Friday, July 19, 2024

SALEM SUNDARI-32

 SALEM SUNDARI-32

சேலம் சுந்தரி -32

இறைவா இது என்ன கொடுமை? அடுத்தவங்க செஞ்ச அட்டூழியத்துக்கு , என்கொய்ரி அது இது னு வந்தும் கூட இந்த மாடசாமி சார் ஏன் எதுவுமே  நடக்காத மாதிரி ஒரு புத்தர் மாதிரி இருக்கார். என்னை போல ஒரு ஜென்மம் நல்லது செய்யாட்டியும் இப்பிடியெல்லாம் புகார் சொல்லி , விசாரணை வந்ததாமே கேப்ரியல் சார் கண் கலங்கிட்டார் . அவரு சொல்லாம விட்டிருந்தாமாடசாமி சாருக்கு  இவ்வளவு பெரிய துன்பம்  ஏற்பட்டது தெரியாமலே போயிருக்கும்.. நிச்சயம் அவரு கிட்ட இதைப்பேசி ஏன் இப்பிடி என்னை மன்னிச்சுக்கிட்டே இருக்காருன்னு தெரிஞ்சா தான் எனக்கு தூக்கமே வரும் . இன்று கேட்டே ஆகவேண்டும் என்று தீர்மானித்தாள் .

காலையோ மணி 9.57 -மாடசாமி வந்தார். ஏற்கனவே கனத்த மனதுடன் சுந்தரி காத்திருக்கிறாள்.

சார் ஒரு அரை மணி நேரம் உங்ககிட்ட பேசணும் என்றாள்  சுந்தரி.  . இது என்ன 2 நாளைக்கு ஒரு தடவை உங்ககிட்ட பேசணும் . உங்ககிட்ட பேசணும் . னு தொழிற்சங்க தலைவர் மாதிரி காலைலே கோரிக்கை வெக்கறீங்க. எதுனாலும் மதியம் 3 மணிக்கு அதுவும் கான்டீன்ல தான் பேச வருவேன். அதுவும் தனியா கிடையாது ராமசாமி /கேப்ரியல் யாராவது இருந்தாதான் பேசலாம். இல்லேன்னா இந்த மாடசாமி அவங்க செக்ஷன் ஸ்டாப் பெண்ணை கூட்டிக்கிட்டு வந்து கேன்டீன்ல அரட்டை அடிக்கிறார் னு ஜங்க்ஷன் பூரா பேசஆரம்பிச்சுருவானுங்க; அது உங்களுக்கு நல்லதில்லை அதுனாலதான் பொது இடத்துல 4 பேர் முன்னால பேசறது நல்லது. என்கொயரியே இல்லாம, எதையும் தீர விசாரிக்காம, திருட்டுத்தனம் பண்றாங்க னு நம்ப மேல பழி சொல்லுவாங்க என்றார் மாடசாமி .

ஐயோ, இவர் என்ன என்கொய்ரி னு -நான் கேட்க நினைச்சதை குறிப்பிடுறாரே -இவரை எப்பிடி சமாளிக்கப்போறேன் என்று அதிர்ந்தாள் சுந்தரி.  

அப்ப 3.00 மணிக்கு உங்களை சந்திக்கவரலாமா என்றாள் சே .. சு.   ஓகே நான் ராமசாமியை வரசொல்லிடறேன் என்றார் மாடசாமி .  சுப்புரெத்தினம் வயிரு காரணமாக 1 நாள் லீவு . அதுனால மாடசாமி தான் இன் -சார்ஜ் . எப்போது 3 மணி ஆகும் என்று அலைபாய்ந்தாள் சே .. சு

சரியாக 3 மணிக்கு சுந்தரி கேன்டீனில்  3.03 க்கு கான்டீன் வந்தார் மாடசாமி [ராமசாமி பயங்கர எத்தன் ;நீ போ நான் 10-15 நிமிஷம் ஆனப்புறம் வரேன் ;அநேகமா அவ PK சார் என்கொய்ரி பத்தி கேப்பா னு நெனக்கிறேன்: உனக்கு தான் தெரியுமே -நீ சூப்பரா ஆப்பு வெச்சுடுவ. நான் மெல்ல வரேன், ஏன்னா பாதி பேச்சுல சேந்துக்கலாம் முன்னாலேயே போனா பேச்சே துவங்காது -அதுக்கு தான் நீ ஸ்டார்ட் பண்ணிடு, நான் வரேன் என்று மாடசாகிம்மியை தயார் பண்ணி இருந்தார் ராமசாமி.]

 

சுந்தரி -- "நீங்க ரொம்ப அமைதியா-- என்னை தண்டிக்கறீங்க- சார்.

ஒரு வார்த்தை திட்டாம நல்ல நறுக் நறுக் னு

கு ட்டு வெக்கறீங்க.  ரொம்ப, வேதனையா இருக்கு சார்.

மாடசாமி ' வேலைக்கு லேட்டா வந்தா புகார்;  திட்டாம இருந்தா தண்டிக்கறேன் கறீங்க , நறுக் நறுக் னு குட்ட றேன் கறீங்க  ? இத்தனையும் சும்மா இருந்தவனுக்கு   வர் பழி .

 இன்னும் ஏதாவது, அடிச்சு இருந்தா, கொலை கேஸ் போட்டுருவீங்க -அப்புறம் நான் கம்பி தான் எண்ணனும். என்னை ஏன் இப்படி புரட்டி புரட்டி தாக்கறீங்க.

 . நான் செஞ்ச தப்பு-- லேட்டா வர்ற ட்ரெயின் ட்யூட்டி பாத்தது; நான் வேறென்ன செஞ்சேன்? என் தவறு எதுவுமே இல்லை ஆனா HR போய் புகார்.

பாக்கி எல்லாரும் ஷார்ப்பா வேலைக்கு வந்தாச்சு அதுதானே உங்க கம்ப்ளெயிண்ட்?  கண்ட பலன்  புது விதமான என் கொயரி” – மாடசாமி

தொடரும்                   அன்பன் ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...