Friday, September 13, 2024

SALEM SUNDARI-48

 SALEM SUNDARI-48

சேலம் சுந்தரி- -48

இதோ சுந்தரி தனது ஆபீஸ் நண்பர்களுக்கு அழைப்பிதழ் வழங்குகிறாள். அலுவலகத்தில் முதலில் அழைப்பு கேப்ரியல் சாருக்குதான். அவர் பத்திரிகையை படிக்காமலேயே "இன்னா இவ்ளோ அர்ஜெண்டா கல்யாணம் கட்டிகினீங்கோ? " என்றார்.

சுந்தரிக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது . முத்துலக்ஸ்மீ ஓடிவந்து சார்கல்யாணம் அவங்க சிஸ்டர்க்கு சார் என்று விளக்கினாள்.

ஹா ஹா ஹா -காமடி ஆப் எரர்ஸ் என்று மீண்டும் ஹாஹா ஹா என்று குலுங்கி குலுங்கி சிரித்தார்.. 23rd ,நம்போ ரயில் கல்யாண மண்டபத்திலே யா       குட் 'ல் அட்டென்ட்  , GOD BLESS YOU என்றார் , சுந்தரி கை கூப்பி வணங்கினாள் .

முத்துலக்ஸ்மீ பத்திரிகை பார்த்து வியந்தாள் அன்னக்கி PROOF SAMPLE விட ரொம்ப க்ராண்டா வந்திருக்கு ஹை RESOLUTION பிரின்டிங் . எங்க அடிச்சீங்க?

சுந்தரி " சாரதா கம்பியூ ட்டர்ஸ்

முத்துலக்ஸ்மீ : நந்தி கோயிலா , அந்தம்மா பயங்கர கில்லாடி வாயும் பேசும் கையிலியும் தொழில் இருக்கு யாராலயும் போட்டி போடவே முடியாது. ஏன்னா  HIGHLY  QUALIFIED PROFESSIONAL . அவுங்க கிட்ட கம்பியூட்டர் படிக்கணும் 6 மாசத்துல பயங்கரமா கத்து குடுத்துடுவாங்க. எங்க அக்கா பையன் அங்க படிச்சிட்டு குவைத் போனான் இப்ப நல்லா சம்பாரிக்கிறான் அவங்க பேர  சொன்னாலே  கண் மூடி நன்றி சொல்லுவான்.

இப்போது சுந்தரிக்கு குழப்பம் ராமசாமி சார் செக்ஷன் போவதா ? அல்லது HR போவதா? HR போவதேநல்லது என்று வேலையைத் தொடர்ந்தாள். ராமசாமி சார் வீட்டில் போய் அழைப்பது தான் சரி [ஆஞ்சு வின் GUIDELINE போலும்] அங்கங்கே 2, 3 தானே குழப்பம் இல்லை.

2 பெரிய இடம் பாக்கி ஒன்னு சுபத்திரா 2 சுப்புரெத்தினம் ஆபீஸ் பாஸ் அல்லவா [சாரியை நல்லா டைட்டா கட்டிக்கிட்டு போகணும் இல்லைன்னா வகுரு பொடச்சுருக்கு னு விசாரணைகமிட்டி போட்ருவாரு- அவரு இந்தமாதிரி ஏடாகூடமா பண்ண கவலை யே  படமாட்டாரு -மாடசாமி சார் கிட்ட நீங்க அவளை டாக்டர் கிட்ட கூட்டிகிட்டு போயி  நல்லா டெஸ்ட் பண்ணச்சொல்லுங்க னு கூசாம சொல்லுவாரு. என்று அசை போட்டாள்  சுந்தரி]

மாலை போன் விசாலாட்சியிடமிருந்து

"அக்கா அவரு போன் பண்ணாரு ?

எவரு ? அதாங்க்கா அவரு ? நானே குழப்பத்துல இருக்கேன் சரியா சொல்லுமா என்றாள்  சுந்தரி.

ஐயோ எத்தனவாட்டி சொல்லணும்? அதாங்க்கா சுப்பிரமணி -குண்டூர் சுப்பிரமணி. .

இப்படி எல்லாம் பேர் சொல்லாத அவர் உன் வீட்டுக்காரர். என்றாள் சுந்தரி.

ஆமாம் பேர்சொன்னாலே புரியல பின்ன எப்படி சொல்றது என்றாள் விசாலாட்சி. .

சரி என்னசொன்னாரு ?

ஆடம்பரமா செலவு பண்ணக்கூடாதாம் ;-விசாலா ட்சி

அதான் அப்பவே சொல்லிட்டாரே -சுந்தரி

  சுந்தரி-  நீ என்ன சொன்ன ?

விசா: “இந்தப்பாருங்க பீடி சிகரெட் வெத்தலைப்பாக்கு புகையிலை இந்த பழக்கம் எதுனாச்சும் இருந்தா     முதல்  விட்டுருங்கனு சொல்லிட்டேன்.

சுந்தரி: சீ வீட்டுக்காரர்கிட்ட இப்படியெல்லாம் பேசக்கூட்ட்து.

விசா: அக்கா வீட்டுக்காரர் கிட்ட சொல்லாம தெருவுல போறவங்ககிட்டியா சொல்லமுடியும். வீட்டுக்காரவுங்க கிட்ட தான் சொல்லணும், சொல்லமுடியும் , அது தான் உண்மையான அக்கறை.

சுந்தரி: சரி அவர் என்ன சொன்னாரு.

விசா: மூச்சு விடல. ;ஒன்னு பயந்திருப்பாரு;  இல்ல இவளை கல்யாணம் முடியட்டும் அப்புறம் ஒரு கை பாத்துருவோம்  னு நெனச்சிருப்பாரு

சுந்தரி: என்னடி நீ கொஞ்சம் கூட கவலை இல்லாம என்னமோ பேசறே எனக்கு பயமா இருக்குடீ

விசா: நீங்க ஏன் கவலைப்படறீங்க; இதுக்கெல்லாம் பயந்தா முடியாதுக்கா . சொல்லவேண்டியதே நம்ம பொறுப்பு ; உம்ம் னு இருந்துட்டு பீடி குடிக்கிறார் தண்ணி அடிக்கிறார் னு  கதவுக்கு பின்னால அளுது புண்ணியமில்லை . முன்னாலேயே  சொல்லிட்டா இது கொஞ்சம் டேஞ்சர் கேசு னு ஒழுங்கா சொன்னபடி கேப்பாங்க . நீங்க கவலைப்பாடாதீங்க-- நான் இல்ல சமாளிக்கறவ என்கிறாள்

சுந்தரி:  வீட்டுக்காரரோட சண்டை பூசல் வேணாம்டி

விசா; யக்கா என்ன செய்யணும் னு எனக்கு தெரியும். அப்புறமா நீங்களே தெரிஞ்சுக்குவீங்க விசாலாட்சி நல்ல குடும்பம் நடத்துறானு. நீங்க தெம்பா சந்தோசமா இருங்கக்கா. நேர்மையா இருந்தா என்ன கஷ்டம் வந்திரும்?  ஒன்னும் ஆகாது ஆஞ்சநேயர் பாத்துக்குவாரு.

சுந்தரி சிரித்தபடியே " ஏய் உங்க வீட்டுக்காரர் பயங்கர ஆஞ்சநேயர் பக்தர் னு கேள்விப்பட்டேன்.  

விசா: நல்ல வேளை இன்னும் அதுக்கு வேற அடிச்சுக்கிட்டு சாவாம

சுந்தரி; நீ என்ன அடி தடியிலியே காலம் தள்ளுவ போலிருக்கே.

விசா: ஐயோ அக்கா அதில்ல இதுக்குதான் சண்டை வரும் னு கணக்கில்ல னு சொன்னேன். நம்ம தெருவுல எவ்வளவு கூச்சல் பாத்திருக்கோம்.

சுந்தரிஅதெல்லாம் வேணாம்டி நல்ல அமைதியா சந்தோசமா வாழனும் னு ஆஞ்சநேயரை வேண்டிக்கடி.

வம்பு பண்ணாதடி பேசாம அமைதியா நடந்துக்க. 

விசா: அக்கா கவலைப்படாதீங்க அமைதியாதான் இருப்பேன் ஆனா எல்லாத்துக்கும் தயாரா இருக்கணும்ல அழுதுக்கிட்டடு ஓடக்கூடாதுனு சொல்றேன் வேற ஒண்ணுமில்லக்கா.

சுந்தரி: “நீ சந்தோசமா இருந்தா  போதும் எனக்கு என்ன வேணும்” ? என்றாள்  தமக்கை .

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TEACHER BEYOND YOUR IMAGE-23

  TEACHER BEYOND YOUR IMAGE-23 ஆசிரியர் - உங்கள் பிம்பத்தை தாண்டி-23 அன்பர்களே இதுகாறும் ஆசிரியப்பணியில் ஆசிரியர் மேற்கொள்ள உகந...