Monday, September 2, 2024

SALEM SUNDARI-45

 SALEM SUNDARI-45

சேலம் சுந்தரி- -45

சரி அந்த லிஸ்ட் இருந்து பட்டுப்பாய் [2] கட் பண்ணிடுங்க- இல்லைன்னா கடைசில குழப்பம் ஜாஸ்தி ஆயிடும் என்றார் ராமசாமி. உடனே சுந்தரி அவ்வாறே செய்தாள். 

டேய் நீ என்றார் ரா சா. பாய் வந்ததுமே நான் கட் பண்ணிட்டேன் என்று பர்சில் இருந்து பேப்பரை எடுத்து காட்டினார் மாடசாமி.

நீ எத்தண்டா-- என்றார் ராமசாமி. இல்லாட்டி உன்ன, சமாளிக்கமுடியாது என்றார் மாடசாமி.

சுந்தரிவியந்தாள் ஒன்றை ஒன்று தூக்கிசாப்பிடும் போல எப்போதும் தயார்.  இவர்கள் போன்ற நட்பு இருந்தால், எவ்வளவோ கற்றுக்கொள்ளலாம். திடீரென்று விசாலாட்சியின் நினை வு வந்தது PK சார் மிகப்பெரியத்திறமைசாலின்னு எல்லாருமே சொல்றாங்க அதுனால விசாலாட்சிக்கு நல்ல ஆலோசனை கிடைக்கும் . மறக்காம உமா அம்மாகிட்ட வேண்டுகோளா சொல்லணும் "அவ [விசாலாட்சி] சின்னவ நீங்க அப்பப்ப அறிவுரை சொல்லுங்கம்மா னு கல்யாணம் ஆன கையோட கேட்டுக்கணும். ராமசாமி இவள் நினைப்பதை கண்டுபிடித்து கேட்டார் .

என்ன யோஜனை ? கல்யாணத்துக்கப்பாறம் வெளியூர்ல  தங்கை  என்ன பாண்ணுவாளோனா? நீ ஏன் கவலைப்பட்றே? சுப்பிரமணி 3 பொம்பளைகளை சமாளிப்பான். [உடனே-- கவலைப்படாதே அவன் ரொம்ப ஒழுக்கமானவன் , பயங்கர ஆஞ்சநேய பக்தன். நல்லா முன்னுக்கு வந்துடுவான் கவலையே படாத ; வேணும்னா PK ஒய்ப் கிட்ட ஒரு வேண்டுகோளை சொல்லி வை அவங்க பாத்துப்பாங்க. நல்லதே நடக்கும் என்று அச்சு அசலாக  அவள் எண்ணத்தையே பிரதிபலித்தார். மனசுக்கு ரொம்ப அமைதியும் ஆறுதலுமா இருக்கு சார் . உங்களுக்கு எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்லப்போறேன் னு தெரியல்ல. அடுத்தவாரம்-நான்   2 நாள் லீவு ஓடிப்போய் ராமசாமி வேலைக்கு வரல்லன்னு புகார் சொல்லு -உனக்கு பேர் புகார் சுந்தரி னு வெச்சுடறேன். ஐயோ வேணாம் சார், ஒரு தப்புக்கே இன்னும் அவதிப்படறேன் , புகார்-ல்லா ம் சொல்லமாட்டேன் சார் தயவு செய்து இன்னொரு வாட்டி அப்படி சொல்லாதீங்க சார் என்று அழுதாள். நான் சும்மா தமாஷ் பண்ணினேன் என்றார் ராமசாமி.

வேண்டாம் சார் தமாஷுக்கு கூட நீங்க ரெண்டு பெரும் கிண்டல் பண்ணாதீங்க சார் ;உங்களை நான் தெய்வமா நெனக்கிறேன் சார். நான் சொல்றது உங்களுக்கு ஏதோ ஒப்புக்கு பேசறேன் னு கூட தோணும் . அப்படி இல்ல சார் இதுக்கு முன்னால ஒரு தனியார் கம்பெனில டேட்டா ஆப்பரேட்டர் போஸ்ட் இருந்தேன். ஒரு நாள் என்பது 3 நாள் மாதிரி மலைப்பா இருக்கும்.

அங்கிருந்து வெளிய வந்தா போதும்னு பரீட்சை எழுதி ரயில்வேக்கு வந்தேன் முதல் போஸ்டிங்கே திருச்சி ஜங்க்ஷன் தான்.

.ஆண்களும் ரொம்ப கௌரவமா நடந்துப்பாங்க னு இங்கதான் பார்த்தேன். .அதுனாலயே உங்களை தெய்வமா பாக்கறேன். உலகத்துல ஆண்கள் னாலே மோசமா நடந்துப்பாங்க னு ஒரு அபிப்ராயம் இருக்கு ;ஆனா மகோன்னதமான ஆண்கள் இருப்பது பலருக்கு தெரியல்ல; ஏதேதோ தவறான அனுபவங்களை மட்டுமே பார்த்து வேண்டாத நிலைப்பாடுகள் எடுக்கறாங்க. போனவாரம் சுப்புரெத்தினம் சார் உங்களுக்கு யாருக்காவது ட்ரான்ஸ்பெர்  வேணும் னா வாங்கித்தரேன் னு கோவமா சொன்னாரு ;நான் ரொம்பவே ஆடிப்போயிட்டேன்; இது மாதிரி கௌரவமான ஆண்கள் ஒரே இடத்தில அமையறது லேசில் நடக்காது. எனக்கு வயது குறைவு ஆனா உலக நடைமுறை -குறிப்பாக வேலைபார்க்கும் பெண்கள் சந்திக்கும் துயரங்கள் எவ்வளவு னு நல்லா  தெரியும் . அப்படி கதிகலங்கிக்கிடந்த என்னை சிட்டுக்குருவி மாதிரி பார்த்து  பார்த்து   ஆதரவா நடந்துக்கிட்டவங்க இந்த திருச்சி ஜங்க்ஷன்ல [அதாவது ரயில்வே ] பலர் இருக்கீங்க னு தெரியும். நானும் என் தங்கச்சியும் வெளிஊர் போனது வந்தது என்று எவ்வளவு பாதுகாப்பு கிடைச்சுது ? FLIGHT போனா கூட இவ்வளவு சகோதர உணர்வோடு நடந்துப்பாங்களானு சொல்ல முடியாது சார், என்று ஆழ்ந்த மரியாதையுடன் மாடசாமியை வைத்த கண் வாங்காமல் விழி ஒர நீர்த்திவலையுடன்தெய்வமாக ப்பார்த்தாலள் .

நொடியில் ராமசாமி புரிந்துகொண்டார்  இவள் உண்மையதிலேயே ஆதரவற்று போகுமிடம் தெரியாமல் இங்கு வந்து பாதுகாப்பை உணர்ந்துள்ளாள் .

ஏதோ அவசரத்தில் புகார் சொல்லப்போய் மாடசாமிக்கு பெரும் இடர் வந்தது.  ,ஆனால் அவன் ரயில்வேயில் தவிர்க்கமுடியாத நேர்மையாளன்; அவனது நேர்மை எவனையும் எதிர்கொள்ளும் வலிமை உடையது. அதுவே அவனுக்கு நெஞ்சுரத்தையும் அமைதியையும் அபரிமிதமாக வழங்குகிறது. பாவம் இவள் நொடிப்பொழுதில் நொடித்து தவறு செய்து விட்டு வேதனையில் வீழ்ந்து, உண்மை உணர்ந்து வருந்துகிறாள். இனி  இவளை    உரிய உதவி செய்து அமைதிகொள்ள வைக்க வேண்டும் ;இல்லையேல் பெண் பாவம் பீடிக்கும் என்று உணர்ந்தார் ராமசாமி. மாடசாமிக்கு அந்த கவலை இல்லை; அவர் துன்புற்றாலும் அவளையம் / எவளையும்  கோபித்ததில்லை. செயலில் ஆஞ்சநேயன் இந்த மாரியம்மா பக்தன் . ராமசாமியை வெகு நன்றாக புரிந்து கொண்டவன். இனிமேல் தான் சுந்தரி நல்ல மனிதர்கள் என்போர் யார் என்று உணர்வது சாத்தியம்

தொடரும் . 

No comments:

Post a Comment

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...