Thursday, September 12, 2024

MUSIC DIRECTOR V.KUMAR

 MUSIC DIRECTOR V.KUMAR

இசை அமைப்பாளர் வி . குமார்

மிகச்சிறந்த இசை ஞானம் கொண்டவர்கள் பட்டியலில் திரு வி, குமார் அவர்களுக்கு ஓரிடம் நிச்சயம் உண்டு என்பது எனது ஆத்மார்த்த உணர்வு. நல்ல திறமை சாலி; ஆயினும் அவர் எட்டிய உயரம் அவரின் தகுதிக்கு  மிகவும் குறைவே. ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு 'அது, “ We step into this world at a wrong moment”     [நாம் பிறந்த வேளை [நேரம்] சரியில்லை எனும் பொருள் உணர்த்துவது]                                                                                         

 திரு குமார் அவர்களுக்கு அவ்வாசகத்தின் ஒவ்வொரு எழுத்தும் சாலப்பொருந்தும் . பாவம் மனிதர் அமைதியாகவே வாழ்ந்து ஆரவாரமின்றி சாதித்து விரைந்து மறைந்தார். அவரின் ஆக்கங்கள் முற்றிலும் சொந்த வடிவமைப்பு மற்றும் இயல்பான ஓட்டம் உடையன. இசைக்கருவிகளின் தொகுப்பும் கூட அவரின் சமகால ஜாம்பவான்களின் திறனுக்கு ஈடானவை. முதலில் நாடக இசையமைப்பில் பயணித்து பின்னர் திரு கே பாலச்சந்தர் வாயிலாக திரையுலகுக்கு வந்தவர். காலப்போக்கில் வேறு இயக்குனர்களுக்கும் இசை அமைத்து நல்ல பாடல்களை வழங்கியுள்ளார். .    

விண்ணுக்கு மேலாடை [நாணல் -1965] கவிஞர் சுரதா,  வி குமார் , டி எம் எஸ்    பி சுசீலா

அதி நளினமான ராக அமைப்பு மற்றும் இயல்பான நடையில் பாடல் ; பாடகர்கள் மிக அனாயாசமாக பாடி இப்பாடலை ஒரு நல்ல டூயட் நிலைக்கு எடுத்துச்சென்று பாடல் வெற்றி கண்டு ரேடியோ சிலோன் நிகழ்ச்சியில் பலமுறை இடம் பெற்றது . வி குமாரின் பண்பட்ட இசை மற்றும் கருவிகளின் முறையான பிரயோகமும் அவர் ஒரு தேர்ந்த இசை அமைப்பாளர் என்பதை நிறுவியது . டி எம் எஸ் முத்துராமனுக்கு பாடுவது வெகு இயல்பாக ஒலிக்கிறது அதிலும் இடைஇடையே பேச்சு வழக்கில் நிகழும் உரையாடல் கவனிக்கத்தக்கது. இப்பாடலுக்கு இணைப்பு இதோ .

https://www.google.com/search?q=NAANAL++MOVIE-VINNUKKU+MELAADAI+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=419ad3eaf305d86b&sca_upv=1&sxsrf=ADLYWIKrGhV8hSIek5-yRSy54WizwhHPoQ%3A17  VK TMS PS

 

கன்னி நதியோரம் [நீர்க்குமிழி -1965] ஆலங்குடி சோமு, வி குமார் டி எம் எஸ்            பி சுசீலா

ஜெயந்தியும் நாகேஷும் பங்கு கொண்ட ஒரு வித்யாசமான பாடல் , ஆலங்குடி சோமு வடித்த கவிதை குமாரின் இசையில். நாகேஷுக்கு டி எம் எஸ் பாடிய முதல் பாடல் என நினைக்கிறேன். எனினும் நல்ல பாடல், நடனம் மற்றும் உணர்ச்சிகர நடிப்பு என அனைத்தும் கொண்ட பாடல்.  யார் யாரோ நடனம் பற்றி பேசும் பலரும் இந்த நாகேஷின் நடனவித்தக,ம் பற்றி வாய் திறப்பதில்லை ; ஏனோ தெரியவில்லை.   ஆயினும்நாகேஷின் அதி நுணுக்கமான நடன அசைவுகளும், பலருக்கும் வயப்படாத உடல் நெளிவுகளும் நிச்சயம் ஆச்சரியம் கொள்ள வைக்கும்.

கண்டு ரசிக் இணைப்பு 

https://www.google.com/search?q=KANNI+NADHIYORAM+VIDEO+SZONG&oq=KANNI+NADHIYORAM+VIDEO+SZONG+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTE0MzA3ajBqNKgCALACAQ&sourceid=chrome&ie=  AALANGUDI V K TMS, PS

என்ன தெரியும் இந்த சின்ன பெண்ணுக்கு [நினைவில் நின்றவள் -1967 ] வாலி, குமார்  பி சுசீலா

அந்தக்காலகட்டத்தில் தோழியர் கூடி குதூகலிக்கும் பாடல் காட்சி பல படங்களில் இடம் பெற்றதுண்டு.

அது போன்ற ஒரு பாடல் குமாரின் இசை அமைப்பில். கே ஆர் விஜயாவின் நடன பாவங்களும் கேலி கிண்டல் என பயணித்த பாடல். பல பின்னாள் நடன நாரிமணிகளை பாடலில் காணலாம்

https://www.google.com/search?q=enna+theriyum+indha+chinna+pennukku+video+song&oq=enna+theriyum+indha+chinna+pennukku+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgk NINAIVIL NINDRAVAL VAALI    V KUMAR  PS

மயக்கத்தை தந்தவன் யாரடி [பொம்மலாட்டம் -1968] ஆலங்குடி சோமு, குமார்       பி சுசீலா

மற்றுமோர் பெண்கள் பாடல்-- கேலியும் கிண்டலும் மிளிரும் வகை , குமாரின் இசையில் பொம்மலாட்டம் படத்தில் . சுசீலா பாட ஜெயலலிதா, சச்சு பங்கு கொண்ட பாடல் காட்சி.  நடனத்துக்கும் துள்ளலுக்கும் குறைவில்லா இசை மற்றும் வெகு இயல்பான நடிப்பு . கேட்டு மகிழ இணைப்பு  இதோ

https://www.google.com/search?q=MAYAKKATHTHAI+THANDHAVAN+YAARADI++video+song&newwindow=1&sca_esv=419ad3eaf305d86b&sca_upv=1&sxsrf=ADLYWIJr65Fzyobfw-K_TFFt6Q5gh4B6sw%3A1725272 BOMMALAATTAM 1968   AALANGUDI  VK PS

இவை போன்ற பல நல்ல பாடல்களை வடிவமைத்தவர் வி குமார்

தொடரும்

அன்பன்

ராமன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...