Tuesday, July 16, 2024

THE CHILDREN- NOW

THE CHILDREN- NOW

 இன்றைய சிறார்

-இது என்ன தலைப்பு? என்போர் எனது கருத்தை ஏற்பர் என்றே நம்புகிறேன். ஆம் நமது கண் முன்னே நிகழ்ந்து விட்ட மாற்றங்கள் எத்தெத்தனையோ . எதை விளக்குவது அல்லது விலக்குவது -ஈசனுக்கே வெளிச்சம். பல எளிய வாழ்க்கை முறைகள் முற்றாக ஒழிந்து /அழிந்து , இப்போதகு விளக்கம் சொல்லிப்புரிய வைக்கும் மனநிலைக்கல்லவோ  வந்துள்ளோம்.

 . பலவற்றை பேச வேண்டியுள்ளது.

அன்று கூட்டமாக சிறுவர் சிறுமியர் நடந்து பள்ளிக்கூடம் போன காலம். பல ஆசிரியர்கள் வேட்டி , ஜிப்பா , நெறியில் நீறு /திருமண் /சந்தனக்கீற்று /சாந்து பொட்டு ., கையில் குடை மதிய உணவு என்ற தயிர் சாதம் / எலுமிச்சம்பழ சாதம், ஏதோ ஒரு ஊறுகாய் இவற்றுடன் பெரும்பாலும் நடை , சிலர் சைக்கிள் என்று வகுப்புக்கு அரை மணி நேரம் முன்பே பள்ளியில் நுழைந்து வேறு சில பொறுப்புகள் நிறைவேற்றி பிரேயர் [பிரார்த்தனை கூட்டத்தில் ]நடத்திவிட்டு வகுப்பு துவங்குவர்.

இன்றோ நடந்து வருபவர் அனேகமாக இல்லை, ஸ்கூட்டர் , மோட்டார்சைக்கிள், ஆட்டோ , ஆசிரியர்களில் பலர் பைக் சவாரி பள்ளிக்கோ வீட்டுக்கோ செல்ல, மான மாணவியர் ஸ்கூல் பஸ் , ஸ்கூட்டர் , ஆட்டோ , சிலர் காரில் வருகின்றனர். நடந்து வருபவர் குசேலனின் வழித்தோன்றல், ஏனையோர்  குபேர விரிவாக்கங்கள்.

கையை தூக்க முடியாத எடையில் வாச் [கருத்த முகம் , மணி பார்க்க விசையை அழுத்தவேண்டும். எனவே வாச்ஓடும் நிலையில் உள்ளதா /ஓட்டையா . -உடையவனுக்கே வெளிச்சம். லஞ்ச் /சாப்பாடு கேன்டீனில் , அவ்வப்போது பெப்சி/ கோக்   என கரும் திரவங்கள், வாய் எப்போதும் ஹோட்டல் கிரைண்டர் போல் அறை த்துக்கொண்டு ப்ச் ப்ச் ப்ச் என்று சூயிங்கம்    குதப்பி உடம்பு திருமலை நாயக்கர் மஹால் தூண்கள் போல் உருண்டு மாமிச மலை என ஆணும் பெண்ணும் 10 ம் வகுப்பு முதல் எரிவாயு சிலிண்டர் வடிவ   உருளைகளாக உலவுகின்றனர்

அதனால் உனக்கென்ன? நீயா வாங்கித்தருகிறாய் என்று ஒரு தந்தை குமைகிறார். நான் வாங்கித்தரவுமில்லை உங்களை எனக்கும் வாங்கித்தாருங்கள் என கேட்கவும் இல்லை.

இவை அனைத்தும் இந்த நூற்றாண்டு தோற்றுவித்துள்ள அவலங்கள். அவை 1] முறையற்ற உணவு முறை [விரைவு உணவு எனும் fast food ]. fast என்பதற்கு உபவாசம் என்றொரு பொருளும் உண்டு. லங்கணம்   .என்பதே fasting. பாஸ்ட் food தவிர்த்து பாஸ்டிங் மேற்கொண்டால் உடல் பருமன் மட்டுப்படும்.. உருளைகள் மெலிந்து இளமை குடிகொள்ளும். ஏன் இந்த நிலை ?  உணவு சரியில்லை , உடற் பயிற்சி அறவே இல்லை. நடப்பது என்பது ஏழ்மை மற்றும்     தரித்திரத்தின் அடையாளம் என்றெண்ணி நடையே இல்லை. சோபாவில் சாய்ந்து நூடுல்ஸ் வகை உணவை தின்று கொண்டிருந்தால் உடல் பலூன் போல வீங்குவதைத்தவிர வேறென்ன நடக்கும்?

சரி எங்கே தவறு என யோசித்தால் -- வாழ்வியல் முறை குறிப்பாக பள்ளிப்பருவத்தினருக்கு , கற்றல் அணுகுமுறை போதித்தல் குறைபாடுகள், வாழ்வில் பெரும் பகுதி ட்யூஷன் வகுப்புகளில், தஹந்தை தாய் இருவரையும் ஒரே நேரத்தில் சந்திக்கும் சூழல் என்றோ விடுமுறை நாளில் வாய்த்தால் குழந்தை பாக்கியசாலி. இவற்றிற்கிடையே வேறு சில தவறுகளும் நுழைந்து விட குழந்தை [செந்தமிழில் குழவி ] குழவியென [50 லிட்டர் கிரைண்டர் பயன்பாட்டிற் கான குழவியை போல் வீங்கி விஸ்வரூபம் எடுத்து கால் சட்டை கால்களுக்கு இடையில் அறைபடுவது , வயிற்றில் சதை தொங்கி, ஆங்காங்கே வேண்டாத வீக்கங்களும் திரட்சிகளும் என பையன்கள் சோபாக்களில் மாமிச மலை போல் கிடக்கின்றனர். இருந்த இடத்திலேயே அம்மா போன்விட்டா என்று அலறிஎஞ்சி  இருக்கும் இடைவெளி குடல் பகுதிகளில் அந்த பழுப்பு திரவத்தை நிரப்பிக்கொண்டு, லேப்டாப் அல்லது ஆண்டிராய்டு போனில் ஐக்கியம். பெண்கள் சற்றும் குறைந்தவர் அல்லர். 10 வயதில் பருவம் எய்தி, உடல் ஒருபுறம் மனம் ஒரு புறம் படுத்த அவர்களுக்கு எதுவுமே சுமையாக தெரிகிறது. சுவையாக தெரியவேண்டிய உறவுகள் சுமையாகவும் ஏன் பகையாகவும் கூட உணர்கின்றனர்.   .சித்தப்பா பெரியப்பா குழந்தைக்கு கூட அந்நியப்பட்டு நட்பு வட்டம் என்பது 2 அல்லது மூவர் மட்டுமே. அதுவும் ட்யூஷன் முறை தொடர்பு தான்   

எங்கும் விளையாட்டு என்றிருந்த சிறார் இப்படி சிறைப்பறவைகளாக , வீடு, பள்ளி  ட்யூஷன்  , என்று உழல்வது சமூக சூழலாக மாறி விட்டது. இந்த வகையில் பார்த்தால் சிற்றூர்களும் , கிராமங்களும் பரவாயில்லை . ஆம் பள்ளிக்கு சைக்கிள் /சிலர் நடை மேற்கொள்கின்றனர். இப்படி ட்யூஷ ன் என்று அலைவதில்லை . பள்ளியிலேயே ட்யூஷன் வகுப்பையும் முடித்து மீண்டும் சைக்கிள் அல்லது நடைப்பயணம் ;ஆனால் நகர்களில் நடைப்பிணம் போல் இளம் சிறார்.. சிற்றூர்களில் இன்னமும் கால்பந்து கபடி,, போன்ற உடலுக்கு வேலை தரும் விளையாட்டுகளில் சிறார் பங்கேற்கின்றனர்

தேசிய விளையாட்டு போட்டிகளில் எந்த நகர்ப்புற சிறார் பேசப்படும் அளவுக்கு வளர்த்துள்ளனர்?.  அந்நாளில் விளையாட்டு என்பது கால [பருவ] நிலை சார்ந்தது. கோடை விடுமுறையில் தான் கால் பந்து /கிரிக்கெட் -மைதானத்தில் . ஏனைய நாட்களில் தெருவில் பம்பரம், கோலிக்குண்டு, கபடி, பெண்கள் பாண்டி விளையாடுவர் மழைக்காலங்களில் பல்லாங்குழி , செஸ் , கேரம்  [carrom போர்டு] அண்டை வீடுகளில் ஆடுவர்.

இவை அனைத்தும் தனி மனித செயல் சார்ந்தவை. நம்உணவு முறைகளும் குறிப்பிட்ட வேளைக்கு புது தயாரிப்பாக கிடைக்கும். பதப்படுத்தி preserve செய்யப்பட உணவுகள் இப்போதும் கூட சிற்றூர்களில் பெற்றோர் அனுமதிப்பதில்லை. இதனால் உடல் சீராக இருக்கிறது 

மேலும் விளையாட்டும் ஒரு வாழ்வியல் அங்கம் என்பதால் ஒபிசிட்டி [ஊளைப்பருமன்]  சிறாரிடம் காணப்படுவது நகரங்களில் மட்டுமே . தவறான உணவை சமூக அந்தஸ்து என்று ஜபர்தஸ்து பேசியவன் 29-30 வயதில் பைபாஸ் /ஆஞ்சியோ என்று திண்டாடுகிறான். இப்போது மற்றுமோர் பக்க விளைவாக குழந்தையின்மை ஒரு சாதாரண அன்றாட நிகழ்வாகி கருத்தரித்தல் மையங்கள் காளான்களாய் முளைத்து பொருள் குவிக்கின்றனர்

அவற்றில் சில குறித்து உலவும் செய்திகள் பெரும் கவலை தருவன. கையில் குழந்தையுடன் மருத்துவ மனை வாயில் விளம்பரப்பலகையில் தோன்றுவது பெருமையென க்கருதும் தம்பதியினர்  .இருக்கும் வரை IVF வைத்தியம் தழைத்தோங்கும்  இதை விடைக்கொடூரம் வாடகைத்தாய் எனும் SURROGATE MOTHER என்ற வகை பெண்கள்.

இவற்றில் ரகசியம் காக்கப்படும் என்ற விளம்பரம் வேறு. பிள்ளளைப்பேறின்மை என்பது வியாபாரப்பொருள் ஆகிவிட்டது. இவற்றில் பெரும்பாலானவை, உணவு முறை உடற்பயிற்சி இன்மை, புறத்தோற்றம் பற்றிமட்டுமே எண்ணும் பெண்கள் .என்று பல காரணங்களை புரிந்து கொள்ளலாம். சிறு வயதில் காக்கப்படாத உடல் செயல்பாடுகள் முப்பது வயதில் முற்றிலும் ரிப்பேர் ஆகி FERTILITY சென்டர்களில் குவியும் இளம் தம்பதியினர் கூட்டமே கட்டியம் கூறியும் புரிந்து கொள்ளும் திறனும் வக்கும் இல்லாத உயர் மத்திய தர படாடோப பைத்தியங்கள்இன்றைய அவல வாழ்வின் பிரதி பலிப்புகள்

இளம் வயதில் உடலை இயக்குங்கள் , கொழுப்புப்பொருளை தின்று சுக வாழ்வு என்று ஏமாறா தீர்கள்சிந்திப்பீர்.

 

அன்பன் ராமன் .

1 comment:

  1. முற்றிலும் உண்மை. வருந்தத்தக்க நிலை.
    காரணம் தற்கால வாழ்க்கை முறை.
    நம் இளைய நாட்களை எண்ணிக் பார்க்கிறேன்.
    நம் பெற்றோருக்கு
    நன்றி .

    ReplyDelete

PATTU IYENGAR –THE LYRICIST-3

  PATTU IYENGAR –THE LYRICIST-3 பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார் -3 கீழே இறங்கி வந்த திருப்பதி , ஐயங்காரை பக்கத்து அறை   டேபி...