Tuesday, June 25, 2024

TM SOUNDARARAJAN -10

 TM SOUNDARARAJAN -10

டி எம் சௌந்தரராஜன்-10

கம்பீரக்குரலுக்கு நன்கு அறியப்பட்ட டி எம் எஸ் அவர்கள் [யார் அந்த நிலவு -சாந்தி] மென் குரலில் பாடுவாரா என பேசியோரை வியக்க வைத்தார். சுமார் 4 ஆண்டுகள் கழிந்த பின்னர், மீண்டும் ஒரு மென்குரல் பாடல் அதுவும் டூயட் வகை.

"தேடி வரும் தெய்வ சுகம் " [நிமிர்ந்து நில் -1969] ரவிச்சந்திரன்-பாரதி பங்களித்த படம். இந்த பாடல்  "தேடி வரும் தெய்வ சுகம்" இரு மாறுபட்ட வேக நடைகளில்  பதிவிட்டுள்ளார்கள். அடிப்படையில் பாடல் அமைப்பு என்னவோ ஒன்று தான். ஆனால் தாள ஜாதியில் ஒன்று புயல் வேகம் மற்றது   சற்று நிதானம்.. ஆனால் இரண்டும் கேட்க பரவசமூட்டும் வகையின. மெல்லிசை மன்னர் விஸ்வாநரகனின் முத்திரையாக நொடிப்பொழுதும் சுணக்கம் இன்றி ஒன்றை ஒன்று துரத்திவரும் இசைக்கருவிகளின் பந்தயம் என்றே சொல்லலாம்.. அவ்வளவு நேர்த்தியான நுணுக்கமாக வாசிப்பு -கிட்டார் , குழல், வயலின் கூட்டம் என்று ஆர்ப்பரித்த அமைப்பு. பொதுவாக, டிரம் .பல நேரங்களில் துணை கருவியாக ஒலிக்கும். ஆனால் இந்த விரைவுப்பதிப்பு பாடலில்தலைமை ஏற்றிருக்கும்   டரம்     அசுர கதியில் பயணித்தாலும் soft touch வாசிப்பில் பிரமிப்பை ஏற்படுத்துவதை கவனியுங்கள். இவ்வளவு துரிதமாக டிரம் வாசிப்பு பல பாடல்களில் இல்லை. நோயல் க்ராண்ட் அவர்கள் மென் வருடல் வாசிப்பில் பெரும் வேள்வியே நிகழ்த்தியுள்ளார்.

 சில பகுதிகளில் போங்கோ வும் ஒலிக்கிறது [கலைஞர் யார் என்று தெரியவில்லை] எனினும் அற்புத ஜோகள் டி ட்ரம் -போங்கோ -கிட்டார் -குழல் மற்றும் ரவிச்சந்திரன் -பாரதி. எப்போதும் போல், நடனம் வெகு சிறப்பு. பாரதியின் நளின நடனம், மென் பாவங்கள் மற்றும் பிறழாத ஆட்டம் -சொல்லிக்கொண்டே போகலாம் மொத்தத்தில் ஒரு ஹைடெக் விருந்து  

கவனமாக ப்பாருங்கள் இரு வேறு பாடல்கள் ஒரே பல்லவியில் துவங்கி, வெவ்வேறு சொற்களில் பயணித்து, வேகத்திலும் வேறுபாடு காட்டிய தேடி வரும் பாடல் ஒரு இசைக்களஞ்சியம் . அடிப்படை அமைப்பு ஒன்றே எனினும் வேகத்திலும் பாய்ந்து முன்னேறுவதிலும் இரு பாடல்களும் வேறுபட்டு அமைந்துள்ளன. பாரதியின் முக பாவத்திலும் கிண்டல் வகை நடிப்பிலும் இரு பாடல்களுக்கு இடையே வேறு பாடு. முன்னரே சொன்னது போல அசுரர் வேகமெடுக்கும் ட்ரம் வாசிப்பு, குழல், அக்கார்டியன் சந்திப்புகள் என எண்ணற்ற மாறுபாடுகள் இரண்டையும் இணைப்பில் காணலாம்

Link: Youtube-movie world=  fast pacrd song

         Youtube Bravo musk = slower paced

https://www.google.com/search?q=thedivarum+deiva+sugam+video+song&oq=thedivarum+deiva+sugam+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIHCAEQIRigATIHCAIQIRigAdIBCTI1NDMyajBqNKgCALACAQ

ஒத்தையடிப்பாதையிலே [நிமிர்ந்து நில் -1968] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ் , பி சுசீலா

நாகரிக இளம் ஜோடியாக வந்த ரவிச்சந்திரன்-பாரதி இருவரும் கிராமத்து ஜோடியாய் வந்து நீரோடை அருகில் தெம்மாங்கு பாடி மகிழும் காட்சி.

ஒரே படத்தில் மாறுபட்ட பங்களிப்பு. தமிழ்திரையின் வரலாறு அறியாமல் ஏதேதோ பேசுவதை ரசிக்க முடியவில்லை . ஆம் இது முற்றிலும் தெம்மாங்கு வகை. இசை. பாடலின் அமைப்பு சொற்கள், நடனம் உடை என்று அனைத்தும் கிராமீய மணம் கமழ்வது புரியாமலா  பேசுகின்றனர்? ஏதோ கிராமிய இசை 19809ல் வந்தது போல அள்ளி விடுகின்றனர். தெம்மாங்கின் ஆலாபனை மேலோங்கி நிற்பது இப்பாடலின் சிறப்பு. அதே போல பாரதியு ம் குதித்து நடனம் புரிந்து காட்சி வலுப்பெற்றுள்ளது. அனைத்து சொற்களையும் கவனியுங்கள் அத்த மவ , ஓரப்பார்வை பார்த்தாலும் ஒன்ன பார்த்தேனோ , மனசுக்குள்ளே இருந்தாலும் வெளியில் சொன்னேனோ, பாய் விரிச்சு படுத்தாலும் தூக்கம் புடிக்கலே என்று காட்சிக்கேற்ற மொழியாடல் , கருவிகளும் கூட மண் மணம் ஒற்றி பயணிப்பதை காணலாம் . பாடலுக்கு இணைப்பு இதோ

https://www.google.com/search?q=othaiyadi+pathayila+NIMIRNDHU+NIL+MOVIOE++video+song+download&newwindow=1&sca_esv=30c453807a2cab8d&sca_upv=1&sxsrf=ADLYWIJZ1arq-ZJHvOefh-WHnpKuYr YOU TUBE INIYA GANA

பார்வை யுவ ராணி கண்ணோவியம் [சிவந்த மண் -1969] கண்ணதாசன் எம் எஸ் விஸ்வநாதன் டி எம்.எஸ்

ஐரோப்பாவில் எடுக்கப்பட்ட தமிழ் படம் .ஆயினும் பாடல்முற்றிலும் இலக்கிய நயம் கொண்ட சொல்லாடலில் . நாயகிக்கு வாயசைக்கும் வேலை இல்லை . முற்றிலும் டி எம் எஸ் அவர்களின் குரலில் வந்த பாடல்.. ஆழ்ந்த கர்நாடக இசைக்கூறுகள் மிக்க பாடல். சரியான பயிற்சி இன்றி இந்தப்பாடலை பாட முடியாது. அவ்வளவு ஏன்? மேடைக்கச்சேரிகளில்/ TV போட்டிகளிலும் கூட எவரும் முயல்வதில்லை -காரணம் பாடல் அமைப்பு அப்படி..  நல்ல தரமான பாடல் கேட்டு மகிழ இணைப்பு இதோ   

https://www.google.com/search?q=paarvai+uva+raani+kannoviyam+video+song+download&newwindow=1&sca_esv=33f9500253f90573&sca_upv=1&sxsrf=ADLYWIJVCBf_ACLH0Dc8retScXD_-8wShQ%3A17191188

வளரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SALEM SUNDARI -26

SALEM SUNDARI -26 சேலம் சுந்தரி -26 மாலை 5.05 மெல்ல அலுவல் முடிந்து கீழிறங்கி முன் வாயில் வழியே சுந்தரி   வெளியேறி ராமசாமி - ம...