Tuesday, June 25, 2024

LIE-2

 LIE-2

பொய் -2

பொய் என்பது பிறவி குணம் அல்ல. நாளடைவில் அது மனிதர்களை பீடிக்கும் ஒரு மன நோய .

 இதை, ஏன் மன நோய் என்கிறோம். பொய் சொல்லுதல் ஒரு பழக்கம் / சிலருக்கு தேவை

பொய் 3, 4 வயதிலிருந்தே துவங்கக்கூடும். பொய் ஒரு தற்காப்பு ஆயுதம் என்ற அளவில் துவங்கி நாளடைவில் பெரும் சாம்ராஜ்ய அளவிற்கு விரிவடைந்து, சிலர் புளுகு மூட்டை என்றே பார்க்கப்படுகின்றனர் .  

ஆரம்ப நிலையில்  பொய் ஒரு வித அச்ச உணர்வினால் விதைக்கப்படுகிறது. அதாவது சில பாடங்களில் மார்க் குறைவு என்றால் -அண்ணன்மார்களுக்கு விழும் அடியை பார்த்து தம்பி யோ தங்

அடியின் வலிமைக்கும் வலிக்கும் பயந்து இன்னும் மார்க் தரவில்லை என்று புளுக ஆரம்பிக்கும் குழந்தை.. விவரம் தெரியாத வயதில் [LKG ] .  100க்கு 13 வாங்கி இருந்தாலும் ஒளிவு மறைவின்றி சிலேட்டு பலகை [இப்போதெல்லாம் நோட் ] இல் உள்ள மார்க்கை காட்டி இயல்பாக இருந்த குழந்தை 2 ம் வகுப்பு வந்தவுடனே,      இந்த []லை யில் இறங்குகிறது. ஏனெனில் அன்றைய அன்பும் அரவணைப்பும் மங்கி, பட்டார் பட்டார் என்று ஆளாளுக்கு குழந்தையை சாத்துகிறார்கள் எனவே ஆரம்பத்தில் மார்க் தரவில்லை, பின்னர் பொய் மார்க் [இங்கிலிஷ் 88, தமிழ்- 76, கணக்கு 66 சயன்ஸ் 69 என்று அள்ளி விடும்

ஒரு நாளும் அந்த பேப்பரை பிறர் கண்ணில் காட்டாது.

ஒரு பலவீனமான தருணத்தில் அம்மாவிடம் PROGRESS REPORT இல் கையெழுத்து வாங்கி ஆசிரியரிடம் கொடுத்துவிடும் . அப்பாடா இப்போது தப்பித்தாயிற்று பின்னர் பார்த்துக்கொள்ளலாம்..

அம்மா ஏன் கையெழுத்து இடுகிறார்?.

கணவர் அனைவரையும் தாங்குவார் -குழந்தை மார்க் குறைந்ததற்கு.. தாய்க்கும் உண்டு வாய் மொழி வசவும் கை வினை அறையும்.

எந்த அம்மாவும்  -குழந்தைகள் தாக்கப்படுவதை விரும்புவது இல்லை. எனவே  பின்னர் சரி செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் இது போன்ற தருணங்களில் துணை நிற்க, மெல்ல பொய் என்பது அன்றாட நிகழ்வாகி விடுகிறது

இதற்கான சிறிய தீர்வு தாய்மார்கள் செய்ய முடியும்.. அது போல் குறைந்த மார்க் சம்பவங்களில், முதல் நிகழ்வில் கையெழுப்போட மாட்டேன் அப்பாவிற்கு தெரிந்தால், என்னை வீட்டை விட்டு துரத்தி விடுவார் , உங்களுக்கு அடி  உதை எல்லாம் . செம்மையா விழும் ;மரியாதையா அடுத்த பரிட்சையில் நல்ல மார்க் வாங்கறேன் னு  பூஜை அறையில் போய் பிரார்த்தனை செய்யென்று 4 நாளைக்கு அலைக்கழித்தால் , பொய் சொல்லாமல் உண்மையை சொல்லி தீர்வு கிடைக்கும், அது எளிது  என்று உணர்த்துங்கள்.

தகப்பனும் தவறு செய்கிறார்

PROGRESS REPORT வரும் வரை குழந்தைகளின் கல்வி பற்றி யோசிப்பதில்லை. PR வந்ததும் உதை பிய்த்துவிடுகிறார். நல்வழிப்படுத்த எளிய வழி ஆரம்ப கட்டத்தில் குழந்தையுடன் தினமும் 1/2 மணி யாவது செலவிட்டு மிக முக்கியமான செயல் முறைகளை சொல்லிக்கொடுத்து, எழுதச்சொல்லி மேற்பார்வை செய்தால் அடிப்படைகளை முறையாகப்பயின்று பெரும் குறைபாடுகள் இன்றி பயில்வது எளிதாகும்.இதை செய்யாமல் உதை தான் ஒரே வழி என்று கிளம்ப ஒரு பிழை 2 ஆக வடிவெடுக்கிறது. 1 கல்வியில் பற்றாக்   குறை, 2 பொய் சொல்லுதல்  இது மென்மேலும் விரிவாக்கம் பெறும்எடுத்ததற்கெல்லாம் பொய்

வீட்டில் காசு கேட்டால் கணக்கில் எவ்வளவு என்று பொங்கி "சாத்துமுறை " நடைபெற்று புறப்பாடு துவங்குகிறது [ஆம் வீட்டை விட்டு ஓட திட்டம் இடுகிறான் பையன். பெண் சொல்லாமல் கொள்ளாமல் வகுப்புத்தோழியின் வீட்டில் இரண்டொரு  தினம் அடைக்கலம் கொண்டு  பின்னர் பள்ளியில்   இருந்து தாயார் மீட்டு வருகிறாள் பெண்ணை].

எனவே பொய் என்பது தப்பிக்கும் உத்தியாக துவங்கி, பிறரை ஏமாற்றும் அளவிற்கு விஸ்வரூபம் கொள்ள வீட்டின் சூழலே தளம் அமைத்து தருகிறது. எனவேஆரம்ப கட்ட  பிழைகளைக்களையை ..   உடல் ரீதியான துன்புறுத்தல் தீர்வாகாது. மெல்ல பேசி எண்ணத்தில் நம்பிக்கையை விதைத்தால் பலன் உண்டு. அவசரம் வேண்டாம் . பெற்றோர் இதை உணர்தல் நலம்

வளரும்

நன்றி  அன்பன் ராமன்    

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...