SALEM SUNDARI- 50
சேலம் சுந்தரி-
-50
மறுநாள் காலை மணி 9.40 ஜங்க்ஷன் நுழைவாயிலில் சுந்தரி எதிர்ப்பட்ட கேப்ரியல் சாருக்கு வணக்கம் சொல்லி வலது புறம் திரும்ப
" யக்கா ராமசாமி சாரை பாக்கணும் எங்க போவணும் ?
என்றாள் ஒரு தடித்தபெண்.
சுந்தரி இங்க
4, 5 பேர் அதே பேர்ல இருக்காங்க. நீங்க யாரைப்பாக்கணும்?
சுதாரித்த பெண் யக்கா அவரு சீரங்கம் [சுந்தரிக்கு புரிந்து விட்டது ]. அவங்க வீட்டு அம்மா பேர் அம்புஜம் மாமியா?-சுந்தரி.
“அவுங்க தான் அவுங்க தான்” என்றாள் வந்தவள்.
சரி, இங்க வாங்க என்று கூட்டிச்செல்ல மேலிருந்து ராமசாமி கீழே இறங்கிக்கொண்டிருந்தார். சார் இவங்க உங்களை பார்க்கணுமாம் என்று சுந்தரி ஆரம்பிக்க, ராமசாமி புரிந்துகொண்டார் வந்திருப்பது லாவண்யா என்று. “என்ன லாவண்யா? என்றார்.
சாமி, கல்யாணத்துக்கு பால் எவ்வளவு தேவைப்படும் கேட்டுகிட்டு போவலாம்னு வந்தேன்.
அதுக்காகவா இவ்வளவு தூரம் வந்த ?
இல்ல சாமி சமையல் சேசாத்ரி அய்யரூ பால் வேணும்னு சொல்லிருக்கிறாரு ஆனா அளவு சொல்லல இந்த பூக்காரரு [கோய்ந்த சாமி] 2 கல்யாணம் புள்ள , தெளிவா கேட்டுக்க னு சொல்றாரு. அதான்---
என்று இழுத்தாள்.
ராமசாமி "நீ சொல்றது ரைட் ஆனா எங்க கல்யாணம் சின்ன கூட்டம் தான் வரும்; இதோ இவங்க தங்கச்சிக்கு தான்
"
அப்பிடீங்களா வணக்கம் மா . சரிங்க அய்யா உங்க வீட்டு கல்யாணம் னு சொல்லிட்டீங்க அதுனால அவரு [சேசாத்ரி அய்யரு] எவ்வளவு கேக்குறாரோ நான் சப்பளை பண்ணீர் ரேன் சாமி. இனி யார் கேட்டாலும் நம்ம வீட்டு தேவைக்கு போகத்தான். வெய்யில் கொடூரமா அடிக்குதா புல், வெக்கல் , புண்ணாக்கு . எல்லாம் டிமாண்டு, ஏதோ ஓடுது .
“அம்மா நம்ம சொந்தக்காரவுங்களா? என்று சுந்தரியைக்காட்டி கேட்டாள் லாவண்யா.
“அப்படிதான் வெச்சுக்கியென், இங்க ஆபீஸ் ல எங்க கூட வேலை பாக்குறவுங்க , அதுனால நல்ல படியா அளவு குவாலிட்டி எல்லாம் சரியா குடு எங்களுக்கு வேறென்ன வேணும்.”
-ராமசாமி.
சாமி உங்கவீட்டுக்குன்னா கோயிலுக்கு கொடுக்கிறதா தான் நெனச்சு குடுப்பேன். நான் உங்களால வளந்தவ ,அதுவும்உங்கவீட்டு அம்மா மகாலெச்சுமி யே தான். அந்த நன்றி என்னக்கும் உண்டு சாமி , வரட்டுங்களா ?சேசாத்ரி ஐயரு மாயவரம் கல்யாணம் போயிருக்காரு அதுனால உங்கள கேட்டு விவரம் தெரிஞ்சுக்க வந்தேன் .வாரெங்கம்மா என்று சுந்தரிக்கு கும்பிடு போட்டுவிட்டு சர் என்று டிவிஎஸ்-50 வாகனத்தில் சிட்டாய் பறந்தாள் .
சுந்தரி கதி கலங்கி இந்த ராமசாமி சாருக்கு இந்தியாவுல தெரியாதவர்களே இருக்கமாட்டாங்க போல. அன்னக்கி அந்த கம்பியூட்டர் சாரதாம்மா "உங்களுக்கு / உங்களை தெரியாதவங்க யார் இருக்காங்க" என்று ராமசாமி சாரையே அதிரவிட்டாங்க; அது சரிதான் போல இருக்கு யம்மாடியோவ் என்று பெருமூச்செறிந்தாள்
போன் PK இடம் இருந்து "குட் மாணிங் "நான் பஞ்சாபகேசன் பேசறேன், கல்யாண மண்டபம் பக்கத்துல நல்ல ரூம் கிடைக்கும் இல்லையா?
எதுக்கு சார் /என்றார் ராமசாமி. நானும் ஒய்ப்பும் வர பிளான் இருக்கு அது தான் புக் பண்ணிக்கலாமா னு கேட்டு தெரிஞ்சுக்கறேன் என்றார்.
“சார் ஒரு சின்ன ரிக்வஸ்ட், என்ன இருந்தாலும் அதெல்லாம் டூரிஸ்ட் ஓரியன்டட் பிசினஸ்.
உங்கள மாதிரி ஆர்தடாக்ஸ் மனுஷாளுக்கு, அவ்வளவு சௌரியமா இருக்குமான்னு தெரியாது. அதுனால நீங்க எங்க வீட்டுல தங்கினா ரொம்ப சந்தோஷம்; மேலும் அப்சொல்யூட் பிரைவசி ,
AC , கோயில் பக்கம் நல்லா ரீ மாடல் பண்ணி
FURNISHED SPACIOUS ROOM மாடில இருக்கு . நீங்க தாராளமா தங்கிக்கலாம்.
எங்கெங்கே போகணுமனாலும் நல்ல கன்வேயன்ஸ் பண்ணித்தரேன். நீங்க ஓகே சொல்லிட்டீங்கன்னா, I'll be the happiest person; also Mr .Madasami will keep
company with you whenever you desire என்று அழகாக பேசினார் ராமசாமி.
மறுமுனையில் இருந்து,
"இவ்வளவு சொல்லும் போது நான் என்ன தட்டவா முடியும்? பிறத்தியாருக்கு தொந்தரவு வேண்டாமே னு பார்த்தேன் என்றார் PK .
நோ நோ நோ It is a pleasure ,
kindly don't deny it என்று மொத்தமாக மடக்கி விட்டார் ராமசாமி.
தொடரும்
அன்பன் ராமன் .
நம்ம ராமன் சாமி கூடவே நானும் தங்கலாமா? 😃😃
ReplyDelete