Wednesday, July 3, 2024

SALEM SUNDARI-28

 SALEM SUNDARI-28   

சேலம் சுந்தரி -28

ஞாயிறு காலை 10.10, பூ பழங்களுடன் சுந்தரி,  மாடசாமி --ராமசாமி வீட்டில். 

அம்ஜம் காபி தரவா என்றார் . வேண்டாம் மணி 10.00 ஆயிடுச்சு என்ற ஒற்றைக்குரலில் காபியை தவிர்த்தனர்   மா சாவும், சுந்தரியும் .

எனக்கு குடுங்க நல்ல காபி சாப்பிட்டு நாளாச்சு என்று பெண்குரல். எல்லோரும் வெளியே எட்டிப்பார்க்க குதிரை வால்  கொண்டையுடன் -பேராசிரியை சுபத்திரா . வாங்க மேடம் என்று மாடசாமி கை கூப்ப , வாங்கோ என்று வாய் நிறைய அம்ஜம் அழைக்க , சுந்தரி வினோதமாக பார்த்தாள் .

சுபத்திரா மாடசாமியிடம் கௌரி நல்லா இருக்காளா ? என்று விசாரிக்க,

மாடசாமி மெட்ராஸ் பக்கம் ட்யூட்டி பாத்து நாளாச்சு அவளை பாத்தே 40 நாள் ஆச்சு என்றார்.

சுபத்ரா " நான் சொல்றேன்' சூப்பரா இருக்கா.

 வாரா வாரம் பேசுவா அவங்க ஆபீஸ்ல அவ தான் இப்ப முக்கிய அதிகாரி.

அநேகமா, ரெண்டொரு மாசத்துல, ஜெர்மனி போய் ஒரு 10 நாள் ஸ்பெஷல் கேம்ப் போவா. அவ தான், இப்ப எங்க யூனிவெர்சிட்டிக்கு, அட்வடைஸ்மென்ட்,   அம்பாஸிடர் எல்லாம்.

ரொம்ப மரியாதைப்பட்ட பொண்ணு .போன்ல அப்பிடி நன்றி சொல்லுவா --உங்க மருமாளாச்சே.? இன்னொண்ணு தெரியுமா?  டெல்லி இருக்கற ஜெர்மன் கான்சலேட்  ஆபிஸ் , கௌரியை எப்படியாவது டெல்லிக்கு கொண்டுபோயிரணும் னு பாக்கறாங்க . மெட்றாஸ் ஆபிஸ்காரன் விட மாட்டேங்கறான்.

எல்லா கான்சலேட் ஆபிஸ் ம் ஒரே ரேங்க் தானாம்; அதுனால டெல்லியாவது கில்லியாவது  அதெல்லாம் வேற எங்கயாவது போய் தேடிப்பிடி. இவ எங்க ட்ரம்ப் கார்ட் அதுவும் சௌத் இண்டியன் ட்ரடிஷனல் ஆர்ட் ஸ்பெஷலிஸ்ட் சென்னையில இருக்கணுமா வேற எங்கயாவது இருக்கணுமா னு சென்னை குரூப் கௌரியை இந்த ஜென்மத்துல விடாது.

 அந்த சென்னை டை ரக்டர் ஓயாம  கெஞ்சுறாரு கௌரி மாதிரி இன்னும் 1 கேண்டிடேட் ஆவது ஏற்பாடு பண்ணுங்க னு கோரி புலம்பல்...

கௌரி-மாதிரி வேணும்னா திருவண்ணாமலைல போய் சாமி கும்பிட்டு கிரி வலம் பண்ணுங்க னு சொல்லிட்டேன்.  அதுனால கௌரியப்பத்தி நாம எல்லாருமே காலரை தூக்கிவிட்டு தெம்பா இருக்கலாம் என்று குட்டி லெக்ச்சர் அடித்துவிட்டு அம்ஜம் கொண்டுவந்த கம கமா வை ஆழ்ந்து சுவைத்து மகிழ்ந்தாள்.

மாடசாமி கௌரி குறித்து பெருமை கொள்ள, மாரியம்மா உனக்கு கோடானு கோடி நன்றி அம்மா என்று மானசீகமாக சமயபுரத்தாளை நினைத்து நெக்குருகினார். சுபத்ரா என் இங்கு வந்தார்  ?

அது தான் அனுமன் விளையாட்டு.

சுபத்ரா வுக்கு இப்போது சுந்தரியை அறிமுகம் செய்வித்தனர் மாசா வும் ரா சா வும்ரயில்வே ஆபிஸ் ஊழியர் 11/4 வருஷமாக சர்விஸ்.

 தங்கைக்கு கல்யாணம் எல்லாம் பேசி ஏற்பாடு நடப்பது பற்றி விளக்கினர். சுந்தரி பத்திரிகை அடிப்பதற்கு வேண்டிய தகவல் களுடன்   பேப்பரில் எழுதி வைத்திருந்தாள் . குறைந்த அளவு காபி போதும் என்று பேசிக்கொண்டிருக்க , ஒரு நிமிஷம் என்று சுபத்திரா போனில் பேசினாள் .

ஏய் கொஞ்சம் வரியா என்றார் பேராசிரியை.

ஐயோ மேடம் இப்ப நான் சீரங்கத்துல கோயிலுக்கு போயிட்டு வந்துக்கிட்டு இருக்கேன் , தில்லை நகருக்கு வர முக்கால் மணி ஆகுமே என்றது பெண் குரல்.

அடச்சீ  நான் இப்ப சீரங்கத்துல தான் இருக்கேன் , நான் சொல்ற  அட்ரஸ்க்கு வா மச மசன்னு தூங்காம வந்து சேரு .

வரேன் மேடம்  என் கூட . [பின்னர் மெலிய குரலில் 2 குரங்குகளைக்] கூட்டிக்கிட்டு வந்திருக்கேன் ரெண்டும் ஜூஸ் குடிக்காம நகர மாட்டேங்குது . நான் ஜூஸ் கடைல விட்டுட்டு நீங்க போங்கனு சொல்லிட்டு ஆட்டோ பிடிச்சு வந்துர் றேன் -சரியா என்றாள் .

அட்ரஸ் இந்தா  என்று போனில் சொன்னார் மேடம்.

அடுத்த 6 நிமிடங்களில் மேடம் என்று கூவிக்கொண்டே உள்ளே வந்ததும் வணக்கம் சொல்லி நல்லாருக்கீங்களா சார் என்று ராமசாமியைப்பார்த்து கேட்க ராமசாமி விழித்தார்.

நீங்க ? என்றார் .

வந்தவள் சார் நீங்க மிஸ்டர் ராமசாமி [ரயில்வேஸ்] தானே என்றாள் . வாழ்வில் ராமசாமி பேந்தப்பேந்த விழித்தது இப்போது தான்.           

என்ன-- உங்களுக்கு தெரியுமா? என்றார் ரா சா

உங்கள தெரியாம திருச்சியில் யார் இருப்பாங்க அல்லது உங்களுக்கு தெரியாதவங்க திருச்சியில் இருக்காங்களா? என்று அதிரவைத்தாள். இப்போது சுந்தரி மலைத்தாள்   இந்த   "பொண்ணு" ராமசாமி சாரையே அதிர வெக் குது அம்மாடியோவ் என்று .

தொடரும்                           அன்பன் ராமன்

 

 

 

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...