TM SOUNDARARAJAN -20
டி எம் சௌந்தரராஜன் -20
சந்தனத்தில்
நல்ல வாசம் எடுத்து [பிராப்தம் -1971] கண்ணதாசன் எம் எஸ் வி டி எம் எஸ், பி சுசீலா
கல்லூரி மாணவி, போட்டியில் பாடி வெற்றி பெற ஒரு நாட்டுப்புறப்பாடல் கற்றுத்தர
ஓடக்காரரிடம் கேட்க அவர் கற்றுத்தரும் ஒரு தெம்மாங்கு வகை அமைப்பில்
உருவான பாடல். இரண்டு ராட்ஷசர்கள் கண்ணதாசனும்
, விஸ்வநாதனும்,சூழ் நிலையைப்புரிந்து கொண்டதனால்,
கிராமத்து சொல் "காத்து"
வரும்படி பாடல் இயற்றி , நாயகி
"காற்று " என்று பாட , கற்றுத்தரும் ஓடக்காரர் மீண்டும் பாடிக்காட்டி, "காற்று ல்ல -காத்து என்று கிராமிய உச்சரிப்பு
வரும்படி திருத்தம்
சொல்ல, நாயகி காத்து என்று பாடியதும்
[ஆமாம் அப்படித்தான் என்பது போல] ஆங் என்று சிவாஜி தொனியில் டி எம் எஸ் ஆமோதிக்க, எவ்வளவு கவனம் பாடல் உருவாக்கத்தில். கண்ணதாசன் கிருஷ்ணபக்தன் , ஆனாலும், எந்த தெய்வத்தின் பாலும் அன்பு செலுத்தும் நபர். அதிலும் மீனாட்சியும் , விநாயகரும்
அவ்வப்போது பாடல்களில்
இடம் பெறச்செய்து
மரியாதை செய்வார்.
இந்தப்பாடலிலு ம் அதைக்காணலாம்
இந்த கிராமிய வகை சொல்லாடலில்
மீனாட்சியின் பெருமை பேசுகிறார் கவியரசர்.
வாய்ப்பு கிடைத்தால் பக்தியை பக்தியுடன்
கையாளும் கவி அரசர்கள் எங்கே?
“நானாச்சு வாவென்று மீனாட்சி கோவிலில் மணியோசை கேட்பதும் நமக்காக
நாளாச்சு என்றாலும்
பூவாச்சும் வரும் என்று மீனாட்சி சொன்னதும்
நமக்காக”
https://www.google.com/search?q=santhanathil+nalla+vasam+eduthu&newwindow=1&sca_esv=eb29a46433157e1a&sca_upv=1&sxsrf=ADLYWIL4I95EIFFtpcFM-Nr3mJnyxSWp6Q%3A1725008624772&ei=8IrRZvfiLqWE4 praptham 1971 kd tms ps msv
அலங்காரம் கலையாத சிலை ஒன்று [ரோஜாவின் ராஜா ] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா
மிகவும் ரம்மியமான பாடல், அதிலும் பல்லவிக்குப்பின் வரும் இசையில் குழல் காட்டும் சிருங்காரம் விளக்கவொண்ணாதது. பாடலைத்தூரத்திப்பயணிக்கும் காங்கோஸ் தாள அதிர்வுகள் நம்மை நிச்சயம்
அசைக்கும் . அதையும் தவிர இடை இசையின் அமைப்பு வெறெந்தப்பாடலில் இல்லாத வகை என்பதே முக்கிய அம்சம். 'தேனாட்சி தான் செய்யும் மீனாட்சி சாட்சி " என்று மீனாட்சிக்கு ஏற்றம் தந்த பாடல். கேட்டு மகிழ இணைப்பு இதோ :
https://www.google.com/search?q=alangaaram+kalaiyaadha+silai+ondru+kanden+video+song&oq=alangaaram+kalaiyaadha+silai+ondru+kanden+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoAEyCQgDECEYChigAdIBCTQ0Mzg5ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=UTF-8#fpstate=ive&vld=cid:6035d767, rojavin raja 1976 kd msv tms ps
செந்தமிழ் பாடும் [வைர நெஞ்சம் -1975 ]அண்ணதாசன், எம் எஸ் வி, டி எம் எஸ், பி சுசீலா
மற்றுமோர் டூயட் சிவாஜி-பத்மப்ரியா ஜோடி வெகு அழகான படப்பிடிப்பு மற்றும் கவி அரசரின் சொல்லாடல் . பல இடங்களில் முந்தைய பாடலும் இப்பாடலும் ஒத்த அமைப்பில் இருப்பன ;எனவே சில சமயங்களில் குழப்பம் எழலாம். ஆனாலும் மிக மிக நேர்த்தியான வடிவம் கொண்ட பாடல். கேட்டு ரசிக்க இணைப்பு
https://www.google.com/search?q=senthamizh+paadum+sandhana+kaatru++video+song&newwindow=1&sca_esv=eb29a46433157e1a&sca_upv=1&sxsrf=ADLYWIJbCgQtu8y-exUz3J3wLmC7seZPJA%3A1725008347580 vaira nenjam kd tms ps msv 1975
கல்யாண வளையோசை கொண்டு [உரிமைக்குரல் -1974]-எம் எஸ் வி , பி சுசீலா டி எம் எஸ்
ஒரு கிராமிய மணம் திகழும் டூயட் . முதல் பகுதியெங்கும் பெண்ணே பாடிக்கொண்டு வர பின்னர் ஆண் சேர்ந்துகொள்ள , பாடல் வேறொரு வடிவம் பெறுகிறது.
இப்பாடல் எம் எஸ் வியின் மற்றுமோர் அதகளம் . எப்படி, எனில், கருவிகள் மிகக்குறைவு, அதிலும் குழல் முக்கியத்துவம் பெற அவ்வப்போது இடையில் strings வகை நரம்புக்கருவிகளின்
மீட்டல்
. ஆனால் சொற்களைப்பாடும் விதம் வெகு சிறப்பாக கையாளப்பட்டிருப்பது இசை அமைப்போருக்கும் , பாடகர் களுக்கும் பாடம் போல இருக்கிறது . நன்கு கவனியுங்கள் .50ஆண்டுகள் கடந்தும் இன்னும் உயிர்ப்புடன் உலவும் பாடல்கள் மிக கவனமாக பாடப்பட்டிருப்பது
அவற்றின்
சிரஞ்சீவித்துவ நிலைக்கு ஆதாரம். . இன்னும் சில முக்கிய கவனிக்க வேண்டிய அம்சங்கள் ஒரு மாறுபாடாக பாடல் துவங்குவதே தபலாவில் தான், அதுவும் அந்த வாசிப்பில்
'கம'கம் ரொம்பவே சிறப்பு பாடல் முற்றிலும் வேறு தாள ஒலிகள் தென்படவில்லை. மேலும் பாடும்
போது குரலும் துணையாக தாளமும் மட்டுமே பயணிப்பதும் எம் எஸ் வியின் உத்தியாக பரிமளிப்பது
பலருக்கும் தெரியும் ஆயினும் இப்பாடல் ஒவ்வொரு வகையிலும் நம்மைக்கவர்கிறது.
வாலியின் கவிதையில் எதுகை மோனை இப்பாடலின் சிறப்பு
வந்து இள வாழந்தண்டு , செண்டு என்ற சொற்கள் ஒரு புறம் காற்றே நீ முன்னாடி செல்லு , பின்னாலே நான் வாரே ன் என்று கண்ணாளன் காதோடு சொல்லு
போல
பல.
அதைக்கடந்து பாடலில் இடம் பெற்றுள்ள 'நீட்டல்கள் ரம்மியம் சேர்ப்பது இன்னும் சிறப்பு.
செல்லு --செல்ல்ல்ல்லு என்றும் சொல்லு -----சொல்ல்ல்ல் லு என்றும் இழுத்து ஒரு உயிரோடு தோன்ற, மாமன் என்ற சொல் மா .....மன் என் மா ..........மன் என்று உரிமை அதிகம் தொனிக்க பாடியுள்ளார் சுசீலா. இதில் எங்குமே இசையின் ஆதிக்கத்தை விட உணர்வின் பங்களிப்பே முதன்மை என்பது குறிப்பிடத் தக்கது.. இணைப்பு இதோ . அவற்றில் MIDIA MUSIC என்ற பகுதியில் ஒலி ஒளி நேர்த்தி அதிகம் ரசியுங்கள்
https://www.google.com/search?q=KALYTAANA+VALAI+OSAI+KONDU+VIDEO+SONG&oq=KALYTAANA+VALAI+OSAI+KONDU+VIDEO+SONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhG 1974 VAALI MSV TMS PS
நன்றி
அன்பன் ராமன்
No comments:
Post a Comment