Thursday, July 25, 2024

MUSIC DIRECTOR VEDHA-3

 MUSIC DIRECTOR VEDHA-3

இசை அமைப்பாளர்  வேதா -2

மேலேபறக்கும் ராக்கெட்டு  ஜமுனா ராணி , இசை வேதா

அன்பு எங்கே [1958]

ஆதி கால தமிழ் பாடல்கள் பெண் குரலில் மூவரை சுற்றி அமைந்தவயே [ லீலா , கோமளா, ஜமுனா ராணி ] அந்நாளில் இதுபோன்ற மயக்கம் தரும் ராகம் ,ரகம் எதுவாயினும் முதல் வாய்ப்பு ஜமுனா ராணிக்கே. இசை அமைப்பாளர்கள் விரும்பும் கவர்ச்சியை குரலில் கொணரும் திறன் கொண்டவர்.. இப்பாடல் அந்நாளில் மிகவும் பிரபலம். கேட்டு ரசிக்க இணைப்பு இதோ 

https://www.google.com/search?q=anbu+enge+movie+song+mele+++parakkum+rochettu++video+song+&newwindow=1&sca_esv=3b07b09e3325eaa7&sca_upv=1&sxsrf=ADLYWIL-vTNnHQ_toiqUrVUYXNqyZCc vedha

Anbu enge 1958 meleparakum jacket jamuna rani

பார்வை ஒன்றே போதுமே , யார் நீ [1963] வேதா , டி எம் எஸ் எல் ஆர் ஈஸ்வரி

இது ஓர் அமைதியான கிறக்கம் தரும் பாடல் அதனால் தான் எல் ஆர் ஈஸ்வரி குரல் தேர்வானது. டி எம் எஸ் இவ்வளவு அமைதியாக பாடிய பாடல்கள் வெகு சிலவே .. வெகு நேர்த்தியான டூயட்; இசைத்தொகுப்புகளும் மெல்ல வருடுவதை உணரலாம். ஜெய்சங்கருக்கென்றே செதுக்கப்பட்ட காட்சி.

கண்டு மகிழ இணைப்பு இதோ  

Paarvai ondre podhumaa yarnee 1963  vedha tms lre

https://www.google.com/search?q=yaar+nee+song+paarvai+ondre+podhume+video+song&newwindow=1&sca_esv=3b07b09e3325eaa7&sca_upv=1&sxsrf=ADLYWIIWAMJGwB6IGqi2dHgr4ENKM_qv0A%3A172163

 எனக்கொரு ஆசை இப்போது [எதிரிகள் ஜாக்கிரதை -1967 ] டி எம் எஸ் , பி சுசிலா

ரவிச்சந்திரன்  எல் விஜயலக்ஷ்மி இருவருக்கான டூயட் . ரவிச்சந்திரன் குரலில் டி .எம்.எஸ் எப்படி பொருந்தியுள்ளது . நடனத்திற்கு குறைவில்லை . சில இடங்களில் கும்மாளம் அதுவும் எல் வி விரைந்து ஆடிப்பாடுகிறார். கேட்டு மகிழ இணைப்பு

enakkopru aasai ippodhu edhirigal jaakk 1967 vedhaa tms ps ravich l v

https://www.google.com/search?q=enakkoru+aasai+ippodhuvideo+song+&newwindow=1&sca_esv=3b07b09e3325eaa7&sca_upv=1&sxsrf=ADLYWIKGyErJBxdCCr4XfJW0mb4Yo8ZjOg%3A1721630874711&ei=mgCe

ஓஹோ எத்தனை அழகு [அதே கண்கள்-1967] கண்ணதாசன் , வேதா, டி எம் எஸ், பி சுசீலா

நான் அறிந்த வரையில் வேதாவின் இசையில் வந்த வண்ணப்படம் இதுவே என்றெண்ணுகிறேன்.          

ஹிந்தி   தழுவல் எனினும் கேட்க நல்ல பாடல். பலமான கருவிகளின் ஆதிக்கம் கோரஸ் என பயணிக்கும்

மைசூர் பிரிந்தாவனின் அன்றைய ரம்யம்.

இன்றோ அங்கு போவதே வீண் என்ற நிலையில் அழகிய காட்சியை அலங்கோலமாக்கி , மனம் வலிக்கிறது. சொல்லப்போனால் மைசூரில் பார்க்க நகருக்குள் அரண்மனை, சாமுண்டிகோயில், வழியில்  லலித்மஹால் இவ்வளவு தான்.

மாலைநேரத்தில் அமைதியாய் காலாற நடந்து திரிந்த கண்ணன்பாடி அணைப்பகுதி கொடூரமாக சிதைக்கப்பட்டுள்ளது. . வேதனையோடு புலம்புகிறேன். எனது கல்லூரி நாட்களில் வீட்டிற்கு வரும்  விருந்தினர் பலரையும் நான் தான் அழைத்துச்செல்வேன். அவர்கள் மகிழ்ச்சி எங்களுக்கு ஊக்கம் தரும். இன்று யாரையாவது கூட்டிச்சென்றால் நீ இடம் தெரியாமல் எங்களை ஏமாற்றிவிட்டாய் என்ற பழி சுமக்க நேரிடும் . இந்த வீடியோ பார்த்தபின் இன்றைய பிருந்தாவன் அறிந்தோர் என் வலியில் பங்கு கொள்வர். .

https://www.google.com/search?q=oh+ho+eththanai+azhagu+video+song+&newwindow=1&sca_esv=3b07b09e3325eaa7&sca_upv=1&sxsrf=ADLYWIIIcxnAyJE0tsf5rpsYZkz1s38TLQ%3A1721631439177&ei=zwKeZq6v adhey kangal vedha kd tms ps  1967

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம் [4 கில்லாடிகள்] கண்ணதாசன் , வேதா ,                டி எம் எஸ், பாரதி

ஆம் பாரதி, சொந்தக்குரலில் பாடிய சிலவற்றில் இதுவும் உண்டு.

ஒருசிலர் சுசிலா என்றும் வாதிடுவர், ஆனால் பாடலில் பெண் குரல் வியாபகம் [range ] பார்த்தால் விளங்கும் . நல்ல பாடல் பார்க்க ரசிக்க இணைப்பு இதோ

sevvaqnaththil 1 natchaththiram [4 killaadigal 1969 ] kd  veda tms bharathi jay bhaarathi

https://www.google.com/search?q=sevvaanaththil+oru+narchaththiram+video+song+&newwindow=1&sca_esv=3b07b09e3325eaa7&sca_upv=1&sxsrf=ADLYWIJvnvv80tag59BQ2N39i6IclfgVZA%3A1721631333599

இத்துடன், இசை அமைப்பாளர் வேதா குறித்த தொகுப்பு நிறைவு பெறுகிறது.

நன்றி

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...