Monday, September 2, 2024

SALEM SUNDARI-46

 SALEM SUNDARI-46

சேலம் சுந்தரி- -46

'மாமா இன்னும் 1 வரம் தான் லீவு, ஊருக்குப்போறதுக்குள்ள ராமசாமிசார்/ அவுங்க மாமி ரெண்டு பேர் கிட்ட ஆசீர்வாதம் வாங்கணும் .

மாடசாமி "சரிம்மா எனக்கு வரிசையா  4-5 நாள் வெளியூர் ட்யூட்டி இருக்கு , உனக்கு தான் அவுங்க வீடு தெரியுமில்ல".

கௌரி. "மொத்தமே 2 தடவைதான் போயிருக்கேன் அப்ப உங்க கூட போய்வந்தேன் . நீங்க அட்ரஸ் வாங்கி குடுங்க நானே போய் பாத்து ஆசி வாங்கிகிட்டு வந்துடறேன்".

மாடசாமி  "அதெல்லாம் சரி நீ அவங்க வீட்டுக்கு போகணும்னா லீவு நாள் பாத்துப்போ அப்பதான் ராமசாமி வீட்டுல இருப்பாரு . ரெண்டாவது போகும்போது சுந்தரியை கூட்டிகிட்டு போ அவங்க கல்யாண விஷயம் ஏதாவது கேட்டுக்கணும் னா உதவியா  இருக்கும்". .

நான் எங்க போய்  சுந்தரியக்காவ கூப்பிடறது ? -கௌரி.

மாடசாமி "நீ போய்  கூப்பிடாத நம்ப வீட் டுக்கு  அவங்க வந்திருக்கா ங்கல்ல இங்க வரச்சொல்லி 2 பேருமா பஸ் /ஆட்டோல போங்க [இந்தா ரா  சா வீட்டு விலாசம்" என்று ஒரு சீட்டை கொடுத்தார் மாடசாமி.

ஒரு ஞாயிறன்று அசல் கௌரி யும் அசப்பில கௌரியும் [சுந்தரி] ராமசாமி வீட்டில் காலை 9.30 க்கு சென்று கௌரி பெரியவர்களிடம் ஆசிவாங்க , ஆமா , மாமா விஜயவாடா பக்கம் போயிருக்கார் என்று அம்ஜத்திற்கு தகவல் சொன்னார். ராமசாமி சுந்தரி அரண்டாள் -எங்க போனாலும் வந்தாலும் இவங்க எப்படி தகவல் பரிமாறிக்கிறாங்க. ஒரு மண்ணும் தெரிஞ்சுக்காம லூஸ் மாதிரி புகார் சொல்லி -என் புத்தி ஏன் இப்படி போச்சு.. வேற ஊரா இருந்தா எப்படி என்னை பெரிய பிரச்னைல மாட்டிவிட்டு பேரம் பேசிருப்பாங்க.. யார் செஞ்ச புண்ணியமோ ஒரு வசவு, கெட்டவார்த்தை, லஞ்சம் , பேரம் எதுவும் இல்லாம அறிவுரையோட "இனிமே இப்படி செய்யாதே என்ற அளவில் முடித்த இவர்கள் தெய்வங்களே தான் என்று நெக்குருகினாள்.

"சும்மா அதையே நெனச்சுண்டு பிரார்த்தனை பண்ணிண்டு இருக்காத; அது முடிஞ்சாச்சு மேல ஆகவேண்டியதை பாரு. தங்கைக்கு கல்யாணம் வரது. அதுக்கு இன்னும் என்ன பாக்கி இருக்கு அதை யோசிப்போம்" என்றார் ராமசாமி.  [இவர் என்ன மந்திர வாதியா அப்படியே நம்ம நெனைக்கறதே புட்டுப்புட்டு வெக்கறாரே - பயங்கர கில்லாடி தான்.

சாமி என்று குரல் வாசலில் .

வாய்யா என்றார் ராமசாமி.

 வாசலில் கோவிந்தசாமி கைகூப்பிய படி அய்யா கோயிலுக்கு புஸ்ப கான்டராக்ட் எடுத்திருக்கேன் சாமி   

அய்யா-அம்மா கிட்ட சொல்லி உங்க ஆசீர்வாதம்  பூ யாவாரம் நல்லா  போய்கிட்டு இருக்குங்க அதுதான் சொல்லிட்டு போலாம் னு வந்தேன். ரொம்ப சந்தோஷம்ப்பா பெருமாள் உனக்கு அனுக்கிரஹம் பண்ணுவார், அதான் உன்னையே பூ கைங்கரியத்துக்கு நியமிச்சிருக்கார் -நன்னா இருப்ப நீ என்றார் அம்ஜம் . பெரியவுங்க ஆசீர்வாதம் அம்மா என்று தழுதழுத்தார் கோவிந்தசாமி.. அன்றொருநாள் ராமசாமியை சிக்க வைத்த கோவிந்தசாமி இப்போது ராமசாமியிடம் அடங்கி ஒடுங்கி கிடக்கிறான்.                                      கோவிந்தசாமி  22/23 தேதி ஜங்க்ஷன் கல்யாணம்.  பூ, கதம்பம் மல்லிகை சரம்/ உதிரி எல்லாம் நியாயமான ரேட் குடுக்கணும் முடியுமா?

ரேட் என்னங்க ரேட் மனுசாள் தான் முக்கியம். நான் உங்களுக்கு சும்மாவே தர்றேன் , நீங்க சும்மா பேருக்கு ஒரு 200/-- தாங்க சந்தோசமா வாங்கிக்கிறேன் நம்ம வீட்டுக்கு குடுத்தா மேலமேல வியாபாரம் பெருகும். தேதி 22, 23 தானே ஜங்க்சன்ல எங்க?

ரயில் கல்யாண மண்டபம்.

அந்த சமையல் சேசாத்ரி அவுங்களும் சொன்னாங்களே அதே கல்யாணமா?

இல்லை இது வேற அங்கேயே 2 கல்யாணம்; நம்மது சின்ன மண்டபம்- ரா சா .

ஆமாம் ஒரு மினி மண்டபம் இருக்கு அதுலியா ? கோவிந்தசாமி .

நான் கொண்டாருவேன் இல்ல லாவண்யா [பால்காரப்பொண்ணு] கிட்ட குடுத்து மண்டபத்துல உங்கள ப்பாத்து குடுக்க சொல்றேன்.. க்ளீனா கொண்டாந்து சேத்துருவா .சமையல் சேசாத்ரி கல்யாணத்துக்கு அவதான் பால் சப்ளை ;உங்களுக்கு பால் சொல்லிட்டீங்களா , சொன்னா உங்களுக்கும் பால் சப் ளை பண்ணிருவா.

எத்தனை கல்யாணத்துக்கு சப் ளை பண்ணுவா? என்றார் ராமசாமி.

சாமி இன்னக்கி சீரங்கத்துல அவதான் டாப் எவ்வளவு மாடு ஆளு படை பெரிய பண்ணையே நடத்தறா.

 மாமி வீட்டு பங்க்சன் னு சொன்னா இப்பவே ஓடியாந்துருவா என்று போன் மூலம் கோவிந்தசாமி பேச அடுத்த பத்து நிமிடத்தில் லாவண்யா அம்ஜம் வீட்டு வாசலில் நேரே விழுந்து வணங்கி கோவிச்சுக்காதீங்கம்மா வியாபாரம் ரொம்ப வளந்துருச்சு 15 ஆள் வேலை செய்யறாங்க இருந்தாலும் எப்பவும் வேலை இருக்கு. உங்க வீட்டுக்கு புதுமாட்டுப்பால் தெரட்டுப்பாலுக்கு குடுத்ததுலேருந்து  மாசத்துக்கு 2 மாடு கன்னு னு ஒரே பசுமாடு இப்ப பண்ணல எல்லா ரகமும் இருக்கு.

கல்யாணமாம்மா இப்பதான் இவரு போன்ல சொன்னாரு. பால் வேண்டியிருக்குமே? சொல்லுங்க தரேன் என்றாள் லாவண்யா.

ராமசாமி சொன்னார் சேஷாத்திரி கிட்ட சமையல் சொல்லிருக்கேன் அவன் ஏதாவது ஏற்கனவே ஏற்பாடு பண்ணியிருக்கானா என்னனு தெரியல. என்றார். லாவண்யா சொன்னாள் . ரயில் கல்யாண மண்டபத்துல கல்யாணத்துக்கு சொல்லிருக்காரு அதுல உங்களுதும் இருக்கானு கேட்டுட்டு சொல்லுங்க . ஒரு அட்வான்சு எதுவும் வேணாம் நான் கொண்டாந்து தந்தூர் ரென்; என்று சொல்லிக்கொண்டே சாமி நல்லாருக்கீங்களா? எம்பூட்டுநாள்  ஆளாச்சு பாத்து? என்று ஆனந்தக்கண்ணீர் சொரிந்தாள்.

இருந்த இடத்தில் பால் / புஷ்பம் ஏற்பாடு சுந்தரிக்கு தலை சுற்றியது இவர்களின் ஆளுமைக்கு எல்லையே இல்லையா.

சரி-- மணி 11.40 சாப்பிட வாங்கோ என்றார் அம்ஜம். 

மிக எளிய சமையல் தேங்காய் துவையல், சேப்பங்கிழங்கு fry , மிளகு ரசம், மோர், மோர்மிளகாய் . கௌரி ஒரிஜினல் / கௌரி நகல் நன்றாக ரசித்து புசித்தனர். சிறிது நேரம் ஜெர்மன் அலுவலக பொறுப்புகளை கௌரி விளக்க அனைவரும் கௌரி எவ்வளவு பெரிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறாள் -எல்லாம் சுபத்திரா வழங்கிய பயிற்சிக்கு தான் பெருமை என்று மகிழ்ந்தனர். இரு 'கௌரி' களும் பெரியவர்களை வணங்கி ஆசி பெற்று வீடு திரும்பினர்

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...