Music director V.KUMAR-2
இசை அமைப்பாளர் வி குமார் -2
வா வாத்யாரே ஊட்டாண்ட [பொம்மலாட்டம் -1968] வாலி , வி குமார் , மனோரமா
மனோரமாவுக்கு பாடல் பாட வாய்ப்பளித்தவர்களில் முதல் இடம் வி குமாருக்கு உண்டு . அப்படி வந்த பாடல் தான் இது. சென்னை தமிழ் 'ஊட்டாண்ட' வரங்காட்டி ', வாராவதி ' ஜகா ' போன்ற சொற்கள் பாடலின் இயல்புக்கு வலு சேர்க்க மனோரமாவுக்கு உணர்ந்து பாடியுள்ளார்.
சோ
-மனோரமா
இனைந்து
வழங்கிய
நகைச்சுவை.
ஆயினும்
மனோரமாவின்நெடிய ஆலாபனை ரசிக்கக்கூடிய ஒன்று . கேட்டு மகிழ
கண்ணொரு பக்கம் நெஞ்சொரு
பக்கம்
[நிறை
குடம்
– 1969 ] கண்ணதாசன் வி குமார் டி எம் எஸ். பி எஸ்
ஒரு நிறைவான டூயட் அந்நாளில் பிரபலமான பாடல் . சிவாஜி -வாணிஸ்ரீ மிக இயல்பாக ஆடிப்பாடி நடித்திருக்கின்றனர். எளிமையான இசையில் நளினமாக அமைந்த பாடல் . கேட்டு மகிழ இணைப்பு இதோ .
https://www.google.com/search?q=kannorupakkam+nenjoru+pakkam+video+song&oq=kannorupakkam+nenjoru+pakkam+video+song+&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOTIJCAEQIRgKGKABMgkIAhAhGAoYoA nirai kudam 1969 kd vk tms ps
மற்றுமோர் காவியப்பாடல் படம் ஆயிரம் பொய் [1969 ] கண்ணதாசன் , வி குமார் , டி
எம் எஸ், பி. எஸ்
புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பாடல் பிரபலம் ஏனெனில் படம்
முற்றிலும் நகைச்சுவை அதில் ஒரு மாறுபட்ட காட்சி எனவே வெற்றி பெற்று வானொலியில் பலமுறை
கேட்ட பாடல்
ஜெய்சங்கரும் வாணிஸ்ரீ யும் போலியாக ஒருவரை ஒருவர் வம்பிழுகுக்க பாடல் பயணிக்கிறது. ஜெய்சங்கர்
சொந்தகுரலில் பாடுவது போல் டி எம் எஸ் வெகு நேத்தியாக பாடியுள்ளார். ரஸிக்க இணைப்பு இதோ
https://www.google.com/search?q=pulavar+sonnadhum+poyye+poyyre+video+song+&newwindow=1&sca_esv=d21f97ffd6d7790a&sca_upv=1&sxsrf=ADLYWIIPMStpnXiexXVpnZWiIpULhsB8xA%3A1726216055926 1000 poi 1969 KD VK TMS PS PULAVAR SONNADHUM
தொட்டதா தொடாததா [நினைவில் நின்றவள் -1967 ] வாலி வி குமார் , டி எம் எஸ் பி சுசீலா
ரொமான்டிக் வகைப்பாடல், ரவிச்சந்திரன் கே ஆர் விஜயா பங்கு கொண்ட
காட்சி.
குமார்
பாணியில்
அமைந்த
சீரான
இசை
, நேராக
பயணிக்க
காட்சியில்
அவ்வப்போது
சூடு
ஏறுவது
ரவி-கீ ஆர் வி ஜோடி காட்சிகளுக்கே
உரிய
அந்நாளைய
வகை
. மீண்டும்
டி
எம்
ஸ்
குரல்
ரவிக்கென
மாறியிருப்பதைக்காணலாம். கண்டு ரசிக்க இணைப்பு
தில்லையிலே சபாபதி [ஆயிரம் பொய் 19 ] வி குமார் பி சுசீலா ,
பாடல் ரொமான்டிக் ரகம் எனினும் நாயகன் ஜெய்சங்கரை துரத்தி அடிக்கும்நாயகியாக -வாணிஸ்ரீ நகைச்சுவைக்கு குறைவில்லை. ஆள் மாறாட்டம் செய்ததாக நினைத்துப்பாடுவது தோன்றுகிறது. ரசிக்க இணைப்பு இதோ
https://www.youtube.com/watch?v=awl6lfD9Q40 1000 poi 1969 THILLAIYILESABAPATHI KD VK , PS
இவை போன்ற பல ஜனரஞ்சகப்பாடல்கள் குமாரின் இசையில் வெளிவந்துள்ளன,
தொடரும்
அன்பன் ராமன்
No comments:
Post a Comment