Friday, August 2, 2024

SALEM SUNDARI-36

 SALEM SUNDARI-36 

சேலம் சுந்தரி-36

நீண்ட நெடிய மனப்போராட்டத்தில் பலரையும் அலசி ஆய்ந்த சுந்தரியின் மனம் சஞ்சலம் வெகுவாகக்குறைந்து ஒரு வித அமைதியும் பக்திப்பெருக்கும் மேலிட தன்னை முற்றிலும் புதியவளாக மாற்றிக்கொண்டாள், செக்ஷனில் அனைவரையும்  GOOD MORNING என்று சொல்லி  பேசும் சுந்தரி,  மாடசாமி க்கு மட்டும் இருகை கூப்பி வாய் பேசாமல் வணக்கம் சொல்ல  ஆரம்பித்தாள் .

மாடசாமி இதற்கெல்லாம் அசராத ஆளுமை அல்லவா? தன் பங்கிற்கு,.  GOOD MORNING என்றே உரக்க சொல்வார்.

மாடசாமிக்கு தெரியும் மௌன வணக்கம் வேறு வித விளக்கங்களுக்கு வித்திடும் என்று.  . அதிலும் ஒரே அறையில் 3 பெண்களில் ஒருத்தி வயதில் சிறியவள் என்றால் பிற பெண்கள் அவளுக்கு அனுபவமும் அறிவும் குறைவு என்றே நிர்ணயிக்கிறார்கள்.

அனுபவம் குறைவு தான் 

 ஆனால் -அறிவை அனுபவத்தோடு பிணைப்பது அறிவார்ந்த செயல் அல்ல. இவ்வகை எண்ணத்திற்கு விதிவிலக்காக சில பெண்கள் இருக்கக்கூடும்; பெரும்பாலான பெண்கள் சமத்துவம் பேசுவது ஆண்களோடு தானே ஒழிய பெண்களுக்கு இடையே அல்ல; அலுவலகங்களில் இந்த கோர தாண்டவம் அவ்வப்போது அரங்கேறுவதை எளிதில் காணலாம்; ஆனால் சுப்புரெத்தினம் கொஞ்சமும் தயங்காமல் வெளிச்சம் போட்டு பேசிவிடுவார்.

அவர் வாய்க்கு பயந்த சீனியர் பெண்கள் சுந்தரியை கிசுகிசுவில் சிக்கவைக்க முடியவில்லை. மாடசாமி [மாரியம்மா பக்தன்] ஆஞ்சநேய அவதாரம் என்ற கருத்து சுந்தரிக்கு ஏற்பட "அனுமன் த்வனி" காட்டிய குறியீடு என்றே கொள்ளலாம்.  வேறு எவரையும் அடையாளப்படுத்தாதவள் மாடசாமிக்கு தரும் தெய்வ நிலை  அடையாளம்- மனதில் விளைந்த எண்ணம் எனினும் ஏதோ ஒரு உந்துதல் இன்றி இது அமையுமா? இது அத்தனையும் சுந்தரியை பண் படுத்தியது. புண்பட்ட மனம் பண் பட்டது மட்டுமல்ல பண் பாடவும் தலைப்படலாம்-யார் அறிவார் ?  என்ன பண் பாடுவதா? ஆம் இப்போது சுந்தரி இருக்கும் மன நிலையில்,பேச்சை குறைத்தல், வேலையில் கவனம், பெரியவர்களிடம் பேசுவதில் எச்சரிக்கை இது மூன்றும் தான் தனக்கான பாதை என்று முடிவு செய்தாள் . எப்படி ஆளுக்காள் அறிவுரை சொல்ல 'பாதிக்கப்பட்ட' மாடசாமி அமைதி காத்து, ஆதரவை தயங்காமல் கொடுத்து தனது மனோவலிமையை நிறுவயதில் அவரை புண் படுத்திய  சுந்தரிஅழுதுஅழுது  பண் பட்டாள்  என்பது மறுக்கவொண்ணாத உண்மை..

 எனவே, மாடசாமியின் புகழை பண் பாட தயங்கமாட்டாள்   இப்போது எந்த குழப்பமும் இல்லை. அலுவக வேலை தவிர மாடசாமியிடம் தகவல் சொல்ல sms என்ற அமைதிச்சாலை உகந்தது என்று அவ்வாறே மாடசாமி சாருக்கு உணர்த்திவிட்டாள்.

சுந்தரியின்  எந்த முக்கிய தேவைக்கும் sms பறக்கும் -மாடசாமிக்கு , பதில் "yes , done " என்று வரும். இப்போது அதிகம் பேசாததால், சுப்புரெத்தினம்/ பிற பெண்கள், மாடசாமி சுந்தரியை வெளுத்துவங்கி விட்டார் போலும் அதுதான் சேலம், சிம்லா /ஆகும்பே, போல் அமைதியாக யிருக்கிறது என்று எண்ணினர். ஆனால் எவருக்கும் மாடசாமியிடம் இது பற்றி பேச துணிவு கிடையாது, எங்காவது நம்மை அறைந்து விட்டால் என்றது உள்மனம்  புழுங்கி தவிக்கிறார் சுப்புரெத்தினம்-- யாரிடம் கேட்பது-மாட சாமியையா? சுந்தரியையா . பெண்ணிடம் 

 ஏதாவது கேட்க -அவள் கொதித்துக்குமுறி  விட்டால் அனைவரும் சிரிப்பார்களே ; மாடசாமியிடம் கேட்டால் வாங்க கான்டீன் போவோம் என்று அங்கே போய் 50 பேர்முன்னிலையில் நையப்புடைத்து விட்டால் ?அரே  தேவுடா  . என்று ஒடுங்கிக்கிடக்கிறார்.

மாடசாமி என்ற ஒரு ஆசாமி அனைவர் வாயையும் இறுக மூட வைத்துவிட்டார் தான் ஒரு வார்த்தை பேசாமல். சுப்புரெத்தினம் செக்ஷனில் அமைதி; மாடசாமி இல்லை என்றால் மட்டும் சிலர் ஜாடையாக  பேசிக்கொள்கின்றனர். சுப்புரெத்தினத்திற்கு இந்த அமைதி ரசிக்கவே இல்லை எவரையும் கடிந்து கொள்ள முடியாது. ஏதாவது பேசினால் ஏதாவது களேபரம் ஆகி விட்டால்? ஒரே நடுக்கம்.  ஆனாலும் உள்ளூர பெருமை சுப்புரெத்தினத்துக்கு,எங்க செக்ஷன் ரொம்ப அமைதியா அமெரிக்கா ஆபிஸ் போலிருக்கு என்று வீட்டில் பெருமை அடித்துக்கொள்கிறார்

இரண்டாம் சனியில் மாடசாமி/சுந்தரி இருவரும் ராமசாமி வீட்டில் போய் கல்யாண பத்திரிகை 5 மாடல் புடவை 5 மாடல் காண்பித்து சில குறிப்பிட்ட புடவைகள் [1+2,] நல்ல பத்திரிகை மாதிரி தேர்வு செய்து சிறிது நேரம் நன்கு பேசி விட்டு வீடு திரும்பினர்.-மாசா, மற்றும் சுந்தரி.

 நன்றி 

தொடரும்

No comments:

Post a Comment

TURKEY BERRY -2

  TURKEY BERRY -2 Solanum torvum [Tam: Sundaikkaai] -2 Fresh fruits of Solanum torvum [Sundaikkaai] [per 100 gm] are reported to contain  ...