Thursday, July 18, 2024

MUSIC DIRECTOR VEDHA-2

 MUSIC DIRECTOR    VEDHA-2

இசை அமைப்பாளர்  வேதா -2

இன்றைய  பதிவில் ஹிந்தி யில் இருந்து தமிழுக்குள் இறக்கு மதியான சில பாடல்களை காண்போம் . அனைத்தும் வேதாவின் இசை தாங்கி வருவன. அதாவது ஹிந்தியை அடியொற்றி உருவான தமிழ் பாடல்கள். இவ்வனைத்திலும் 3 முகங்கள் இருப்பதை காணலாம் 1 கண்ணதாசன், 2.வேதா 3 டி எம் எஸ் ஆனால் அநேக பாடல்களில் சுசீலாவின் பங்களிப்பும்சிறப்பாகவே இருப்பதைப்பார்க்கலாம்

 

ஓராயிரம் பார்வையிலே [வல்லவனுக்கு வல்லவன் -1965] கண்ணதாசன்   வேதா , டி எம் எஸ்.

ஒரு சோக முகம் கொண்ட காதல் வடிவம் இப்பாடல்.

 வெகு நிதானமாக ஆனால் ஓங்கி ஒலித்த ஆண் குரல் . கவியரசரின் சொல்லாட்சியும் சோக பாவமும் பாடலின் வெற்றிக்கு அஸ்திவாரங்கள். பலரையும் கவர்ந்த மென்மையான ஏக்கம் மிகுந்த பாடல்.

இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=_tyuJZwCvhU or 1000 paarvaiyile valavan oruvan 1965  kd vedha tms

நான் மலரோடு தனியாக [இரு வல்லவர்கள் 1966 ]கண்ணதாசன் , வேதா , டி எம் எஸ் , பி சுசீலா 

மாபெரும் வெற்றி கொண்ட டூயட் பாடல் , ஜெய்சங்கர் விஜயலக்ஷ்மி போட்டிபோட்டு நடித்த  பாடல். பாடல் துவங்கியதும் விஜயலக்ஷ்மி -"சும்மா நடிக்காதே "என்பது போன்ற முகபாவம் காட்டி , தான் ஏமாளி அல்ல  என்று நிறுவுகிறார். பாடல் முழுவதும் கேள்வி பதில் வடிவில் பயணித்தாலும் நடன அசைவுகளுக்கு பஞ்சம் இல்லை. அதிலும் விஜயலட்சுமியின் நடனம் வேகத்துடன் வெகு இயல்பாக இருப்பதையும் கவனியுங்கள், சரியான நாட்டிய தாரகை , பல நடிகர்கள் இவருடன் நடனம் ஆடவே தயங்குவார்கள் என்பதே அவரின் நடன வன்மைக்கு சான்று. .இளமைத்துள்ளல் இப்பாடல்

கண்டு மகிழ  இணைப்பு

https://www.google.com/search?q=naan+malarodu+thaniyaga+video+song&newwindow=1&sca_esv=94b417bf3c247d44&sca_upv=1&sxsrf=ADLYWIIOy8sCLEdLi6MivHWpWL0PI0wYMA%3A1721016692175&ei=d iru vallavarga 1966 l kd  vedha tms ps

இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் [வல்லவன் ஒருவன் -1966 ] கண்ணதாசன், வேதா , டி எம் எஸ், பி சுசீலா 

இப்பாடல் கண்ணதாசனின் குறும்பு நிறைந்த காதல் ததும்பும் சொல்லாட்சி மிக்கது. சிறிய படகில் நடனம் விஜயலக்ஸ்மி இந்தப்பாடலிலும் னாயாச ஆட்டம் அதுவும் நவநாகரீக உடையி ல் . சுறுசுறுப்பும் விறுவிறுப்பும் பாடலின் பண்புகள் . கேட்டு மகிழ இணைப்பு இதோ

 

https://www.google.com/search?q=innum+paarththukkondirundhaal+song+video+song&newwindow=1&sca_esv=94b417bf3c247d44&sca_upv=1&sxsrf=ADLYWIL1RVWLKPoeMXhQ4RZQv-kLZGFskg%3A17210169 vallavan oruvan kd vedha tms ps

முத் துப்பொண்ணு பாமா [வல்லவன் ஒருவன் 1966] கண்ணதாசன், வேதா, டி .எம்.எஸ் பி சுசீலா .

கூட்டமாக கும்மாளம் அடிக்கும் பாடல். வெகு விரைந்த தாளக்கட்டுகள் பாடலின் விறுவிறுப்பை உயர்த்துவதும் ஒவ்வொரு சரணத்திலும் , உடையும் நடனமும் மாறுவதையம்  கவனியுங்கள். அதிலும் இறுதிசரணத்தில் LV காட்டிய வேகம் சிறப்பானது.. அலட்சியமான வேகத்தில் நடனம் .  கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=muthuponnu+baama+muthamidalaamaa+l+song+video+song&newwindow=1&sca_esv=94b417bf3c247d44&sca_upv=1&sxsrf=ADLYWIKHSkZYVn7oAHm13_ig54mfv8rQ2Q%3A17210  vedha tms ps vallavan oruvan 1966

பிருந்தாவனத்தில் பூ எடுத்து  [ சி டி சங்கர் 1970] , கண்ணதாசன், வேதா, டி எம் எஸ் பி சுசீலா

நடனக்குழுவில் இயங்கிவந்த சகுந்தலா கதாநாயகி ஆன படம் . அதனால் அவரே சி டி சகுந்தலா ஆனார். இதுவும் ஒரு நாட்டியப்பாடல். அதிலும் சகுந்தலா வெகு சிறப்பாக நாட்டியம் புரிந்துள்ளார். . கவி அரசரின் பஞ்ச் ஆங்காங்கே இயல்பாக காணப்படுவது பாடலின் வெற்றிக்கு உதவியது. பழைய பிருந்தாவன் காட்சிகள் சிறப்பாக வலு சேர்க்கின்றன. இணைப்பு இதோ

https://www.google.com/search?q=brindhaavanaththil+poo+eduththu++video+song&newwindow=1&sca_esv=94b417bf3c247d44&sca_upv=1&sxsrf=ADLYWII8dAIG2A2v1NnSZS6kWrjfqZKoZg%3A1721017680935&ei=U brindhavanaththil cid Shankar 1970 kd vedha tms ps

நாணத்தாலே [சி டி சங்கர் -1970] கண்ணதாசன் , வேதா, டி எம் எஸ், பி சுசீலா

மற்றுமோர் நாட்டியம் நிறைந்த டூயட். வெகு அழனா இசை தொகுப்பு மற்றும் பாடியுள்ள நேர்த்தி. சுவையான பாடல் . இடை இசை நாட்டியத்திற்கே வடிவமைக்கப்பட்டுள்ளது புரிகிறது. எனவே நாட்டியம் ம்முதன்மை இடம் கொள்வதில் வியப்பு இல்லை.

https://www.google.com/search?q=naanaththaale+kannam+minna+minna++video+song&newwindow=1&sca_esv=94b417bf3c247d44&sca_upv=1&sxsrf=ADLYWIKosNk0vu9bcROYpuurBMpioWelKA%3A1721018081293&ei=4 cid Shankar 1970  kd vedha tms ps

கவி அரசர் எந்த ஹிந்தி ட்யூனுக்கும் தமிழில் சொல் வழங்கியுள்ளார். வளமான தமிழ்  , சொல் வீச்சு குறும்பு செய்வது கவிஞருக்கு கரும்பு.

ட்யூனில் உட்கார, சொல் தேர்வு செய்வது கவிஞருக்கு கைவந்த கலை. அது அவ்வளவு எளிதல்ல.

பாடலின் ஓட்டத்திற்கும் பாடலின் சுவைக்கும் ஈடு கொடுத்து பாடல் புனைதல் பெரும் கவிகளுக்கே வசப்படும். அவ்வகையில், கவி அரசர் பெரும் சாதனையாளர்.

வளரும்

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN –24

  TM SOUNDARARAJAN –24 டி எம் சௌந்தரராஜன்-24 வரவு எட்டணா \ பாமா விஜயம் -1967] கம்மதாசன் ஈ . எம் . எஸ் வி , டி எம் எஸ்       எ...