Wednesday, July 17, 2024

T M SOUNDARARAJAN-13

 T M SOUNDARARAJAN-13

டி எம் சௌந்தரராஜன் -   13        

இன்றைய பதிவில் சௌந்தரராஜன் -சுசீலா வழங்கிய ப்ரம்மாண்டங்கள்;, காலத்தை கடந்து இளமையும் துடிப்பும் குன்றாத பாடல்கள் சிலவற்றைக்காண்போம் அவ்வகையில் முதலில் ஒரு கனவுப்பாடல்

ராஜாவின் பார்வை [அன்பே வா- 1966] வாலி எம் எஸ் வி-டி எம் எஸ், பி சுசீலா .

ஒரு கனவுப்பாடல் என்பதாலோ என்னவோ , எம் எஸ் வி அவர்கள் எண்ணற்ற நுணு க்கங்களை ஒரே பாடலில் களப்படுத்தி , அற்புதமான இசை சாம் ராஜ்ஜியம் படைத்துள்ளார். .வற்றாத  ஊற்றென  பீறிட்டு ப்பாயும் இசை முழக்கம் , வித விதமான ஒலி க்கலவைகள் , தாள நடைமாற்றங்கள், கருவிகளின் கூட்டியக்கம் என ஒரு இசை கம்பீரம், குரல்களின் நளினம், ஆங்காங்கே கோரஸ் தோன்றி ஒரு கந்தர்வலோக உணர்வை தோற்றுவித்து கேட்பவரை  கிறங்கவைக்க,  திரையில் தோன்றும் காட்சி , நம்மை மாய உலகில் மிதக்க விட என்ன ஒரு தேவலோக அனுபவம்? சொல்லில் அடங்காது, ஆயினும், சொல்லிப்பார்ப்போம்.

ஓடாத குதிரை ஓடுவதாக நம்ப வைத்த சக்கரச்சுழற்சி, ப்ளங் சிக்   ப்ளங் சிக்    ப்ளங் சிக்   ப்ளங் சிக் எனும் குளம்பொலியும், பியானோவும் பாடலைத்துவங்க ,பின்னூட்டமாக நகரும் நட்சத்திரக்கூட்டங்கள் போல புள்ளிகள் செயற்கையாக வான் வெளியில் தவழும் காதலர்கள் என்பதாக மிகைப்படுத்த பாடல் பெரும் வரவேற்பு பெற்றது. [நட்சத்திரக்கூட்டம் மேலும் கீழும் பக்கவாட்டிலும் இயக்கப்பட்ட - வண்ண செல்லோபேன்  காகித அடுக்குகள் ஊடே பாய்ச்சப்பட்ட ஒளி ஒளிப்பதிவு -மாருதி ராவ். இவ்வாறு எழுந்த பாடல் அனைவரையும்         கொள்ளை கொண்டதில் வியப்பில்லை. அனைத்தையும் நுணுக்கமாக கவனித்து ரசிக்க இணைப்பு . 

https://www.google.com/search?q=raajaavin+paarvai+raniyim+pakkam+video+song&oq=raajaavin+paarvai+raniyim+pakkam+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYo anbe vaa 1966 vaali msv, tms ps

இதே பாடல் குறித்த QFR குழுவினரின் விளக்கமும், வேறு பல செயல் விந்தைகளை அறியவும்   ஒரு இணைப்பு இதோ

QFR https://www.google.com/search?q=qfr+RAJAVIN+PAARVAI+RANIYIN+PAKKAM++song+download&newwindow=1&sca_esv=8c2b0740c73d74e6&sca_upv=1&sxsrf=ADLYWIK3Xw4T01tXUZmL21udQKgOLUIvwA%3A1721

சில நேரடி திரைக்கலைஞர்களின் இசை முழக்கங்கள் பாடலின் கோரஸ், கருவிகள் ஒருங்கிணைப்பு என கேட்டு உணர இன்னுமோர் இணைப்பு இதோ

https://www.google.com/search?q=ENDRUM+MSV+PROGRAM+RAJAVIN+PAARVAI+RANIYIN+PAKKAM++song+download&newwindow=1&sca_esv=8c2b0740c73d74e6&sca_upv=1&sxsrf=ADLYWIKXHNAXrnCwF STAGE SHOW TOP ARTISTES ON VIEW

மற்றுமோர் கனவுப்பாடல்

முத்துக்களோ கண்கள் [நெஞ்சிருக்கும் வரை -1967] கண்ணதாசன் , எம் எஸ் வி , டி எம் எஸ், பி சுசீலா

இந்தப்பாடலுக்கு பல சிறப்புகள் -ஆம் அடுக்கிக்கொண்டே போகலாம். சில நாட்கள் இடைவெளிக்கு பின்னர் பாடல் விவாதமும் எழுதவும் பூர்வாங்க ட்யூன் எனும் மெட்டமைப்பு வேலைக்கென முக்கியசர்ஹர்கள் குழுமி     இருக்கின்றனர்  ஸ்ரீதரின் சித்ராலயா நிறுவனத்தில் . ஸ்ரீதர் உள்ளே ஏதோ வேலையாக இருக்கிறார். உரையாடல் துவங்குகிறது

கவிஞர் : டே-- விசு இன்னிக்கி என்ன பாட்டுடா ?  எம் எஸ் வி : ஏதோ டூயட்டு

கவிஞர் : உங்களுக்கு வேற வேலையே இல்லையாடா எப்பப்பாரு டூயட்டு  டூயட்டு னு அலையறீங்கடா

 எம் எஸ் வி ; அண்ணே அவங்க பேசிக்கிட்டதை சொன்னேன் , நானா அலையறேன் ?

இவர்கள் பேச்சு கேட்டு ஸ்ரீதர் வந்துவிட்டார்.

கவிஞர்: ஸ்ரீ இன்னிக்கு என்ன பாட்டு ? [ஸ்ரீதரை  ஸ்ரீ என்று தான் அழைப்பார் கண்ணதாசன்]

ஸ்ரீ : ஒரு ரெண்டு வரி யில காதலைப்பத்தி சொல்ல முடியுமா? 

கண்ணதாசன்: என்ன ரெண்டு வரிலியா?

ஸ்ரீ : ஆமாம்              

கவிஞர்:: [ஒரு வினாடி யோசித்தபின் ] மணி [G S மணி ] எழுதி க்கறீங்களா    ] மணி:

கவிஞர்:பாடல் சொல்லுகிறார் [அவர் எழுத மாட்டார் ] வேகமாக சொல்லுகிறார்

முத்துக்களோ பெண்கள் தித்திப்பதோ கன்னம் 

சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்து விட்டேன் என்னை.  [என்று காதல் பிடிப்பதை /பீ டிப்பதை சொல்லிவிட்டார்].   ஸ்ரீ க்கு குஷி .

எம் எஸ் வி : உடனே பாடிக்காட்டுகிறார் -பல்லவி ரெடி .

மள மள வென சரண வரிகள் வந்து விழ, ஒரு 7 நிமிடத்தில் கவிதை முடிந்தது. 10 நிமிடத்தில் ட்யூன் ரெடி , குழு அடுத்த கம்பெனிக்கு கிளம்பிவிட்டது.

என்னென்ன சிறப்புகள் இப்பாடலில். 

ஏழை மனங்களில் எழுந்த ஈர்ப்பு பாடலாக.

எனவே இரவுக்காட்சி. அதுவும் கருப்பு வெள்ளை [ஏழ்மையின் அடையாளமாக ; கலைஞர்கள் ஒப்பனையின்றி நடிக்க படப்பிடிப்பு.] இதில் கவிஞர் காட்டிய சொல்லாட்சி அலாதியானது , மேலும் உவமையும், சொல்லின் ஒலி பேதமும் வைத்து அற்புதமான எளிமையில் காதல் கொப்பளிக்க வார்த்தைகள் விளையாட வெளிப்பட்ட பாடல்.

சொல் நயம் :

சந்தித்த வேளையில் [சற்றே மாற்றி] சிந்திக்கவே இல்லை [சந்தித்த என்ற சொல்லுக்கு          மோனையாக தந்து என்று சொல் அமைத்துள்ளார் கவிஞர்.    

உவமை   கடலின் அலைகள் ஓடி வந்து காலை நீராட்ட [பெண்]

எழுந்த இன்பம் என்ன? என் எண்ணம் எங்கும் ஏக்கம் என்ன? [ஆண் ]

உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன ? உன் கைகள் மாலையாவதென்ன ?

மீண்டும் சொல் நயம் :

விருந்து கேட்பதென்ன -அதையும் விரைந்து கேட்பதென்ன

வாழை தோரண மேளத்தோடு பூஜை செய்வதென்ன?

பாலில் ஊறிய ஜாதிப்பூவை சூடத்துடிப்பதென்ன?  என்று வேறெந்த ப்பாடலிலும் இல்லாத சொல்லாட்சி..

இசை நயத்தில் இப்பாடல் எட்டிய உயரம் மகத்தானது. அணு அணு வாக தொகுக்கப்பட்டுள்ள    ஸ்வரக்கோவைகள்  நேர்த்தியான தாளக்கட்டமைப்பு என பாடலில் இசை பரிமாணம் மிக அதிகம்

கேட்டு ரசிக்க இணைப்பு          

https://www.youtube.com/watch?v=H-Pw9ZDhcMw muthukkalo nenjirukkum varai -1967, kd msv tms ps

இப்பாடலின் நேர்த்திகளை விளக்கும் QFR பதிவையும் கண்டு களியுங்கள்  

https://www.google.com/search?q=qfr+song+muthukkalo+kangal+song+download&newwindow=1&sca_esv=8c2b0740c73d74e6&sca_upv=1&sxsrf=ADLYWIKduIOsBPV0O9t5pcBlqBJfYZDpXA%3A1721045955947&ei=w

இயக்குனர் ஸ்ரீதர் பற்றிய எனது ஆங்கிலக்கட்டுரையின் ஒரு பகுதியை திரு சித்ராலயா கோபு அவர்கள் ஆங்கில நாளிதழ்தி ஹிண்டுபத்திரிகையினரிடம்

பகிர்ந்ததை இங்கே ஒரு துணுக்கு செய்தியாக தந்துள்ளேன்.

 “He carved a niche for himself among educated filmgoers also. Let me quote Raman, a retired professor and an ardent fan of Sridhar. He wrote, ‘Sridhar’s treatment and presentation were never run of the mill and his mega hits did not boast of star value.’ See what I mean?” Gopu’s voice brims with pride.        COURTESY –“THE HINDU” 22-07 -2016

வளரும்

நன்றி அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...