Thursday, August 15, 2024

ADDEPALLI RAMA RAO

 ADDEPALLI  RAMA  RAO

அட் டப்பள்ளி  ராமராவ் 

இவர் 1955 ம் வருடத்தில் வெளிவந்த "கணவனே கண் கண்ட தெய்வம் " படத்தின் பாடல்களுக்கு ஹேமந்த் குமாருடன் இணைந்து இசை அமைத்திருந்தார் . அனைத்தும் வெற்றிப்பாடல்கள் .

இன்னொரு முக்கிய தகவல்.  முக்கியமான பாடல்கள் அனேகமாக சுசீலாவின் குரலில் பதிவிடப்பட்டன.

 நாக லோகம் தொடர்பான கதை அமைப்பு என்பதால் இசையின் பரிமாணங்கள் நடன அசைவுகள் எதிலும் பாம்பின் பண்புகள் மேம்பட்டுள்ளதை அறியலாம். அன்றைய இளைஞன் ஜெமினி கணேசன் பல மகளிர் மனம் கவர்ந்த நடிகன் அந்நாளில் முன்னணி கதா நாயகன் . பாடல்களை பார்ப்போம் .

A RAMA RAV, HEMANT KUMAR

உன்னைக்கண்  தேடுதே [ கணவனே கண் கண்டா தெய்வம் -1955] கு மா பாலசுப்ரமணியம் இசை : ராம ராவ், ஹேமந்த்குமார், குரல் பி சுசீலா .

நாயகி [லலிதா ]ஜெமினிகணேசனை நினைத்து ஏங்கி அரைமயக்கத்தில் பாடுகிறார். இப்பாடல் முதலில் பானுமதியின் குரலில் பதிவானது. ஆனால், ஏதோ பிரச்சனையால்  பானுமதி விலகிவிட்டார் , பின்னர் சுசீலா பாடியுள்ளார். ஆனால் பாடலில் அவ்வப்போது ஒலிக்கும் 'விக்கல்'  , பானுமதியின் குரலில் பதிவாகி இருந்தது தான் என்று செய்தி . மிக்சிங் வேலை அந்தக்காலத்திலேயே இருந்திருக்கிறது. அரைமயக்க போதை நிலை உச்சரிப்புகளை சுசீலா நேர்த்தியாக கையாண்டுள்ளார். பாடலுக்கு இணைப்பு இதோ :

https://www.google.com/search?q=unni+kan+thedithe+video+song+download&newwindow=1&sca_esv=bb3d5d428ace1cb5&sca_upv=1&sxsrf=ADLYWILkoZq53abMmqe-2UGKaK5Qz1DI3w%3A1723005292378& unnai kan ps kumaa bala

எந்தன் உள்ளி துள்ளி விளையாடுவதும் எனோ -பி சுசீலா

மீண்டும் ஓர்  மயக்கும் பாடல் .லலிதா அபிநயம்செய்து கொண்டே பாடுகிறார் .மீண்டும் நாயகனைக்கவர நடனம் . இசையும், அசைவும் பாம்பின் அம்சங்களாக இடம்பெறக்காணலாம் இணைப்பு இதோ

https://www.google.com/search?q=ENDHAN+ULLAM+UNNAI+THULLI+VILAIYAADUVADHUM+I++video+song+download&newwindow=1&sca_esv=bb3d5d428ace1cb5&sca_upv=1&sxsrf=ADLYWIIFFJJFP1sMZZK endhan ullam thulli ps kumaa bala

அன்பில் மலர்ந்த நல் ரோஜா - பி சுசீலா

குழந்தையை உறங்க வைக்க அஞ்சலி தேவி பாடும் காட்சி. .மென்மையான அமைதியான பாடல். அந்நாளைய மரபை ஒட்டி அமைந்த தாயுள்ளம் ஒலிக்கும் உணர்வு கள் நிறைந்த பாடல். கேட்டு மகிழ இணைப்பு

https://www.google.com/search?q=anbil+malarndha+nal+roja+++video+song+download&newwindow=1&sca_esv=bb3d5d428ace1cb5&sca_upv=1&sxsrf=ADLYWIKE1Jjtugu8BW2F_e5-sLfSBW4aMg%3A17230062 ps

வெவ்வேறு வகைகளாக சில பாடல்களை தந்துள்ளேன்.

மேலும் வளரும்

நன்றி ,  அன்பன் ராமன்

1 comment:

  1. ஒவ்வொரு பதிவிலும் பாடல்களின் நுணுக்கங்களை விவரிப்பதுடன் நாம் அறியாத வெளிவராத செய்திகளையும்
    (உதாரணம்: பானுமதி-சுசீலா)
    பகிர்வதற்கு நன்றி. 👏

    ReplyDelete

G PAY JEEVAA -4

  G   PAY JEEVAA-4                    ஜீ - பே – ஜீவா- 4 சிறப்பு செருப்பு தயாரிப்பில் பெரும் புகழ் பெற்றான் . விடா முயற்சியால் ம...