Tuesday, August 13, 2024

PRONUNCIATION

 PRONUNCIATION

உச்சரிப்பு

இது என்னடா நச்சரிப்பு என்று கலங்க வேண்டாம். எந்த துறையிலும் முயற்சியிலும் வெற்றி நாடும் எவரும் முதலில் தன்னை வலுவாக உருவாக்கிக்கொள்ள சிறந்த சாதனம் தான் 'உச்சரிப்பு'. அது அனைத்துமொழிகளில் வழங்கும் ஒலி வடிவங்களை நேர்த்தியாக வெளிப்படுத்தும் திறன் .

அதுவே பல தருணங்களில் ஒருவருக்கு விசேஷ அந்தஸ்தை பெற்றுத்தரும் வல்லமை உடையது.

பின் வரும் பெயர்களை  நினைவு கூறுங்கள்

MELVYN D 'MELLO, LOTIKA RATNAM , VN CHAKRAPANI என்று பிரபலமாக முழங்கிய ஆங்கில செய்தி வாசிப்போர் அந்நாளில் அகில இந்திய வானொலியில். இந்தக்குரல்களால்[உச்சரிப்பின் நேர்த்தியால்]  கட்டுண்டு  , ஆங்கில செய்தி கேட்டோர் அனேகர்

சரி இந்த பெயர்கள் யாவர்? வெங்கடராமன் , பூர்ணம் விஸ்வநாதன், விஜயம் , சரோஜ் நாராயணசாமி, ராமநாதன் [நடிகர் சரத்குமாரின் தந்தை] தமிழ் செய்தி வாசிப்போர் AIR [வானொலியில் டெல்லியில் இருந்து ] முழங்கி பெரும் பெயர் பெற்றவர்கள்.

பின்னாளில் தூர்தர்ஷன் செய்தி வாசிப்போர் பட்டியலில் ஆங்கிலம் - MINU , RINI SIMON , NEETHI RAVINDRAN , SUKANYA BALAKRISHNAN , GITANJALI  AYYAR .. சென்னை தூர் தர்ஷன் - ஆங்கிலம் PC RAMAKRISHNA , தமிழ் ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால் , FATHIMA BAABU , .

இவர்கள் அனைவரும் நன்கு அறிப்பட்டது அவர்களின் உச்சரிப்பினால் எனில் மிகை அல்ல. [சில பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளதும் உச்சரிப்பினால் தான் என்று உணர்க].

சரி, இப்போது தொடங்கிய தலைப்பின் முக்கிய அம்சங்களை புரிந்து கொள்வோம் .

கேரளாவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறதுமக்கள் அவதி  [கேரலாவில்  வெல்லம் கறை புறண்டு ஓடுகிறது மக்கல் அவதி என்று உலறி [மன்னிக்கவும் உளறி ]செய்தி வாசிக்கின்றனர்.

மன்னா நீ மன்னரோடு மன்னராக போய் வா [மண்ணா ணீ மன்னாரோடு மன்னாராக போய் வா]என்று சொல்லி விட்டு  இளவரசியிடம் ராஜகுரு சொல்கிறார் அடுத்த போருக்குள் உன்னை தயார் ஆக்குகிறேன்

இங்கே மேடையில் ராஜகுவாக நடிப்பவன்  "அடுத்தப்போருக்குள் உன்னை தாயார் ஆக்குகிறேன்" என்றதும் விசில் பறக்கிறது. நடித்தவன் தனக்கு பாராட்டு என்று எண்ணுகிறான். நாடகம் முடிந்ததும் மேனேஜர் அவனை நையப்புடைத்தார் என்பது உச்சகரிப்பு கிடைத்த வெகுமதி.

உச்சரிப்பின் மகத்துவம் கேட்பவர்களுக்கு தான் தெரியும். எதிலும் உன்னிப்பாக கவனம் இல்லாமல் பேசுவது எழுதுவது இவை மொழியி-ன் மாண்பை சிதைக்கும் , வளரும் தலைமுறைக்கு தவறான வழிகாட்டுதல் மூலம் பேராபத்து விளைவிக்கும் . பலர் ஜெயலலிதா [JEYALALI DHAA] என்றும், மாலதி யை [MALADHI], பாரதியை [BHARADHI] என்றும் உச்சரிப்பதைக்காணலாம்

நாடாளுமன்றத்தில் இத்தகையோர் உச்சரிப்பினால் கோமாளிகளாகப்பார்க்கப்படுவதை காணலாம். இதுதான் உச்சரிப்பு ஏற்படுத்தும் தாக்கம்

மற்றுமோர் தவறு '" ', ' போன்ற எழுத்துகளை ஒரே மாதிரி உச்சரிப்பது மற்றும் ஒன்றிற்கொன்று இடம் மாற்றி எழுதுவது. இவை யாவையும் எவ்வளவு கவனக்குறைவாக பேசுகிறோம் /எழுதுகிறோம் மற்றும் மொழியை மதிக்கிறோம் என்பதன் வெளிப்பாடே

தமிழ் மொழி பற்றி பெருமைகொள்ளும் நம்மவர்களே அம்மொழியை சிறுமைப்படுத்துதல் எவ்வகையில் நியாயம் ? வீண் பெருமை கொள்வதில் அர்த்தம்  இல்லை. தொலைக்காட்சிகளில், ஓடுதகவலாக [SCROLL] வரும்  இலக்கணப்பிழைகளும் சொல் தவறுகளும் மிகுந்து எரிச்சலை ஏற்படுத்துவதைக்காணலாம்

ஆக, முறையான மொழி இலக்கணப்பயிற்சி இல்லாமல் காட்சி ஊடகங்களில் பேசும் நபர்களைப் பார்த்தால்   கேவலமாக  இருக்கிறது. . 

 தமிழில் ஒரு முதுமொழி உண்டு .அது "ஊமையனுக்கு, உளறுவாயன்  சண்டப்பிரசண்டன் "என்று. அது போல சண்டப்பிரசண்டார்கள்   ஊடகங்களில் அயராது உளறுவதை எப்படித்தான் அனவரதமும் சகிப்பதுடன் ரசிக்கவும் செய்கின்றனரோ?  .

மூடர் கூட்டம் மலிந்து விட்டது, தமிழ் பேசும் முறைகள் தவறு, ஆங்கிலம் பேசினால் தகராறு

ஆஹா என்னே நமது முன்னேற்றம் !   .  

ஒலிப்பிழைகள் பல . மூண்ட் றாவது ஆட்டத்தில் வெட்றி பட் றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கின்றனர் வெற்றி , சுற்றி , கற்று மற்றும் போன்ற சொற்களை வெட் றி ,சுட் றி ,கட் று , மட் றும்போண்ட்ற என உச்சரித்து எரிச்சலூட்டுகின்றனர்..

தமிழே இப்படி எனில் ஆங்கிலம் /ஐரோப்பிய மொழிகள் படும்பாடு வேறு வகையானது. ஆம் இந்திய மொழிகளைப்போல மேற்கத்திய மொழிகளை எழுத்துக்கூட்டி படிக்க இயலாது /கூடாது.

இவற்றை படியுங்கள்

ENVELOPE,   RENDEZVOUS, SUPERFLUOUS , ISLAND , RAPROCHMENT, DEBRIS , RESUME என்பன போன்ற பல.

அடுத்த பதிவில் இவை குறித்து புரிந்து கொள்வோம்.   .

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

SALEM SUNDARI- 53

SALEM SUNDARI- 53 5  நாட்களுக்கு பின் மாடசாமிகாலை 9.45 க்கு வந்துவிட்டார் பின்னர் ஒவ்வொருவராக வர கடைசியில் 9.57 க்கு சுப்பு ரெத்த...