Friday, July 26, 2024

SALEM SUNDARI-34

 SALEM SUNDARI-34

சேலம் சுந்தரி-34

சூடு வாங்கிய சுந்தரி மூடு அவுட் ஆகி மூடிய வாயுடன் அமர்ந்து அவ்வப்போது கர்சீப்பை ப்புப்ப்  என்று சூடாக காற்று ஊதி கண்களை ஒற்றிக்கொண்டிருந்தாள். 9.55 am மாடசாமி வந்தார் அனைவர்க்கும் வணக்கம் சொன்னார். சூடுபட்ட சுந்தரியை பார்த்து புரிந்துகொண்டார் அம்மையாருக்கு மூட் அவுட் .சரி, தானே சரியாகிவிடும்; நாம் ஏதாவது ஆறுதல் சொல்லப்போக ஏனைய பெண்களுக்கு கோபம் வந்து மாடசாமி ரொம்பதான் சுந்தரியைத்தாங்கறாரு -அவ சின்னவ அதான் இப்பிடி என்று எதையாவது பற்ற வைத்து விடுவர்.

சுப்புரெத்தினம் வேறு, அவல் கிடைக்காதா என்று ஆவல் கொண்டு காவல் காப்பவன் போல் பார்த்துக்கொண்டே இருக்கிறார். அது போதும்-- வத்தி வைக்க, என்று மாடசாமி அமைதியாக              வேலையைப்பார்த்துக்கொண்டிருக்கிறார். அடுத்த வாரம் லைன் ட்யூட்டி, திருச்சி சென்னை; சென்னை-விஜயவாடா விஜயவாடா   சென்னை மீண்டும்    சென்னை- திருச்சி தொடர்ந்து 4 நாள் ட்யூட்டி அதாவது இரவில் பயணம், பகலில் ஓய்வு, மீண்டும் இரவில் பயணம் இப்படி 4 நாள் . சர்ர்ட்டை பர்த்து பேப்பரில் குறித்தார் தெளிவாக பேப்பரில் எழுதி செக்ஷனில் 4 காப்பி [3 பெண்களுக்கு, 1 சுப்புரெத்தினத்துக்கு ] அவரவர் கையில் கொடுத்து இந்த தேதிகளில் நான் இல்லை என்றால் தேதியை சரிபார்த்து பின்னர் புகார் சொல்லுங்கள்.

 போகிறபோக்கைப்பார்த்தால், பாராளுமன்ற கமிட்டீ விசாரணைக்கு வந்துரும் போல இருக்கு.

அப்பா அப்பவே சொன்னாரு “நாலு எழுத்து படிச்சு--கம்பியூட்டர் பிரிண்டர்னு எதையாவது சொல்லிக்கிட்டு உருப்படப்பாருடான்னாரு. . கேக்கல்ல இப்ப பகல்/இரவு வெளியூர் ரயில் பிளாட்பாரம், வெயிட்டிங் ரூம் னு அலையறேன். அவசரப்பட்டு புகார் சொல்லாதீங்க.

சொல்ற புகாரை செக்ஷனிலேயே சொல்லுங்க . இவ்வளவு சர்வீஸ்ல இப்படி நான் அவமானப்பட்டதில்லே. அதுனால் வேண்டுகோளா  சொல்றேன்   கம்ப்ளெயிண்ட் கூட  என்ன தண்டனை னு  நாராயணசாமி அய்யர் கேட்டு வாங்குவார். அதுபோல சொல்லிட்டேங்கன்னா என்கொய்ரி அது இதுனு கஷ்டப்படாம சுப்புரெத்தினம் சாரே முடிச்சுடுவார் என்று அனைத்துப்பெண்களுக்கும் கை கூப்பினார்

என்ன மாடசாமி சார் இப்பிடி பேசறீங்க? நீங்க எவ்வளவு சீனியர் /உங்களை யார் என்ன சொல்ல முடியும் ? சொன்ன அவங்க தெய்வத்துக்கிட்ட தான் பரிகாரம் தேட முடியும். தயவு செய்து அப்படி பேசாதீங்க எனக்கே நெஞ்சு வலிக்குது. உங்களுக்கு எவ்வளவு வலி இருக்கும்? போகுது விடுங்க . எதுவுமே தெரியாம எல்லாம் தெரிஞ்சுட்டதா நெனச்சுக்கிட்டு ரூல் பேசறவங்க இப்படித்தான் ஏதாவது தப்பு பண்ணிப்புடறாங்க. அது வேல பாக்குற இடத்துல வேண்டாத கசப்பை உண்டாக்குது. எல்லாரும் நல்லா புரிஞ்சுக்குங்க வேல பாக்குற இடத்துல நம்ம கௌரவமான நபர் னு 4 பேர் சொன்னா தான் வீட்டுல சாப்பிட்டு தூங்க முடியும். ஆபீசை நரகமாக்கிட்டு யாரும் அமைதியா வாழ முடியாது.

தப்பு யார் பண்ணியிருந்தாலும் மரியாதையா எந்திரிச்சு வந்து மன்னிப்பு கேளுங்க. உங்களை யாராவது இதுபோல சொல்லிருந்தா உடனே women rights bureau க்கு தந்தி ஈ மெயில்  னு . . பறக்குமே,  பாவம் பெரிய மனுஷன் அமைதியா கடந்து போய்ட்டாரு. எவ்வளவு காயப்பட்டிருந்தா தன்னுடைய ட்யூட்டி லிஸ்ட் குடுத்து புகார் சொல்லாதீங்கன்னு வேண்டுகோள் வைக்கிறார்.. உங்களை மன்னிப்பு கேக்க சொல்ல நாங்க இங்க வேலை க்கு வரல்ல.  

புடிக்கலைனா சொல்லுங்க மானாமதுரை, தூத்துக்குடி, இந்தப்பக்கம் தேவகோட்டை ரஸ்தா இங்க போஸ்ட் இருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கிக்குடுத்துடறேன்.

மாடசாமி சொன்னார்

"போறாங்க சார் விடுங்க. அவங்க வெளியூர் போய் என்ன ஆகும் . அவசரத்துக்கு பெரிய டாக்டர் கூட கிடையாது தூத்துக்குடி/ காரைக்குடி, மதுரை இங்க போனா தான் ரயில்வே ஆஸ்பத்திரி. நீங்க பதறாதீங்க அல்சர் வந்துரும் 

யாரும் எதிர்பார்க்காத வினாடியில் ஓடி வந்த சுந்தரி மாடசாமி காலில் விழுந்தாள்; பெரிய பாவம் பண்ணிட்டேன் தயவு செய்து மன்னிச்சேன் னு ஒரு வார்த்தை சொல்லுங்க சார் என்று அழுதாள்.

சார் தான் மன்னிப்பு கேக்க சொன்னார். அவர்தான் செக்ஷன் தலைவர் அவருகிட்ட மன்னிப்புகேட்டு  வாங்கிக்குங்க அது போதும் என்றார் மாடசாமி. இப்போது சுப்புரெத்தினத்திடம் தாள் பணிந்து மன்னிப்புக்கோர அவர் இதெல்லாம் நீங்களா வரவெச்சுக்கிட்டீங்க

இப்படி எல்லாம் பண்ணாதீங்க. நமக்கு யாருக்குன்னாலும் ஓடி ஓடி உதவி பண்றவர் மாடசாமி அவர் கடமை தவறாதவர்.

எல்லா அதிகாரிகளுக்கும் மாடசாமின்னா தனி மரியாதையே உண்டு. இதெல்லாம் தெரியாம பேசக்கூடாது.  . போங்க சாமி கும்பிட்டு வேலையைப்பாருங்க இனிமே இப்படி செய்யாதீங்க என்றார் சுப்புரெத்தினம் .

ஒரு வழியாக 3 இடத்தில் [கேப்ரியல் /மாச-ராச/ சுப்புரெத்தினம்] நல்ல அறிவுரை பெற்று தெளிந்தாள்  சுந்தரி.

எவர் மீதும் சிறிதும் கோபம் வரவில்லை சுந்தரிக்கு. எல்லாம் ஆஞ்சநேயர் ஏற்பாடு தான் எப்படி வரிசையா 20 நாள் துன்பத்தை 3 முக்கிய இடங்களும் அறிவுரையும் மன்னிப்பும் வழங்க ஏற்பாடாயிற்று என்றால் அனுமன் விளையாட்டு தான் வேறென்ன? 

தொடரும்                     அன்பன் ராமன்

No comments:

Post a Comment

GINGER

  GINGER Ginger has a global value for its utility as a spice and also as a medicinal supplement in alleviating digestive disorders, slugg...