Wednesday, August 14, 2024

T M SOUNDARARAJAN-17

 T M SOUNDARARAJAN-17

டி எம் சௌந்தரராஜன்-17

பாட்டு வரும் [நான் ஆணையிட்டால் -1966] வாலி, எம் எஸ் வி,  டி எம் எஸ், பி சுசீலா

ஒரு பாடல் கேட்பாரையும், பங்கேற்பவரையும் ஈர்க்க வேண்டும் என்று சொல்வதுண்டு. அப்படி ஓர் பாடல் இது. 1966 எம் எஸ் வி -தனித்து செயல் பட துவங்கி சிலமாதங்களில் உருவான பாடல் .வந்தவுடனே பலரையும் கவர்ந்த பாடல்;பாடலின் போக்கு [progression ] தாள நடை [percussion shifts ] ஒரு வகை ஈர்ப்பு என்றால்  எம் ஜி ஆர் சரோஜா தேவி பாவங்கள், குறும்பு இவை ஒரு ஈர்ப்பு. அந்நாளில் வெகு நேர்த்தியாக கிட்டார் வாசிப்பு [பிலிப்], அக்கோர்டியன் [மங்களமூர்த்தி , தாள கருவிகள் ஹனுமந்து, கோபாலகிருஷ்ணன் முருகேஷ் என்று பெரும் ஆளுமைகள் வழங்கிய விருந்து இப்பாடல்

கேட்டு ரசிக்க இணைப்பு இதோ 

https://www.dailymotion.com/video/x17imsn paattu varum naan anaiyittal 1966 vali msv , tms ps

qfr  இதே பாடல் குறித்த ஏனைய நுணுக்கங்கங்களை விளக்கி வழங்கிய qfr பதிப்பு இதோ https://www.google.com/search?q=QFR+SONG+PAATTU+VARUM&oq=QFR+SONG+PAATTU+VARUM+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigATIJCAQQIRgKGKABM

அப்பப்பா நான் அப்பனல்லடா [கலாட்டா கல்யாணம் -1968] வாலி, எம் எஸ் வி,          டி எம் எஸ்

காதலில் குறும்பு காட்டிய டி எம் எஸ் , இப்போது சோகம் ததும்ப அழுகிறார். ஆனால் லொளலாயி லொளலாயி என்று தாய்மார்கள் போல வெகு இயல்பாக குழந்தையை உறங்க வைக்க முயன்றுகொண்டே பாடும் ஒரு சோகநகைச்சுவை இது எனலாம் . நாகேஷ் வேறு காட்சியில் பங்கேற்று வித்யாசமான பாடல் பிறந்துள்ளது கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=appappaa+naan+appanalladaa+video+song+&newwindow=1&sca_esv=8c8cc267bfc4edfe&sca_upv=1&sxsrf=ADLYWIKIPT5cDlMIXGn9GhyG5xr3bNmYHQ%3A1723470295244&e galatta kalyaanam 1968  vali msv tms

நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை [படகோட்டி- 1964] வாலி, வி-ரா , டி  எம் எஸ்

மற்றுமோர் எம் ஜி ஆர் சரோஜாதேவி அதகளம் இப்பாடல்

அசாத்திய நுணுக்கங்கள் நிறைந்த பாடல், ரம்மியமான மெட்டு, அதை துரத்தும் கருவிகள், , பாடலின் நடை மாற்றம் , தாள அமைப்புகள் விறுவிறுப்பாக மாறிக்கொண்டே இருப்பது பாடலின் சிறப்பு. மேலும் டி எம் எஸ் அத்தனை பாவங்களையும் வெகு நேர்த்தியாக கையாண்டிருப்பதற்கு கவனியுங்கள். இப்பாடலில் எம் எஸ் வி வெளிப்படுத்தியுள்ள ஜாலங்கள் சொல்லில் அடங்காதவை. கேட்டு ரசிக்க இணைப்பு இதோ

https://www.google.com/search?q=naan+oru+kuzhandhai+nee+oru+kuzhandhai+video+song+AhGAoYoAHSAQkyMDQ0OWoxajSoAgCwAgE%26sourceid%3Dchrome%26ie%3DUTF-8&oq=naan+oru+kuzhandhai+nee+ padagotti 1964

பாட்டும் நானே [திரு விளையாடல் -1965 ]கண்ணதாசன் , கே  வி மஹாதேவன், டி எம் எஸ்

பக்தன் பாண பத்திரனுக்காக, ஹேமநாத பாகவதரின் ஆணவத்தை அழிக்க சிவபெருமானே மதுரையில் நிகழ்த்திய திருவிளையாடல். கவியரசு கண்ணதாசனின் சொல்லாடல் மிளிர்ந்த பாடல் . கே வி  மஹாதேவன் இசையில் டி எம் எஸ் வழங்கிய கம்பீர இசை முழக்கம். ஆரம்பத்தில் வேண்டுமென்றே அபஸ்வரம்   பாடி பின்னர் அசுர ஸ்வர பிரயோகம் செய்து காட்சியை பெரும் ஈஸ்வர விளையாட்டாக சிவன் பல பணிகள் ஆற்றி முழு கச்சேரி அல்லவா நடந்துள்ளது. பாடலின் இடையில் வரும் கொன்னக்கோல் கே வி மஹாதேவன்/புகழேந்தி என்று நினைக்கிறேன் கே எஸ் பிரசாத்அவர்களின்  அற்புதமான ஒளிப்பதிவு  கம்பியூட்டர் வசதிகள்  இன்றியே ஒரே காட்சியில் ஒரே நடிகர் வெவ்வேறு முகபாவங்களுடன்1965 இல் .  பாராட்டி ரசிக்க இணைப்பு இதோ

 

https://www.google.com/search?q=paattum+naane+video+song&oq=paattum+naane+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyCggAEEUYFhgeGDkyDAgBEAAYChgPGBYYHjIHCAIQABjvBTIHCAMQABjvBTIKCAQQABiLA thiruvilaiyaadal [1965 ] kannadsan k v m , tms

தொடரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. பாட்டும் நானே பிரமாதம்
    கண்ணதாசன், மகாதேவன்,
    டி. எம். எஸ் இணைந்து மெய்சிலிர்க்க வைக்கும் பாடல். பகிர்வுக்கு நன்றி. 🙏🙏

    ReplyDelete

PATTU IYENGAR –THE LYRICIST-3

  PATTU IYENGAR –THE LYRICIST-3 பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார் -3 கீழே இறங்கி வந்த திருப்பதி , ஐயங்காரை பக்கத்து அறை   டேபி...