Tuesday, July 23, 2024

ARE THESE DIFFICULT?

ARE THESE DIFFICULT?

இவை என்ன கடினமா ?

இப்படிக்கேட்டால் என்ன புரிகிறது என்று புலம்ப வேண்டாம். எப்படிக்கே ட்டால் தான் என்ன -புரிந்துவிடுகிறதா என்ன? நான் இப்போது சொல்ல வருவது சிறுவர் சிறுமியர் மேற்கொள்ள வேண்டிய சில எளிய விளையாட்டு முறைகள். இதனால் மனம் ஒருமுகப்படும், உடலில் சோம்பேறித்தனம் குறையவும் சுறுசுறுப்பு அதிகரிக்கவும் வாய்ப்பு உண்டு.

என் பையன் சோம்பேறியானால் உனக்கென்ன? என்று என் தந்தையாரையே 4 வருடங்களுக்கு முன்னால் கேட்டேன் அவர் அம்மாவையும் அழைத்துக்கொண்டு போடா என்று ஒரே வார்த்தையில் முறித்துக்கொண்டு சொந்த ஊருக்கே போய் விட்டார். ;நான் அதற்கே கவலைப்படவில்லை , உன் வேலையைப்பாரய்யா என்கிறார் ஒருவர்

என் வேலையைத்தான் பார்க்கிறேன் ஆனாலும் "உன் வேலையைப்பாரய்யா" என அவ்வப்போது எச்சரிக்கை ஒலிக்கிறது.. ஆம் நான் சொல்வதும் எச்சரிக்கை தான்  என்று புரிந்து கொள்ளுங்கள் .

குர்குரே , லேஸ் , பிங்கோ,என்று காற்றடைத்த பைகளில் கிடைக்கும் 7 துண்டுகளை ரூ 20/-க்கு வாங்கி உங்களின் செல்வச்செழிப்பை வெளிப்படுத்துவது புரிகிறது..

காற்றடைத்த பையில் இருக்கும் இது போன்ற பலப்ப குச்சிகள்  , குடலுக்கு வெடி வைக்கும் -அவ்வளவு ரசாயனம் கலந்திருக்கிறது. இல்லையேல் அந்த பையை ப்பிரித்ததும்  சிக்கு நாத்தம் ஊரெங்கும் பரவி மாநகராட்சி சுகாதார அதிகாரி மாலை 5.45 6.00 மணிக்கு கூட hat அணிந்து கொண்டு ஓடி வருவார்.  ஆகவே HIGHLY PRESERVED and AGGRESSIVELY MARKETED.

படிப்படியாக இந்த விரைவு உணவுகள்  உடலில் எதிர்பாராத விளைவுகளை தோற்று விக்கும் அதனால் நமது ஆரோக்கியம் தோற்று வைக்கும் [தோற்று விடும்]. நல்ல உணவு வகைகள் தின் பண்டங்கள் இவற்றை வீட்டில் செய்து உண்ண  , சுவையும் ஆரோக்கியமும் மேம்படும். ஒரு வீங்கிய தோற்றமும் மந்த செயல்களுடன் சதைப்பிண்டங்களாக இருக்கும் சிறுவர் சிறுமியர் உடல் மெல்ல சீராகும். .சீரான உடல் நிலை /உடல் எடை இரண்டும் இளம் மனங்களையும் உடல்களையும் சுறுசுறுப்பாக செயல்-          படத்தூண்டும். அது தான் விளையாட்டில் ஈடுபாடு கொள்ள ஒருவரை தூண்டும்.

விளையாட எங்கே நேரம் இருக்கிறது என்று ஞானி போல் பேசாதீர்கள் ட்யூஷன் போக அதி காலை முதல் இரவு 9.00 வரை நேரமிருக்கிறது. ஆனால் மாலையில் ஒரு அரைமணி நேர விளையாட்டிற்கு .நேரமில்லை என்று பேசி உடல்./மன   மேம்பாட்டிற்கு தடை விதிக்காதீர்கள். அந்நாளில் சிறார் விளையாடாமலா பயின்றார்கள்? மார்க் என்னும் மாயையை துரத்திக்கொண்டு காலம், பொருள், நிம்மதி அனைத்தையும் தொலைப்பதற்கு பதில், உடல்/மன வலிமை இன்றி சாதிக்கப்போவது என்ன? என்று சிந்தியுங்கள்.

அண்ணா பல்கலையில் எஞ்சினீரிங் முடித்து துபாயில் பெட்ரோல் நிலையத்தில் வேலை செய்ய வேண்டுமா?

சிறிது நேரம் மாலையில் விளையாடினால் என்ன? கூட்டமாக கிரிக்கெட்டும் ஹாக்கியும் தான் ஆட வேண்டுமா ?  .

ஏன் பச்சைக்குதிரை ஆடலாமே ? என்ன பச்சைக்குதிரையா ? என்கிறார்கள்

ஆம் இருசிறுவர்கள் இருந்தால் போதும் . ஒருவர் குனிந்து நின்று இடுப்பில் இருந்து தலை வரை பூமிக்கு இணையாக நிற்க, மற்றவர் ஓடிவந்து குனிந்து நிற்பவனைத்தாண்டி விளையாடி குதிப்பர் . இது தான் பச்சைக்குதிரை. இப்படி மாறி மாறி இருவர் தாண்டவும் நிற்கவமும் விளையாட எந்த உபகரணமும் செலவும் இன்றி விளையாடி ஆரோக்கியமாக இருந்தனர்.

 இன்னொன்று:   உப்பு மூட்டை விளையாட்டு.

சிறுவர்இருவர் விளையாடி மகிழ்வர். ஒருவர் மற்றவனை முதுகில்  சுமந்து சிறுது தூரம் நடப்பது . பின்னர், சுமையும் சுமப்பவரும் இடம் மாறி விளையாடுவர். இதுவும், கருவி, பந்து bat ஏதும் தேவை இல்லை. ஆனால் இது ஓரு எளிய உடற் பயிற்சி. . இவ்வாறு வீட்டுக்கு வீடு விளையாடிய பழக்கங்கள் மாறி பிஸ்சா , நூடுல்ஸ் , பாப் கார்ன் என கொறித்து சோபாவில் பிள்ளையார் போல் அமர்ந்து மகிழ்கின்றனர்.

சிறுமியர் விளையாட்டு

பாண்டி, தட்டாமாலை, ஸ்கிப்பிங் என்று 2, 3 பெண்கள் மாலைகளில் விளையாடி மகிழ்ந்தனர் இவற்றையும் இப்போது நகரங்களில் அறவே காணோம்.. இவ்வளவது எளிதான,செலவில்லாத உடல் பயிற்சியை புறக்கணித்தது  ஏன் தெரியவில்லை.

ஆரோக்கியமான உடலுக்கு விளையாட்டு அவசியம்; நல்ல உறக்கம் பெறவும் உதவும்.

சிந்திப்பீர்.

நன்றி

அன்பன் ராமன் 

No comments:

Post a Comment

OLD MOVIE SONGS -4

  OLD MOVIE SONGS -4 பழைய திரைப்படப் பாடல்கள்-4 சென்ற பதிவில் கலைக்கோயில் படத்தில் " நான் உன்னை சேர்ந்த செல்வம் " பாட...