Wednesday, July 24, 2024

T M SOUNDARARAJAN-14

 T M SOUNDARARAJAN-14

டி எம் சௌந்தரராஜன் -   14       

நினைத்தேன் வந்தாய் [காவல்காரன் -1968] வாலி, எம் எஸ் வி, டி எம் எஸ் , சுசீலா

அதியற்புதமான, டூயட் வகைப்பாடல். எகிப்திய வகை இசை கலவை களும் தாளக்கட்டுகளும் , சிறப்பாக தொகுக்கப்பட்டு வெற்றி அடைந்த பாடல். அன்றைய ஜெயலலிதா வின் நடன அசைவுகள் பிரமிக்க வைக்கும் விறுவிறுப்பும் நளினமும் கொண்டவை அதிலும் பாடல் முழுவதும் ஒரே நடன இயக்கங்களும் தாளக்கல வைகளும் -1968 இல் பெரும் வரவேற்பைப்பெற்றன.                                                                                                  கேட்டு மகிழ இணைப்பு இதோ https://www.google.com/search?q=NINAITHTHEN+VANDHAAI+VIDEO+SONG+ng+download&newwindow=1&sca_esv=8c2b0740c73d74e6&sca_upv=1&sxsrf=ADLYWIJSeTX4-ZGNZQLSPUkDtKpiHglnEQ%3A17210 KAAVAL KAARAN 1968 VAALI MSV TMS PS

அந்நாளில் "புதிய பூமி" பாடல்களைப்பொறுத்தவரை பெரும் வெற்றி ஈட்டியவை என்றே குறிப்பிடலாம்.

எப்படி 1964 ம் ஆண்டு தமிழ் சினிமாவின் இசை க்கு பொற்காலமோ அதே போல் 1968 எம்ஜியார் படப்பாடல்களுக்கு ஒரு பொற்கால சரித்திரம் எனில் தவறில்லை.

நான் உங்கள் வீட்டுப்பிள்ளை  [புதியபூமி-1968] பாடல்: பூவை செங்குட்டுவன் இசை : எம் எஸ் வி, குரல் :டி எம் எஸ்

"நான் ஆணையி ட்டா ல்" போலவே வேறொரு நிலையில் ஓங்கி உச்சம் தொட்ட பாடல் "நான் உங்கள் வீட்டுப்பிள்ளை". எம் எஸ் வி இது போன்ற பாடல்களில் பல்லவியின் முதல் அடியை பெரும் அறிவிப்பாகவே பட /பாட வைப்பார்  அப்படிதான் "நான் உங்கள் வீட்டுப்பிள்ளை" என்றதும் குழல் ஒலித்தபடியே மீண்டும் பாடிடும்போது நான் உங்கள்வீட்டு    பிள்ளை என்று சற்று பிரித்து பாட பாடல் பெரும் வரவேற்புப்பெற்றது. பாடலை ஒரு மனோலோகத்தில் மிதக்க வைத்தது, தாள துடிப்பும் தொடர்ந்து பயணிக்கும் பியானோ அதிர்வுகளும் .கூர்ந்து கேட்டால் நளினம் தெரியும். டி எம் எஸ் அவர்களின் குரல் காட்டும் பாவம் சிறப்பானது.

கேட்டு மகிழ இணைப்பு இதோ .    

NAAN UNGAL VEETTU PILLAI https://www.google.com/search?q=NAN+UNGAVETTU+PILLAI+VIDEO+SONG&oq=NAN+UNGAVETTU+PILLAI+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECE POOVAI SENGUTTUVAN MSV TMS

விழியே விழியே உனக்கென்ன வேலை [புதிய பூமி -1968] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் , பி சுசீலா

ஜெயா -எம்ஜி ஆர் இணைந்த அதி விறுவிறுப்பான ரொமான்டிக் பாடல்.. இருவரின் ஊடல் பாடல், ஆடல் இயல்பாக அமைந்திருப்பதும் பெண் கேட்கும் கேள்விகளும் கவிஞருக்கே சாத்தியம்.

இடைவிடாதகு குலுங்கிகுலுங்கி ஆடும் நடனம் வெகு சிறப்பான படப்பிடிப்பு. இது போன்ற பாடல்கள் கனவாகிப்போனது காலக்கொடுமை அன்றி வேறென்ன? நடனத்தையும் கானத்தையும் ரசியுங்கள் 

இணைப்பு இதோ

https://www.youtube.com/watch?v=jn1DU1cgaEY&list=RDVFdPCJFJ8J4&index=4 puthiya boomi               K D  TMS PS MSV 1968

சின்ன வளை முகம் சிவந்த வளை [புதிய பூமி] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் , பி சுசீலா

 வளை என்று சிலேடை மொழியில் பாடலை தொடுத்துள்ளார் கவி அரசு . இசை கேட்கவே வேண்டாம் துள்ளலும் துடிப்பும் பாடலை சுமக்க காட்சியில் நடனமே பிரதானம். பின்னாளில் ஏதோ நடனம் என்றாரே இந்த வகை நடனங்களில் எவ்வளவு இயல்பான துடிப்பு மிளிர்கிறது.. அந்நாளைய பாடல்கள் சீராக சுவைகுன்றாமல் இயங்கியதன் மகதத்துவத்தை உணரவைக்கும் பாடல்களில்தலையானது இது.

கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=chinna+valai+mugam+sivandhavalai&oq=chinna+valai+mugam+sivandhavalai+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIGCAEQIxgnMgoIAhAAGIsDGO8FMgoIAxAAGIsDGO8FMgoI

வளரும்

நன்றி அன்பன் ராமன்

No comments:

Post a Comment

OLD MOVIE SONGS -4

  OLD MOVIE SONGS -4 பழைய திரைப்படப் பாடல்கள்-4 சென்ற பதிவில் கலைக்கோயில் படத்தில் " நான் உன்னை சேர்ந்த செல்வம் " பாட...