Thursday, June 27, 2024

S M SUBBIAH NAIDU-3

 S M SUBBIAH NAIDU-3

SM சுப்பையா நாயுடு -3

ழகின் காலடியில் [சினேகிதி-1970     ] வாலி, எஸ் எம் எஸ் , டி எம் எஸ்

நாயகன் ஜெமினி கணேசனுக்கு டி எம் எஸ் வழங்கியுள்ள போதைப்பாடல் . அன்றைய சூழலில் இதை விடவும் வலிமையான போதைப்பாடல்கள் திரையில் ஏராளம் எனவே இப்பாடல் பெரிதும் பேசப்படவில்லை . எனினும் அந்நாளைய பொது வெளிகளில் மைக் செட் குழுவினர் ஒலி பரப்பி விளம்பரம் செய்து தங்கள் இருப்பையும் தொழிலையும் நிலைப்படுத்திக்கொண்டனர்.. இசையில் போதையின் அடையாளக்கூறுகள் வெளிப்படுவதைக்காணலாம் .

இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=azhagun+kaalaqdiyil+video+song+download&newwindow=1&sca_esv=79ff9b4c6b5b9f67&sca_upv=1&sxsrf=ADLYWIItuLvP4spBdtXNshfMj4XR53fcPw%3A1719286196513&ei=tD azhagin kaaladiyil SNEHITHI VAALI SMS TMS

நாளைக்கு நேரமில்லை [5 லட்சம் - 1969 ] கண்ணதாசன், எஸ்  எம் எஸ், எல் ஆர் ஈஸ்வரி

ஒரு க்ளப் டான்ஸ் வகைப்பாடல். அதற்கான அனைத்து இசைக்கூறுகளும் பாடலில் விரவியுள்ளன . இவற்றை வழங்கும் ஆஸ்தானக்குரல் எல் ஆர் ஈஸ்வரி . கேட்க வேண்டுமா. நடிகை சைலஸ்ரீ . வெண்ணிற ஆடையில் ஜெயலலிதாவின் தோழியாக நடத்திருந்த ஆஷா என்ற பெண் தான் இதில் நடன மங்கை.

 பாடலுக்கு இணைப்பு

https://www.youtube.com/watch?v=3pi7FKjqpDw

நான் பாடிய முதல் பாட்டு [5 லட்சம் -1969]      எஸ் எம் எஸ், டி எம் எஸ்

முந்தைய பாடல் இடம் பெற்ற அதே படம். இப்போது ஜெமினி கணேசன் காதலி குறித்து சிலாகித்துப்பாடிய காட்சி டி எம் எஸ் வெகு நேர்த்தியாக ஜெமினி கணேசனுக்கு ஏற்ப பாடியிருப்பதை கவனிக்கலாம்.  கவிதை நயம் பொருந்திய பாடல் . கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=5+lakshan+tamil+movie+naan+paadiya+mudhal+paattu+song+download&newwindow=1&sca_esv=19e1b63181baf887&sxsrf=ACQVn0_S9tyUXWUqRddiVSBGUji6ePYwXg% 5 LAKSHAM

 

வளரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. முதல் இரண்டு பாடல்களும் ஞாபகமில்லை. மூன்றாவது பாடல் மிக நேர்த்தியானது. நான் ரசிப்பது.

    ReplyDelete

GOOD- BUT LESS KNOWN -4

  GOOD- BUT LESS KNOWN -4 நல்ல ஆனால் அறியப்படாதவை-4 பல நல்ல பாடல்கள் இடம் பெற்ற படம் "வாழ்க்கை வாழ்வதற்கே"[1964] மாறுபட்ட கத...