Monday, June 24, 2024

SALEM SUNDARI-25

 SALEM SUNDARI-25 

 சேலம் சுந்தரி -25

சரி,- ராமசாமி சார் சொன்னபடி திருச்சியில் கல்யாணம் என்று சொல்லிவிட்டேனே, என்ன, எப்படி எதுவும் தெரியாதே, என்ன செய்வேன் என்று உள்ளூர கலங்கினாள்.

சொல்லி வைத்தார் போல் ராமாசாமி இடமிருந்து போன் சுந்தரிக்கு . "கல்யாணத்தைப்பத்தி கவலை வேண்டாம் ஈசியா ரெடி பண்ணிடலாம். தங்கை எப்ப ஊருக்கு போகணும்.?

ராத்திரிக்கு அனுப்பணு ம்  சார் என்றாள் .

ராத்திரில வேண்டாம் நான் மாடசாமிட்ட சொன்னேன் அவன் காலை 5 மணிக்கு கன்னியாகுமரி -ஓசூர்     வண்டி நம்ப பையன் மூர்த்தி ட்யூட்டி பாக்கிறான் , ஓபன் டிக்கெட் எடுத்து அனுப்பலாம்னு சொல்லிருக்கான். மரியாதைக்கு, ஒரு வார்த்தை நீ கேட்டுட்டா எப்ப, எங்கே சின்னவளை ரயில் அனுப்பணு ம் னு சொல்லுவான். அது படி செய்  என்றார்.

தயங்கியபடி பேசிய சுந்தரிக்கு மாடசாமி சொன்னார். ராத்திரி சாப்பாடு முடிச்சு 10 மணிக்கு மேல ஜங்க்ஷன் வாங்க, நான் உங்க ரெண்டு பேரையும் பத்திரமா வெயிட்டிங் ரூம்ல தங்க வெக்கறேன். நல்லா தூங்குங்க. காலைல 4.30க்கு நான் வந்து டிக்கெட் / TTE எல்லாம் பாத்துக்கறேன். 9.00 மணிக்கு சேலம் போய்டும். தங்கச்சி, தானே வீட்டுக்கோ கடைக்கோ போயிரும் னு நினைக்கறேன் .அது தான் சரியா இருக்கும் ,நைட்ல எந்த ட்ரெயினோ பஸ் ஸோ  வேண்டாம் என்றார் மாடசாமி.. இவர்களை இப்போதாவது புரிந்துகொண்டேனே என்று கண் கலங்கினாள்.

ஏதோ ஒரு அவசரத்தில், மாடசாமி மீது புகார் தெரிவித்துவிட்டு, தனது செயல் மிகவும் கொடூரம் என்று உணர்ந்த நிலையில், தொடர்ந்து சுந்தரி புலம்பித்தவிக்கிறாள். இவளின் துயரை வாழ்நாளில் மங்கிவிடாதபடி பசுமையாக காப்பாற்றி வருவது மாடசாமியின் உத்தி தான்.. ஆம், அவர் இவளைக்கடிந்துகொள்ளவோ, என்னை யார் என்று நினைத்தாய் போன்ற வீர வசனங்களோ பேசாமல் அமைதியும் பண்பும் காத்ததோடல்லாமல், ஒவ்வொரு நிலையிலும் அவர் [மாடசாமியின்] கரம் நீண்டது  உதவிட மட்டுமே , உதை  விட அல்ல என்பது சுந்தரியை அனல் போல் வாட்டுகிறது.

இறைவன் தான் இந்த அனலின் வெம்மைக்கு மாற்று செய்ய இயலும் [அதுதான் அவ்வப்போது ஆஞ்சநேயா காப்பாற்று என்ற சுந்தரியின் இடைவிடாத பிரார்த்தனை அனுமனுக்கு ]

.அம்மையார் செய்ததற்கு- அனுமன் பொறுப்பாவானா? என்பதை, ஏற்கனவே அனுமன் உணர்த்திவிட்டாரே. ஆயினும் மனிதர்களால் வேறென்ன செய்ய முடியும் ?  அந்த துன்பத்திற்கு மென்மேலும் நெய் ஊற்றி கொழுந்துவிட்டு எரியவைக்கும் ராமசாமி யின் பரோபகாரம், அம்புஜம் மாமியின் அன்னை போன்ற அரவணைப்பு, உணவு உபசரிப்பு என்று மாறி மாறி நிகழ சுந்தரி செய்வதறியாமல் " ஆஞ்சநேயா காப்பாற்று என்று அவ்வப்போது அழுகிறாள்.

உதவி செய்தாலே உபத்திரவம் தான் என்பதை ராமகாதையின் ஆஞ்சநேயன் அறியாதவரா என்ன? இன்பத்தில் துன்பம், துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி என்று கண்ணதாசன் சொன்னது          சுந்தரிக்கே என்பது போல [மயங்கி விழுந்து துன்பத்தினுள் மருத்துவம் கிடைத்த இன்பம்,  இவளுக்கு அரை விழப்போகிறது என்ற சு. ரெ வின்   கற்பனை இன்பத்தில் மண் அள்ளிப்போட்டு மருத்துவ உதவி செய்த மாடசாமி [வழங்கியது இன்பத்தில் துன்பம் [சு ரெ வுக்கு ].  

சுந்தரி நினைக்கிறாள், சுப்பு ரெத்தினம் பற்றி இது போல கம்ப்ளெயிண்ட் சொல்லியிருந்தா அவரே நல்ல திட்டிருப்பாரு அது அன்னயோட முடிஞ்சிருக்கும் . இவரு ஒரு வார்த்தைகூட தரக்குறைவா பேச மாட்டேங்குறாரு; கோவத்துல கூட போடி, வாடி னு பேசாம போங்க வாங்க னு தான் சொல்றாரு, உண்மையிலே இந்த மாடசாமி பெரிய ஆளுமை தான் , சொன்னபடி தங்கச்சியை பத்திரமா ரயில் ஏத்திவிட்டுட்டாரே அதுவும் 4.15 மணிக்கு வந்து டிக்கட் போட்டு , TTE மூர்த்தி சார் கிட்ட சொல்லி அவளை நம்பிக்கையா அனுப்பினார் சொந்த அண்ணன் இருந்தா  கூட செய்வார்களா ? என்று துடிக்கிறாள் சுந்தரி.   

வீட்டிற்கு வந்து சிறிது நேரம் உறங்கி விழித்தாள் -மணி 8.55. ஐயோ என்று வாரி சுருட்டிக்கிளம்பி பல் துலக்கி, குளிக்க கிளம்பும் போது போன்

விசாலாட்சி. “அக்கா ஊருக்கு வந்துட்டேன் ; பக்கத்து ஓட்டல் சாப்புட்டுட்டு வேலைக்கு போயிட்டு ராத்திரிக்கு பேசறேன் அக்கா , என்றாள்  தங்கை.

விறுவி\று வென கிளம்பி 9.40க்கு ஆபிஸ் சென்றாள். சரி காண்டீனில் எதையாவது சாப்பிடலாம் என்று போனால் அங்கே ராமசாமி/ மாடசாமி பேசிக்கொண்டிருக்க, கை  கூப்பி நின்றாள் சுந்தரி .

பதில் வணக்கம் சொன்னதும் எங்கோ திரும்பிய ராமசாமி டேய் கணபதி என்று கூப்பிட்டார் 25-30 வயது ஆசாமி காலை விந்தி விந்தி நடந்து வர, ரா சா "என்ன ரெடியாருச்சா“?  என்றார்.

 அவன் விழிக்க "டேய் கல்யாண மண்டபம் ரெடியா னு கேட்டா, இப்பிடி முழிக்கிற? வீட்டுலேந்து வரியா-- இல்ல டாஸ்மாக் லேந்து வரியா?  ஐயோ இல்ல சார் என்றான் கணபதி.

 இன்னும் 1 வாரத்துல ரெடியாயிரும் சார் என்றான்.

சுந்தரி உனக்கு தான் கல்யாண மண்டபம் பேசறேன். பாக்கணும் னா சீக்கிரம் பாத்து அட்வான்ஸ் போட்டுட்டா பத்திரிகை அடிச்ச்சுடலாம்".

லெட்ஜ்ர் கொண்டுவா என்றார் கணபதியிடம் . இங்கயே மாடில இருக்கு சார் , கேஷியர் செக் பண்ணி அப்புறம் தான் பில் போடுவார். அதுக்காக இங்க இருக்கு . நீங்க தேதி சொல்லுங்க நான் பிளாக் பண்ணி வெச்சுடறேன். சின்ன மண்டபத்துக்கு அவ்வளவா டிமாண்ட் வரா து 55-60 பேர் தான் கபாஸிட்டி   , உங்களுக்கு தேவையை பொறுத்து நான் ரிசெர்வ் பண்ணிடறேன் .                           

சரி சாயங்காலம் வரோம் நீ அங்கேயே இரு என்று கணபதியை கறாராக சொல்லி விட்டு 5.00 மணிக்கு இடம் பாத்துட்டு அப்புறம் போவோம்  இதுல ஏதாவது எனக்கு ஒனக்குனு போட்டி வந்துடாம பாத்துக்கணும் என்று எச்சரித்து செக்ஷன் போனார் ராமசாமி.

அம்மாடி- பயங்கர கில்லாடி இவங்க ரெண்டு பேரும் என்று பெருமூச்சு விட்டு டிபன் முடித்து வேலைக்கு போனாள் சுந்தரி.

தொடரும்

அன்பன் ராமன்

3 comments:

  1. கல்யாணம் எந்த தேதி?
    டிக்கட் புக் பண்ணனும்.
    ரங்கநாதரையும் சேமிக்கலாம்.
    😃😃

    ReplyDelete
  2. They expect only about 40 people. To worship Lord Ranganatha, ONE NEED NOT WAIT FOR Subramani's wedding .

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...