Monday, July 22, 2024

SALEM SUNDARI-33

 SALEM SUNDARI-33

சேலம் சுந்தரி -33

கண்ட பலன்   புது விதமான என் கொயரி மாடசாமி

மாடசாமி தொடர்கிறார்

“இவன் ட்ரெய்ன்ல வந்தானா இல்ல வீட்டுல 2 நாள் தூங்கிட்டு வண்டி லேட்டு  னு தெரிஞ்சு மெல்ல 12 .30 க்கு வந்து ட்யூட்டி பார்த்தா மாதிரி ஆபீசுக்கு வந்துட்டானா  னு விசாரணை [அதுவும் வெவ்வேற வழிகள்ல, ஜங்க்ஷன் செக் , ட்யூட்டி ரிப்போர்டிங் டைம் , இன்டெர்மிட்டண்ட் ஸ்டேஷன் ரிப்போர்ட் , பிசிக்கல் டிக்கெட் ஸ்கோர் PHYSICAL TICKET SCORE , பீனல் ரெகவரி டெபாசிட் , வயலே டர்ஸ்' புக்கிங் [BOOKING  OF VIOLATORS ] எல்லாம் பாத்தாங்க ]. ஆனா 1 வாரத்துல .பாத்துட்டாங்கஓரு வாய் தண்ணீர் குடித்துவிட்டுமேலும் விளக்கினார்

“அதுனால, எந்த இடைஞ்சலும் இல்லாம LOYALTY எஸ்டாபிளிஷ் ஆச்சு. என்கொய்ரி ஆபீஸருங்க  வருத்தப்பட்டு கும்பிடு போட்டாங்க; PK  சார் கூட மன்னிப்பு கேட்டாங்க.. நான் ஒரு வார்த்தை கூட பேசல. எல்லாரும் தனித்தனியா மன்னிப்பு கேட்டாங்க.”

“நான் மனசாட்சிப்படி ட்யூட்டி பாக்குறவன், எந்த கொம்பனாலயும் என்னை ஒன்னும் பண்ண முடியாது. இன்னக்கி வரையும் 5 காசு திருட , .ரயில்வே சொத்த வீட்டுக்கு கொண்டுபோவல, சம்பளம் ஒண்ணை தான் நான் வாங்கிட்டு போயிருக்கேன். அதுனால, சுப்ரீம்கோர்ட்டே வந்தாலும் நான் அசர மாட்டேன். விசாரணையை வரவேற்கறேன்.

இப்ப தெரிஞ்சு போச்சுல்ல மாடசாமி எப்படிப்பட்ட     ஆள் னு -அது போதும் எனக்கு.

அவங்கவங்க வேலையைப்பாருங்க அது போதும்;      யார் வேலை செய்யலை னு பார்க்கிறதுக்கு தனியா ஆபீசோ. அதிகாரிகளோ கிடையாது.

இதுக்கு மேல என்ன வேணும்? கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டாங் கன்னா முடிஞ்சிருச்சா?.

எதுவும் நடக்காது. பின்ன ஏன் என்கொய்ரி வெச்சாங்க னு கேட்டா 4 TTE ஒழுங்கா ட்யூட்டி பாக்காட்டி FINANCIAL லாஸ் நெறைய வந்து வண்டிங்களே     ஓடாம ஆயிரும் . அதுவும் PK  அக்கவுண்ட் தலைவர் எவனையும் விடமாட்டார் -அதான் என்கொய்ரி வெச்சார் முடிவுல ரொம்ப பெருமையும் நிம்மதியும் அடைஞ்சார். என்னைப்பத்தி தெரிஞ்சதால, சஸ்பெண்ட் பண்ணாம என்கொய்ரி முடிச்சார்.

இதுக்கெல்லாம் கோவப்பட்டு என்ன ஆவும்?  நான் எப்பவோ, இதெல்லாம் தாண்டிட்டேன். நான் ஏன் எதுவுமே பேசலைனா --உங்கள என் அக்கா மக கௌரி மாதிரி பாக்குறேன்

உங்கள் தவறுகளுக்கு தண்டனை இறைவன் தருவார். அதுனால என்னால உதவிசெய்ய முடிஞ்சா செய்வேன் இல்லைன்னா பேசாம போவேன்.

சே சு "இவ்வளவு அசிங்கமா பிரச்சினையை உண்டாக்கிட்டு உங்க முன்னால நிக்கவே வருத்தமா இருக்கு . ரெண்டு அறைஞ்சாலும் வலிக்காது சார் ஆனா உங்களோட இந்த அமைதி உண்டாக்குற இந்த வலி ரொம்ப தீவிரமா உணர் றேன் சார் என்று கை  கூப்பி      விசும்பி அழுதாள்.

மாடசாமி சொன்னார்

“நான் முன்னமே சொன்னேனே "எனக்கும் உங்களைப்போல படிப்பு கம்பியூட்டர் திறமை னு இருந்தா இப்பிடி பகல் ட்யூட்டி, நைட் ட்யூட்டி கேரளா, ஆந்திரா,சென்னை,ஈரோடுனு வெய்யில் கருப்புக்கோட்டை போட்டுக்கிட்டு  அலையாம ஏதோ ஒரு ஆபீஸ்ல கௌரவமா வேலை பாத்திருப்பேன் . ஆண்டவன் கணக்கு --வேறை யா இருக்கு.

ஏதோ நல்ல நண்பர்கள், பெரிய கல்விமான்கள், உயர்ந்த எண்ணமும் திறமையும் கொண்ட அதிகாரிகள் நட்பு கிடைச்சு , ஒரு அமைதியும் சமூக மரியாதையும் கிடைச்சு கௌரவமா வாழறேன் கடமை தவறாம வேலை பாத்ததுல என்னைப்பத்தி யாருமே சந்தேகப்பட்டதில்லை .

இப்ப அதுக்கும் ஆபத்து வந்திருக்கு.

நான் ஒரு சாதாரண ஊழியன்0; நேர்மையும் ஒழுங்கும் தான் எனக்கு கேடயம்; அதை யார் மதிக்கிறாங்களோ இல்லையோ, அந்த இறைவன் காப்பாத்துவான் . நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு என்ற உபதேசத்தை நம்பி வாழறேன்.

அப்படியும்-- நான் அசிங்கப்படணும்னா -அதுவும் இறைவன் கட்டளை னு ஏத்துக்குவேன். இவை தவிர நான் வேறு எதுவும் அறியாதவன்  

ஒன்றுமே தெரியாதவன் போல் இருந்த ராமசாமி

"ஒரு அவசரம் எவ்வளவு குழப்பம் உண்டாக்கிருச்சு' ஓடிப்போய் கம்ப்ளெயிண்ட் பண்றதுக்கு முன்னால மாடசாமி எங்க னு என்கிட்டே கேட்டிருந்தால் தெரிஞ்சிருக்கும். அதை விட்டுட்டு இப்பிடி பண்ணிட்டியே ;

ஏதோ கௌரி சாயல் உன்னை காப்பாத்திருக்கு . அதுனால உன் இஷ்ட தெய்வத்துக்கிட்ட மனம் உருகி மன்னிப்பு கேட்டு நல்லபடியா நடந்துக்கோம்மா.

எதுல அவசரப்படணும் எப்ப வேண்டாம் இதெல்லாம் தான் அம்மா வாழ்க்கைக்கு முக்கியம்.

போ போய் FACE WASH பண்ணிட்டு வா என்றார் ராமசாமி..

 சரியான நேரத்தில் ஹாஹா ஹா என்று வந்தார் கேப்ரியல்.

பின்னர் என்ன மினி பார்ட்டி சாப்பிட்டனர் நால்வரும்.

நா அல்லா அட்வைஸ் குத்திருக்கேன் அது பாலோ பணிக்கோங்கோ என்றார் கேப்ரியல். மாடசாமியின் உயரம் எட்ட முடியாதது என்றுணர்ந்தாள் சேலம் சுந்தரி

ஒரு தெளிவான முடிவெடுத்தாள் [சிவகாம]சுந்தரி . வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக்கொண்டுபோனால் அங்கு எந்தமாதிரி மனிதர்களோடு காலம் தள்ள வேண்டி வருமோ? [முன்னர் சேலத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் முதலாளியின் மகன்களிடம் இருந்து காயம்படாமல் வெளியேறினால் போதும் என்று தானே இந்தவேலைக்கு தேர்வு எழுதி பிழைத்து வந்தேன்]  இங்கு இருக்கும் ஆண்கள் மிகுந்த கௌரவமாக நடந்து கொள்கின்றனர். கோபத்தில் கூட எல்லை மாறாமல்/ மீறாமல் பேசி அறிவுரை சொல்கின்றனர். எனக்கொரு அண்ணன் இருந்தால் கூட மாடசாமி போல் கிடைத்திருப்பாரா?  இனி அவர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் மாடசாமி சாருக்கு என்னால் ஆன எல்லாவற்றையும் செய்வேன்; ஆஞ்சநேயா இந்த நிலைப்பாட்டில் என்னை எப்போதும் வழி நடத்து என்று ஆழ்ந்து பிரார்த்தனை செய்து சபதம் ஏற்றாள். மினி பார்ட்டி முடிந்ததும் கை கூப்பி அனைவரிடத்தும் விடை பெற்று  வீடு திரும்பினாள் சுந்தரி..

தங்கையிடம் இருந்து போன் "அக்கா பனைமரத்துப்பட்டி சுந்தரம் செட்டியார் வீட்டில் இருந்து 5 பட்டு சேலை கொண்டு வந்து கொடுத்திருக்காங்க. எல்லாம் நல்லாருக்கு -என்ன செய்ய? என்றாள்.  

எல்லாத்தையும் போட்டோ எடு  வாட்ஸப் அனுப்பு. உனக்கு பிடிச்சதா 2 எடுத்துக்கோ, எனக்கு 1 போதும் . 3 புடவைக்கு எவ்ளவு னு கேட்டு சொல்லு நான் பேங்க் கணக்குக்கு அனுப்பிடறேன் . அவங்க அக்கவுண்ட் நம்பர் வாங்கி அனுப்பு. நானும் அம்புஜம் மாமிகிட்ட கேட்டு எந்த புடவை நல்லாருக்கும் னு கேட்டு தகவல் சொல்றேன். நீ அவங்க [சுந்தரம் செட்டியார்] அக்கவுண்ட் நம்பர் வாங்கி அனுப்பு .

தொடரும்

அன்பன்  ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...