Thursday, August 1, 2024

RAOs IN TAMIL CINE MUSIC

RAOs     IN  TAMIL CINE MUSIC

திரை இசையில் "ராவ்" கள்

ஆரம்பகால தமிழ் திரை இசை கிட்டத்தட்ட முற்றிலும் ஆந்திர மாநில கலைஞர்கள் வசம் இருந்தது எனில் மிகை அல்ல,மேலும் தென்னின் திய மொழிப்படங்கள் அனைத்தும் சென்னையிலேயே தயாரான காலம். நடிகர் /நடிகையர், தயாரிப்பாளர் ஸ்டுடியோக்கள்,[பிரசாத் , விஜயா , வாஹினி ] இயக்குனர்கள் புல்லையா , வேதாந்தம் ராகவையா , யோகானந்த் , பிரகாஷ் ராவ் என்ற ஒரு ஆந்திரர்களின் செயல்பாட்டில் தான் தமிழ்ப்படங்கள் உருவாகின. அப்போது இசை துறை சினிமாவில் பல "ராவ்" களின் துறையாக இருந்தது. உதாரணம் ராஜேஸ்வர ராவ், சலபதி ராவ், பெண்டியாலா நாகேஸ்வர ராவ், என்று வரிசை  கட்டி நின்றனர். அனைவரும் கர்நாடக இசை அமைப்புகளில் ஆழ்ந்த ஞானம் பெற்றவர்கள். படங்களும் புராண இதிஹாச அமைப்புகள் எனவே அவர்களின் பங்களிப்பு எளிதாயிற்று.

அவர்களில்பெண்டியாலா நாகேஸ்வர ராவ் முக்கியத்துவம் கொள்கிறார். பி.சுசீலா என்ற பாடகியை கண்டெடுத்து வாய்ப்பளித்தவர்.

பிறர் [ராவ் கள் ] தத்தம் வகையில் சிறப்பாகப்பணியாற்றியோர்.

நமது முதல் தேர்வு  

Aadhi naarayana rao  [திரு ஆதி நாராயண ராவ்]

திரு ஆதி நாராயண ராவ் [நடிகை அஞ்சலி தேவியின் கணவர்] பல சிறப்பான பாடல்களை வடிவமைத்தவர்

தேசுலாவுதே தேன் மலராலே [மணாளனே மங்கையின் பாக்கியம் -1957 ] தஞ்சை ராமையாதாஸ் , இசை ஆதி நாராயண ராவ் , குரல்கள் கண்டசாலா, பி சுசீலா  மிகுந்தக ஆலாபநக்கிகள் தொடர்ந்து வரும் ஒரு கந்தர்வ வகைப்பாடல். மாறி மாறி புரளும் சங்கதிகள் . கேட்டு மகிழ [ YOU TUBE -Ananthakris தேர்வு செய்க].

 

இப்பாடலின் மேலான பண்புகளை QFR பதிவேற்றம் நன்கு விவரிக்கிறது. அதையும் இணைத்துள்ளேன். கேட்டு மகிழ்வீர் ஆதி நாராயண ராவ் காட்டியுள்ள ஜாலங்களை. 

https://www.google.com/search?q=QFR+SONGtHESULAAVITHE&oq=QFR+SONGtHESULAAVITHE+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABM

QFR

https://www.google.com/search?q=QFR+SONGtHESULAAVITHE&oq=QFR+SONGtHESULAAVITHE+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABM QFR  THESULAAVUTHE MM BAGYAM 1957 GANTA PS AN RAO

மணாளனே மங்கையின் பாக்கியம் -1957 இசை ஆதி நாராயண ராவ், பி சுசீலா 

அதே படத்தில் மற்றுமோர் தேவலோக பாடல் ஜெகதீஸ்வரா பாஹி பரமேஸ்வரா , மீண்டும் சுசீலாவின் குரலில் ரம்மியமான பாடல் கேட்டு மகிழ்வீர் .இணைப்பு இதோ

https://www.google.com/search?q=MANAALANE+MANGAIYIN+BAGYAM+SONGS+&newwindow=1&sca_esv=fb5f53e1472aa45c&sca_upv=1&biw=1600&bih=773&sxsrf=ADLYWIIAZ_VJd6KzjP2QoudKwepKiC5XNg JAGADEESWARA   PS ANR

மணாளனே மங்கையின் பாக்கியம் -1957 இசை ஆதி நாராயண ராவ், பி சுசீலா 

அதே படத்தில் அந்நாளில் வந்த பிரபல பாடல் "அழைக்காதே , நினைக்காதே " சுசீலாவின் குரலில் . அற்புதமான ஓட்டமும் , உற்சாகமும் தவழ கூடவே இழை ஓடும் சோகமும் கவலையும் பின்னிப்பிணைந்த கலவை. மானுடனுக்கும் தேவலோக மங்கைக்கும் மலர்ந்த காதலின் வியாபகம்பாடலின் அடி நாதம். . கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=azhaikkaadhe+ninaikkaadhe+video+song+download&newwindow=1&sca_esv=fb5f53e1472aa45c&sca_upv=1&sxsrf=ADLYWILPBCh_ivhB0H5uX-hvKDtdjBfAqQ%3A172197995198 MANAALANE MANGIYIN BAAGYAM 1957 PS, ADINRAO

அடுத்தவீட்டுப்பெண் 1958 , இசை ஆதிநாராயண ராவ்

அடுத்தவீட்டுப்பெண்

ஒரு நகைச்சுவை படம். டி ஆர் ராமச்சந்திரன் பக்கத்துவீட்டுப்பெண்ணை கவருவதற்காக பாடிக்கொண்டே இருப்பதாக காட்சி உண்மையில் அவருக்கு பாட வராது . பின்குரல்கொடுப்பவர் கே தங்கவேலு.நண்பர்கள் இசை வழங்குவதாக காட்சி . ஹார்மோனியம் ஒன்று தவிர இசைக்கருவிகள் எதுவும் இல்லாமல் நண்பர்கள் இசைக்கின்றனர் .friend ராமசாமி பஸ் களில் முன்னாளில் இருந்த பல்பு ஹார்ன் குழலை ஊதுகிறார் கருணாநிதி தகர டின்னில் , இருபுறமும் விளக்குமாறு கொண்டு ட்ரம் போல வாசிக்கிறார். தங்கவேலு பாட டிஆர் ஆர் வாயசைக்க நாயகி ர்ர்ர்க்கப்படுவதாக பாடல். "கண்ணாலே பேசி பேசி கொல்லாதே" பாடகர் பிபி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு திரை உலகில் நல்ல வாய்ப்பாக அமைந்த படம். பாடலை கேட்டு ரசிக்க இணைப்பு .  

https://www.youtube.com/watch?v=u8wQfFaT0IM KANNALE PESI PESI AN R PBS

அடுத்தவீட்டுப்பெண் 1958 , இசை ஆதிநாராயண ராவ்

கண்களும் கவி பாடுதே [திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன்]

பக்கத்துவீட்டு பையனை பாட்டுபோட்டியில் வீழ்த்த தனது பாட்டு வாத்தியாரை பாடவைக்கிறார் பெண் [அஞ்சலி தேவி]. அப்படியா சங்கதி என்று போட்டியில் நுழைந்து நண்பர்கள் பெரும் ஆளுமை காட்ட , பாட்டு வாத்தியார் உச்சஸ்தாயியில் ஸ்வரம் பாட வேகமாக முயன்று மூச்சு விக்கித்து என்று  சாய்ந்து விடுகிறார். திருச்சி லோகநாதன் பாட்டுவாத்தியாருக்கு பாட தங்கவேகலுவுக்கு சீர்காழி கோவிந்தராஜன் பாட போட்டியும் ஆலாபனையும் வேகமு ம் , உஷ்ணமும் எழுப்பியிருகிறது. கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.youtube.com/watch?v=GzT3RZxRQVw KANGALUM KAVI PAADUTHE TL, SG

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...