Friday, August 16, 2024

SALEM SUNDARI-40

 SALEM SUNDARI-40

சேலம் சுந்தரி- -40

அடுத்த ஞாயிறு காலை 10. 00 மணிக்கு சுபத்திரா, பெரியசாமி இருவரும் ராமசாமி இல்லம் வந்து அடுத்த 5 நிமிடத்தில் மாடசாமி -சுந்தரி வந்து சேர்ந்தனர். சுந்தரி பூ பழம் எல்லாம் நிறையவே கொண்டு வந்திருந்தாள்.

 வாசலில்பரபரப்பு,

டம் டம் என்று ஓசை; அம்ஜம் வாசலில் பெருமாள் வறார், சேவிச்சுட்டு வருவோம் என்றாள்

அனைவரும் வாசலில் குழுமினர். 2, 3 வீடுகள் அருகில் பெருமாள் நெருங்கியதும் எவரும் எதிர்ப்பாராத நிலையில் பெரியசாமி தனது நாதஸ்வரத்தில் ஒரு ராகம் இசைத்தான் அனைவரும் என்ன இவன் இப்படி வாசிக்கிறான் என்று மகிழ்ச்சியும் அதிசயமும் கலந்து வியந்தனர். 

கோவில் நாதஸ்வரகோஷ்டி எங்கோ வெகு தொலைவில் வாசித்துக்கொண்டிருக்க, பெரியசாமி பிரத்யேகமாக பெருமாளுக்கே வாசித்ததாக ஒரு தோற்றம் ஏற்பட்டது.

பட்டர் ரெங்கராஜன், ஒருகணம் நிறுத்தி தீர்த்தம் சடாரி வழங்கினார்.

பெரியசாமி மிகவும் நெகிழ்ந்தான்.

பட்டர் "கொழந்தே ரொம்ப நன்னா வாசிக்கறே நீ எந்த ஊர்?          அவன் "இலஞ்சி' ங்க .

கேரளாவா? இல்லீங்க தென்காசி திருனவேலி க்கு மேற்கே.

சௌக்கியமா இருப்பா என்று வாழ்த்தி  மேற்கொண்டு வீதி உலா தொடர்ந்தது. 

வீட்டினுள் வந்ததும் அம்ஜம் “ஏம்ப் பா [சுபத்ரா அவன் பேர் பெரியசாமி என்றார்].

பெரிய ஆசாமி தான் போல இருக்கு -அற்புதமா மல்லாரி வாசிச்சியே -ரொம்ப ரம்யம் ரொம்ப ரம்யம் என்று பாராட்டினார். சாமி புறப்பாடு இல்லீ ங்களா அதான் அந்த மல்லாரி வாசிச்சேன், எனக்கே பெருமையா இருக்குது என்றான்.

ஆமாம் --அம்மா நீங்க தஞ்சாவூரா ? --"பெரியசாமி  

அம்ஜம் "ஆமாம் ஏன் கேக்கற"? இல்ல சடார்னு மல்லாரி னு  சொன்னேங்களே -அது மாதிரி பேச தஞ்சாவூர் காரவுங்களுக்கு தான் வரும் என்றான் பெரியசாமி.

அம்ஜம் ராமசாமியை பெருமிதமாக ஓரக்கண்  பார்த்து [என்னய்யா சொல்ற என்பதாக], ராமசாமியோ ஜெரி யை துரத்தும் டாம் போல[TOM and JERRY ] [போறும் உன் தஞ்சாவூர் பெருமை] என்பது போல முறைத்தார். 

ரெண்டு பாட்டு வாசிப்பா என்று சுபத்திரா சொல்ல வாசலில் நிழல் ஆடியது

யாரோ- வராங்க, மேடம் என்றார் பேராசிரியை. அனைவரும் வெளியே பார்க்க, மஹாலட்சுமிபோல மிகுந்த தேஜஸ் கொண்டு வெங்கடலட்சுமி என்ற லட்சுமி மாமி வந்தார். [வேற யார்?- உனக்கு தெரியாதாடி? அவன் பேரே கழுகுடி" என்று இராமசாமியின் பெருமையை அம்புஜத்திற்கு அறிவித்த அதே அம்மையார்.]

வாங்கோ வாங்கோ என்றார் அம்ஜம்.

இல்ல, இப்ப பெருமாளுக்கு உங்காத்து வாசல்ல ஒருத்தர் மல்லாரி வாசிச்சார், ரொம்ப தெய்வீகமான வாசிப்பு -யாருனு தெரிஞ்சுண்டு போலாம் னு வந்தேன் என்றார் மாமி.

இதோ இவர் தான்-- என்று பெரியசாமியை, ராமசாமி அடையாளம் காட்ட, பெரியசாமி ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா என்று தரையில் விழுந்து நமஸ்கரித்தான். உடனே அட்சதையை வாங்கி தீர்க்காயுசா க்ஷேமமா   இருங்கோ பகவான் உங்களுக்கு எல்லா சுபிக்ஷமும் தருவார் என்று ஆசீர்வதித்தார் லட்சுமி மாமி.                 

                 உக்காருங்கோ 2 கீர்த்தனம் வாசிக்கப்போறார் என்றார் ராமசாமி.

வாதாபி கணபதிம் வாசித்ததும் அனைவரும் மயங்கி மனம் ஒன்றி கண்ணீர் உகுத்தனர்.

கிருஷ்ணா நீ பேகனே பாரோ -நிச்சயம் கிருஷ்ணர் வந்திருப்பார் அவ்வளவு நேர்த்தியான வாசிப்பு. சொல்லவும் வேண்டுமா? சுப்பிரமணி -விசாலாட்சி திருமணத்தில் நாதஸ்வரம் பெரியசாமி தான் என்று ஒருமித்த முடிவு ஏற்பட்டது.

சுந்தரிக்கு மகிழ்ச்சியும் பயமும் -எவ்வளவு எளிதாக அனைவரும் ஒருங்கிணைகிறோம்.இந்த யூனிவர்சிட்டி மேடம் மாபெரும் ஆளுமை தான் இவர்களுக்கு என்னால் என்ன செய்ய முடியும்?  [உள் மனம் கேலி செய்தது.  என்ன செய்ய முடியும்? என்கிறாயா -உன்னால் ஓடிப்போய் புகார் செய்ய முடியுமே? உனக்கு வேறென்ன தெரியும் என்றது]

 -வெட்கம் பிடுங்கி தின்கிறது- சுந்தரியை.

இது தான் மனசாட்சியின் உறுத்தல் அனைவரும் அதைக்கடந்த பின்னும் தவறு செய்தவர் உள்ளூர வருந்துவது தான் பெரும் தண்டனை.

அதை உணர்ந்த மாடசாமி அவளே தவித்து உணரட்டும் என்று அமைதி காத்தார். அவருக்கும் உள்ளூர எந்த கோபமோ வெறுப்போ இல்லை ஏன்? ஒன்று கௌரியின் பிரதியாக சுந்தரியை நினைக்கிறார். 2]அனுபவமில்லாத பெண் அவசரப்பட்டு விட்டாள். காலம் தரும் போதனை மிக வலுவானதாக இருக்கும்; நாம் வேறு சுடு சொல் பேசி வேலை பார்க்கும் ஆபீஸே அமைதியில்லாமல் வெறுப்பு குடிகொள்ளும்.

அது வேண்டாம் என்று ஆரம்பத்திலேயே முடிவெடுத்தார். அது சுப்புரெத்தினத்திற்கு ஏமாற்றத்தை தந்தாலும் சுந்தரிக்கு எப்போது அறை விழுமோ, அல்லது பலர் முன்னிலையில் உயர் அதிகாரிகளாக 4, 5   பேர் சேர்ந்து கொண்டு காய்ச்சி எடுத்துவிடுவார்களோ என்ற நடுக்கம் இருந்து கொண்டே இருந்தது..

மாடசாமி மீது உயர் மட்ட விசாரணை என்று முதலிலேயே தெரிந்திருந்தால், சுந்தரி இவ்வளவு இய்சல்பாக தங்கை கல்யாணம் பற்றி இவர்களிடம் பேசியே இருக்கமாட்டாள். அந்த முன்னேற்பாடே துவங்காமலே கூட போயிருக்கும். ஆனால் அனைத்தையும் எதிர்கொண்டு அனுபவித்து கடந்து சென்ற மாடசாமி, சிறு தயக்கமோ வெறுப்போ கொள்ளாமல் ஒவ்வொரு முறையும் சுந்தரியின் சூழ்நிலை கருதி அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். ஆனால் சுந்தரி ஏதாவது பேச வேண்டும் என்றால் பொது இடத்தில் நமது பொது நண்பர்கள் மத்தியில் தான் பேச்சு என்பதில் கறார் காட்டி அற்புதமாக வெட்டி பேச்சு மற்றும் புனையப்பட்ட கதைகளுக்கு வாய்ப்பே இல்லாமல் தற்காத்துக்கொள்கிறார்..

இதெல்லாம்,  சுந்தரியை கிட்டத்தட்ட மாடசாமி -ராமசாமி இருவரின் அடிமை அல்லது சிஷ்யை எனும்படி பணிவுகொள்ள  வைத்துள்ளது.                  இவை அனைத்தும், அனுமன் விளையாட்டே.

முன்பொரு பதிவில் சுபத்திரா ஏன் இங்கு வந்தார் [அனுமன் விளையாட்டு என்றெழுதியிருந்தேன்] - அது இப்போது பெரியசாமி என்ற கலைஞனை பலர் பார்த்து வியந்து பாராட்ட அனுமன் களம் அமைத்துவிட்டார். நீ ஏன் அனுமன் செயல் என்றே பேசுகிறாய்? என்போர் கவனிக்க --இதில் முக்கிய நபர்கள் சுப்பிரமணி, விசாலாட்சி, சுந்தரி, PK மற்றும் உமா அனைவரும் ஆஞ்சநேய பக்தர்கள் எனவே பல நுண் அமைப்புகளை அனுமன் அமைத்து தருவதாக எழுதுகிறேன் [எப்படி மாரியம்மன் கௌரி, மாடசாமி, சுபத்திரா இவர்களுக்கு இஷ்ட தெய்வமாய் இருந்து உதவினாளோ] , அது போல் இப்போது அனுமன் மேற்பார்வையில் நிகழ்வுகள் அமைகின்றன.

தொடரும்                      அன்பன் ராமன்

2 comments:

  1. வெங்கட லட்சுமி என்கிற லட்சுமியின் resume ஐ பகிரவும். மறந்துவிட்டது.

    ReplyDelete
  2. இது என்ன வம்பா போச்சு . அது ஆரம்ப பகுதியில் வந்தது . அக்கம்பக்கத்தில் விசாரிக்கவும் . வெங்கடலட்சுமி RESUME கொடுத்தால் [MR .வெங்கடலட்சுமி ]அவர் -நரசிம்மன் விறகு கட்டையை தூக்கிக்கொண்டு வருவார். அதனால் பிறரை விசாரித்து அறியவும் .

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...