Monday, August 12, 2024

SALEM SUNDARI-39

 SALEM SUNDARI-39

சேலம் சுந்தரி- 39

Prof. சுபத்திராவிடம் இருந்து போன் ராமசாமிக்கு.

சார் நாதஸ்வரம், ரெடி பண்ணிட்டீங்களா?

ராமசாமி: ப்ளீஸ் 2 நிமிஷத்துல நானே கூப்பிடறேன் என்று கட் பண்ணிவிட்டு-- மாடசாமி / சுந்தரி இருவரையும் உடனே கேண்டீன் வரச்சொல்லிவிட்டு, போன் தொடர்பை மீண்டும் ஆரம்பித்து பேசினார் ராமசாமி.

சார் நான் ஜங்க்ஷன்ல தான் இருக்கேன் எங்க வரட்டும் என்றார் பேராசிரியை. நேர காண்டீனுக்கு வாங்கோ என்றார் ராமசாமி.. 3 நிமிடத்தில் கேன்டீனில் அனைவரும்கூடினர். 

நல்ல வேளைம் மா  நாதஸ்வரம் மறந்தே போச்சு , காசிம் கிட்ட பேசறேன். என்றார் ராமசாமி.  

சார் உங்களுக்கு விஷயமே தெரியாதா? காசிம் இப்ப இந்தியாவுக்கே டூரிஸ்ட் மாதிரி அப்பப்ப வந்து போறாரு; அநேகமா ஸ்பெய்ன் ஜெர்மனி இங்கதான் கச்சேரி. எல்லாம் கௌரி ஏற்பாடு.

நல்ல வருமானம், ஆனா கொஞ்சம் கூட அகம்பாவமே கிடையாது. ரொம்ப நன்றி விசுவாசம்; அதுவும் கௌரி பேரச்சொன்னா, மேல் துண்டை எடுத்து இடுப்புல கட்டிக்கிறாருன்னா பாருங்கோ. கௌரி என்ன சொன்னாலும்,. ஜெர்மனி ஸ்பெய்ன் அப்புறம் இந்தியாவுல அவங்க கான்சலேட் எல்லாத்துலயும் கௌரின்னா அப்பிடி ஒரு மரியாதை என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே கண்களில் தாரை தாரையாக கண்ணீருடன் மாடசாமி கூப்பிய கைகளுடன் ப்ரொபஸ்ஸர் மேடம் எங்க நிலைமைக்கு நீங்க தெய்வமா வந்து வழிகாட்டி, இன்னக்கி கௌரிக்கு இவ்வளவு செல்வாக்குனு சொல்ல சொல்ல -எனக்கு பயம்மா இருக்கு. உங்களுக்கு, இந்த நன்றிக்கடனை எப்படி திருப்பி செலுத்துவேன் என்று தழுதழுத்தது பேசினார்.

ராமசாமி எழுந்துவந்து முதுகில் தடவிக்கொடுத்து,, இதுக்கெல்லாம் கலங்காத டா; நீ எவ்வளவு உதவி செய்யற ஏன் ரயில்வேக்கு எவ்வளவு ஊழலைத்தடுத்து லாபம் ஏற்படுத்தின –மறந்துட்டியா?  பகவான் உனக்கு- நல்லதே செய்வார்.

சுந்தரி மிரண்டாள். இந்த ராவணேஸ்வர உருவத்தில் எவ்வளவு நன்றியும் அமைதியும் பண்பாடும் பிணைந்து கிடக்கின்றன. இல்லைன்னா ராமசாமி சார் போல ஒருவரின் நட்பை காப்பாற்றி வைத்துக்கொள்வது அவ்வளவு சுலபமா என்ன

இத்தனை காலம் கடந்தும் மாடசாமி நன்றி மறவாமலும் குன்றாமலும் உன்னத பண்பாளராய் நடந்து கொள்கிறார் என்று சுபத்திரா பெரும் மரியாதை கொண்டார் மாடசாமி மீது. 

ராமசாமி “சரி நாதஸ்வரம்? 

அதை தான் பேச வந்தேன், பெரியசாமி னு ஒரு பையன் தென்காசி பக்கம் இலஞ்சி ங்குற ஊர்லேந்து வரான். I இயர் படிக்கிறான். இன்னும் கொஞ்ச நாள்ல,   ஊர் உலகமே பேசும். அந்தளவுக்கு நாதஸ்வரம் அவன் கைல அப்பிடி பேசுது. அவனை வந்து வாசிக்க சொல்றேன் -பிச்சுருவான் என்ன சொல்லட்டுமா? என்றார் பேராசிரியை.

ராமசாமி, கௌரியை* பார்க்க அவள் விழித்தாள். இவள் தடுமாறுகிறாள் என்று புரிந்து கொண்டு சுபத்திரா, சுந்தரியிடம் --நான் ஏற்பாடு பண்றேன் சும்மா கௌரவமான ஒரு தொகை குடுங்க போதும்; அதுவும் கஷ்டம் னா நான் சும்மாவே வாசிக்க சொல்றேன் என்றார் பேராசிரியை.

இல்ல மேடம் நீங்க சொல்ற அமௌன்ட் குடுத்துடறேன். என்று அழுகை பீறிட சொன்னாள் சுந்தரி. .

ஏம்மா அழுவற? என்றார் சுபத்திரா.   

நீங்க எல்லாரும் எவ்வளவு கவனமா எல்லாம் செய்யறீங்க -இதுக்கெல்லாம் எனக்கு தகுதி இருக்கா னு நெனச்சா ஒரே அழுவாச்சி யா [அழுகையாக] வருது அதுதான் மேடம் என்று கை கூப்பினாள். இவர்களுடன் பழகி, பல நற்குணங்கள் இந்த பெண்ணுக்கும் வந்து கொண்டுள்ளதாக கணித்தார் சுபத்திரா [அனுமன் விளையாட்டு தான் வேறென்ன?]

ஒரு வழியாக பெரியசாமியை நாதஸ்வரத்துக்கு ஏற்பாடு செய்ய முடிவாயிற்று, சுந்தரிக்கு உள்ளூர பயம் . யூனிவெர்சிட்டில படிக்கிறவன் அவனுக்கு ஒரு தொகை கொடுங்க னு சொல்றாங்க மேடம். எவ்வளவு 5000/- னு குழம்பினாள். அதிகமா  எதாவது கொடுக்கணுமோ?.

சுபத்திரா பார்க்காத சுந்தரிகளா?  பெரிசா ஒன்னும் கொடுக்க வேண்டாம் ஒரு 1500/- --2000 ரூ குடுங்க போதும். அதான் சொன்னேனே சும்மா வாசிக்க சொன்னாலும் கண்டிப்பா கேட்டுப்பான்.

ஆனா, நம்ப ஏதாவது குடுத்தா அவனுக்கு உதவியா இருக்கும் என்றார் பேராசிரியை. சுந்தரி ராமசாமியை பார்க்க அவர் 2 விரல் காட்டினார். சரிங்க ப்ரொபெஸர் மேடம் 2000/- குடுத்துடறேன் என்றாள் சுந்தரி.  போதும்மா கவலையை விடுங்க நானே அவனை அடுத்த சண்டே, சார் வீட்டுக்கு கூட்டி வந்து அறிமுகம் பண்ணி வெக்கறேன். எப்படி வாசிக்கறான் னு நேரிலே பாருங்க..

அவங்கள நம்ம ஆதரிச்சா தான் அவங்களால கலையும் பிழைக்கும். . சுந்தரி செய்வதறியாமல் காண்டீன் என்றும் பாராமல் சுபத்திரா வின் பாதம் தொட்டு வணங்கினாள். மிக நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் கை கோர்த்த தருணம். சுந்தரிக்கு அடுத்த கவலை நாம் சந்திக்கும் பலர் தெய்வம் போல் உதவுகின்றனர். என்னை சுற்றி எத்தனை தெய்வங்கள்? -இறைவா என மனம் ஒன்ற மனக்கண்ணில் ஆஞ்சநேயன் 'அபயஹஸ்தம் காட்டி நின்றார். 

*சுந்தரி யை என்று திருத்தி வாசிக்கவும் . தவறுக்கு வருந்துகிறேன் 

நன்றி அன்பன் ராமன் 

தொடரும்

நன்றி   ராமன் 

1 comment:

  1. * யானைக்கும் அடி சறுக்கும்.

    ReplyDelete

SALEM SUNDARI- 53

SALEM SUNDARI- 53 5  நாட்களுக்கு பின் மாடசாமிகாலை 9.45 க்கு வந்துவிட்டார் பின்னர் ஒவ்வொருவராக வர கடைசியில் 9.57 க்கு சுப்பு ரெத்த...