் முதலில் நடுங்கினார்].

ஐயோ அதெல்லாம் கிடையாது சார் அதுவும் கல்யாணத்துல அதெல்லாம் செய்யவே மாட்டோம் ஏன்னா எவ்வளவு போட்டாலும் தின்னுட்டு சண்டை இழுத்துவிட்டுருவானுங்க. உயர் அதிகாரிங்கல்லாம் வருவாங்க கௌரமா நல்ல சாப்பாடு வெஜிடேரியன் போதும் சார்.

நீங்க, ஐயர் குக் கூட ஏற்பாடு பண்ணிக்குடுங்க, போதும் சார் என்றாள் சுந்தரி.

அவரை என்ன நெனச்சுக்கிட்டுருக்கீங்க? இறங்கி வேலை செஞ்சார் னா, எவனும் மூச்சு காட்ட முடியாது. இதெல்லாம் அவர் கிட்டயும் அவங்க மாமி கிட்டயும் விட்டுருங்க- பின்னி எடுத்துப்புடுவாங்க. என்று மாடசாமி மிகுந்த ஊக்கம் தந்தார்.

பாக்கி எல்லாம் உக்காந்து பேசி சரியா செய்யணும் அதுனால மாடசாமி ஏதாவது -ன்னா லீவு நாள் வீட்டுக்கு வாங்க. என்றார் ராமசாமி

மூவரும் வணக்கம் சொல்லி கிளம்பும் போது ATM என்று ராமசாமி சொல்லி நினைவுபடுத்தி அவ்வாறே சுந்தரி செய்து அட்வான்ஸ் கொடுத்து பில் வாங்கிக்கொண்டாள் 

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

Teacher –Beyond your Image- 3

  Teacher –Beyond your Image- 3 ஆசியர் -- உங்கள்   பிம்பத்தை தாண்டி -3 ஆசிரியயப்பணியில் கையால் ஆகாதவர்களை , அவர்களே தங்களை மாற்றிக...