Sunday, July 14, 2024

SALEM SUNDARI-31

 SALEM SUNDARI-31

சேலம் சுந்தரி -31

சொன்னபடியே வேனில் சுப்புரெத்தினத்தை யும் சிவராமன் மூலம் சுப்புவின் ஸ்கூட்டரையும் அனுப்பி வைத்தார் மாடசாமி. இந்த மாடசாமி முரட்டு காவல் தெய்வம் தான் எவ்வளவு உதவி செய்யறாரு;

நான் தப்பா நெனச்சுட்டேன்-பொம்பளைக்குத்தான் உதவி செய்வாருனு பார்த்தா, எனக்கும் தான் அதே உதவி ஆஸ்பத்திரிக்கு டாக்டர், வேன் , ஸ்கூட்டர் கொண்டார ஒரு ஆள் எவ்வளவு ஏற்பாடு ஒரு நொடியிலே. அந்த தம்பி நல்லா இருக்கணும் அரே தேவுடா என்று வெங்கடாசலபதியை வேண்டினார்.

சுந்தரிக்கு இருப்பு கொள்ளவில்லை; சுப்பு வேறு, வீட்டிற்கு போய்விட்டார்; மெள்ள கீழிறங்கி கேப்ரியல் செக்ஷன் சென்றாள் . அங்கே முத்துலக்ஸ்மீ [கேப்ரியல் அப்படிதான் சொல்வார்]. வா சுந்தரி என்றாள் மு. ல .

அக்கா பென்ட்ரைவ்ல எடுத்திருக்கேன் 5 இன்விடேஷன் மாடல் , 2 காப்பி 5ம் ஒரே பேஜ் ல இருந்தாக்கூட போதும் -முடியுமாக்கா? என்றாள் சுந்தரி.

இரு சார் கிட்ட ஒரு வார்த்தை சொல்லுவோம் அவர் ok தான் சொல்வார். கேப்ரியல் சேம்பரில்    இருவரும் போய் நிற்க - இன்னா ஓணும்?

 சுந்தரி விவரம் சொல்ல குட் 1or2 காபி தானே ok என்று சொல்லி விட்டு

மேடம் ஒரு நிமிசம் உக்காருங்கோ , முத்துலக்ஸ்மீ நீங்கோ பிரிண்ட் போட்டி கொண்டாங்கோ என்று முத்துலக்ஸ்மீ யை அனுப்பிவிட்டார்.  இப்போது சுந்தரியிடம் நீங்கோ எங் ஸ்டாப், என்துசியாசம் , இன்ட்ரஸ்ட் அல்லாம் இருக்கும் ; அதுனாலே அவரு வல்லே இவரு வல்லே அப்படி சொல்லக்கூடாதூஉ. . மாடசாமி ரம்போ கிரெட் மேன் அவ் ரூ போலெ ஆளுங்கோ ரைல்வேலே டோடல் 4 ஆள் கூடோ கெடிக்காது. அவ்ளோ ஸ்ட்ரெய்ட் பார்வர்ட் , இத்தினி சர்விஸ்லே 5 பைசா கூடோ  ரயில்வே காசு தின்னதில்லே அவரூ. ரம்போரொம்போ tough அசைன்மென்ட் அல்லாம் 3 வீக்ஸ் 4 வீக்ஸ் ரெஸ்ட் இல்லாமே பாக்கும் அவரூ .

அவரூமேலே கம்ப்ளெயிண்ட் குத்துட்டீங்கோ. HR சீப் டேவிட் ரொம்போ பீல் ஆயிட்டாரு -மாடசாமி மேலே காம்ப்ளெய்ண்ட்டா.? அது அக்கவுண்ட்ஸ் சீப் PK வரிக்கும் போயி அவரூ மாடசாமி மேலே DETAILED ENQUIRY பண்ண சொல்ல,

கம்ப்ளீட் என்கொய்ரி செஞ்சு இப்போ மாடசாமி ஒரு ABSOLUTE LOYALIST -ப்ரூவ் ஆய்டுச்சு   

என்கொயரி ஆபிஸர்ஸ் அல்லாம் மாடசாமி FACE பண்ணமுடியாம எக்ஸ்க்யூஸ் கேட்டுகினு CREST FALLEN ஆய்ட்டாங்கோ.

அவ்ளோ ஏன் PK சார் கூடோ மாடசாமி கிட்டே மண்ணி பூ கேட்டாரு [அவரு தான் என்கொய்ரி சொன்னாரூ அதூ அவர்க்கு ட்யூட்டி ;ஆனா உங்க அவ்ஸரோம் பெர்ய டிஸ்டர்பன்ஸ் ஆச்.சீ ; மாடசாமி எதும் கேக்கவாணாம் தான் சொன்னாங்கோ. ஆனா எனிக்கி கான்ஷியன்ஸ் இருக்கி அதுனாலே உங்கள் கி சொல்றேன் - இத்தினி தூங்குமூஞ்சிங்கோ இருக்குற ஆபீஸ்லே -THE BEST PERSON WAS BROUGHT TO SCRUTINY - SAD  VERY SAD என்று கண்களை துடைத்துக்கொண்டார் கேப்ரியல்.

இதி போலெ செய்யாதீங்கோ என்று கை கூப்பினார் கேப்ரியல்.  சுந்தரி உயிருடன் இறந்தாள் என்பதே சரியான விளக்கமாகும் இவ்விடத்தில்  மாடசாமி சுழற்றியிருக்க வேண்டிய சாட்டையை கேப்ரியல் சுழற்றினார். நாமறிந்தவரை ஹஹ் ஹ் ஹா என்றே குதூகலிக்கும் கேப்ரியல் கண்ணாடியை கழற்றி கண்ணை துடைக்கும் அவலம் நிகழ்ந்தது -ஒருத்தியின் எல்லையற்ற அவசரத்தால்.

சுந்தரிக்கு இதைவிட வலுவான. அடி கிடைத்திருக்குமா ? உனக்கு தெரிந்தது அவ்வளவு தான் போ என்றல்லவோ நடந்து கொள்கின்றனர் மாடசாமியும் ராமசாமியும்.

எந்த முகம் கொண்டு, இவர்களை நட்பு பாராட்டுவது.? சுந்தரி -எந்த சூழலில் அவசரப்பட்டு விட்டேன் என கேப்ரியல் சாருக்கு விளக்கினாள். அவர் புரிந்து கொண்டார்.

இங்கே ஆபீஸ் நம்ப வீடு போல அல்லாரும் சந்தோசமா வேலை செய்வோம் அங்கே யார்க்கும் கம்ப்ளெயிண்ட் வேணாம். ரிக்வஸ்ட் குட்த்தா அல்லாரும் HELP செய்வாங்கோ. OK -GOOD LUCK என்று அனுப்பிவைத்தார்.  .

முத்துலக்ஸ்மீ சூப்பர் பிரிண்ட் கொடுத்தாள். மிகவும் நன்றி பாராட்டி, விடை பெற்றாள் சுந்தரி.

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...