Monday, September 16, 2024

TM SOUNDARARAJAN –22

 

TM SOUNDARARAJAN –22

டி எம் சௌந்தரராஜன்-22

சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ [சந்திரோதயம்-1966 ] வாலி , எம் எஸ் வி ம் டி எம் எஸ் , பி சுசீலா

1966 எம் எஸ் வி தனித்து இயங்கிய ஓராண்டுக்குள் பெரும் சாதனைகளை வழங்கிய நேரம் அது. அப்படி வந்த பாடலில் வெகு சுவையான ராகம், காதல்  பாவம், ஏற்ற இரக்கம் மற்றும் கருவிகளின் மேன்பமையான இயக்கம் இவ்வனைத்தையும் தாண்டி தாளம் ஏற்படுத்திய மயக்கம் என சொல்லிக்கொண்டே போகலாம். இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே வெவ்வேறு வகை மற்றும்  சுவை கொண்டவை . சந்தேகமில்லாமல், திரை இசையில் எம் எஸ் வி ஒரு உயர்ந்த ஸ்தானத்தை எட்டிய படம் இது. கல்லூரி பல்கலை மாணவர்கள் .எம் எஸ் வியின் இசையில் மயங்கியிருந்தது நியாயமானது தான் என்பதை இப்பாடல் வலிமையாக உணர்த்தும்.  டி எம் எஸ்ஸின் நளினங்களையும் சுசீலாவின் குரலின் இனிமையையும்  கேட்டு மகிழ  இதோ இணைப்பு

https://www.youtube.com/watch?v=NtEqNb8G_ZI chandrodhayam oru vali msv tms ps

அதே படத்தில் மற்றுமோர் விறுவிறுப்பு

காசிக்குப்போகும் சந்நியாசி [சந்திரோதயம் -1966]  வாலி , எம் எஸ் வி, டி எம் எஸ் , சீர்காழி கோவிந்தராஜன்

ஒரு பாடலில் இவ்வளவு ரகளை செய்ய முடியுமா / செய்திருக்கிறார்களே . துவக்க பல்லவியில் இரண்டாம் வரியில் 'கங்கைக்குப்போகும் பரதேசி என்ற சின்ன சொற்றொடரை --அதிலும் பரதேசி என்ற ஒற்றை சொல்லை எவ்வளவு நேரம் நீட்டி கங்கை வரை கொண்டு போகும் [டி எம் எஸ்-எம் எஸ் வி ] மற்றும்காசிக்கு காசிக்கு காசிக்கு என்று ஆத்திரம் அடங்காமல் முழங்கும் சீர்காழி, பின்னர் சிவனே சிவனே ஹரஹர சிவனே என்று சிவன் வராமல் விடமாட்டார் போலும் எனும் படி முழங்கியதும் படத்தின் /பாடலின் ஹை லைட் . இறுதியில்   டி எம் எஸ்/-சீர்காழி சளைக்காமல் விரைந்து எதிர் வாதம் செய்வதும், எம் ஜி ஆர் -நாகேஷ் முகபாவங்களும் இன்று காணக்கிடைக்காத அறிய வகை நடிப்பு.

கேட்டு வியந்து மகிழ இணைப்பு இதோ 

https://www.youtube.com/watch?v=smuhP7O1_DM kasikku pogum vaali msv tms, sg

மற்றுமோர் எதிர்வாதம்

கேட்டுக்கொடி உறுமி மேளம் [ பட்டிக்காடா பட்டணமா] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் எல் ஆர் ஈஸ்வரி

புதுமைக்கும் பழமைக்கும் ஆன வாதம். ஆனால் இது இசை அமைப்பாளரின் சாம்ராஜ்யம். பாடலை நன்கு கவனியுங்கள். துவக்கத்தில் உறுமி மேளம் ம் ம் ம் என்று அதிர்ந்தாலும்   ,, பட்டிக்காட்டு ராகம் பாவம் எனும் இடத்தில் மேற்கத்திய ட்ரம் போங்கோ மிரட்ட , மேற்கத்திய தொனியில் பெண் பாடும் இடங்களில் உறுமியும் தவிலும் அதிர்வது வேண்டுமென்றே கலைகளில் பேதம் இல்லை என்று சொல்வது போல் இசை அமைத்துள்ளார் மெல்லிசை மன்னர். இந்தவகைப்பாடல்களில் முறு க்கேற்ற  எம் எஸ் வி  டாட் டா  டா என்று இடையில் உசுப்பேத்துவார். இந்தப்பாடலில், எல் ஆர் ஈஸ்வரி பட்டையைக்கிளப்புகிறார். சிவாஜி கணேசனின் கிராமிய நடன இயக்கங்களை ரசிக்க ஓர் வாய்ப்பு. இன்றும் எங்கு கேட்டாலும் நின்று கேட்டும் ரசிகர் கூ ட்டம் .இப்பாடலுக்கு உண்டு கேட்டு மகிழ இணைப்பு 

https://www.google.com/search?q=kettukkodi+urumi+melam+video+song+x&oq=kettukkodi+urumi+melam+video+song+x&gs_lcrp=EgZjaHJvbWUyBggAEEUYOdIBCTE4OTUwajBqNKgCALACAQ&sourceid=chrom mketukkodi urumi melam pattikkaada kd msv tms lre

மீண்டும் அதே பாடல் தொலைக்காட்சிக்காக [தூர்தர்ஷன்] எம் எஸ் வி குழுவினர் நேரடியாக வழங்கிய கேட்டுக்கொடி உறுமி மேளம். பரவசமூட்டும் துடிப்பான எம் எஸ் வி யின் இசைக்குழு.

பாடல் என்று வந்துவிட்டால் எம் எஸ் வி தன்னிலை மற ந்து , அவர் உடலெங்கும் இசை நர்த்தனம் செய்யும்..  பாடல் துவங்கியதும் ஆட்டமும் துடிப்பும் ஆட்கொள்ள இம்மிபிசகாமல் இசைக்குழுவை இயக்குவதைக்காணலாம். நான் அறிந்த வரையில் தன்னை மறந்து இசையில் திளைக்கும் இசையமைப்பாளர் எனில் அது எம்  எஸ் வி தான். மேலும் கீபோர்ட் ஹார்மோனியம் என்று இடம் மாறிக்கொண்டே இருப்பார்  . திடீரென்று கலைஞர்களில் சிலருக்கு பிரத்தியேக சங்கேதங்கள் வழங்குவார். . அவர் குழுவில் பல பிரபலங்களைக்காணலாம் . கிட்டார் பாபு, குழல் நஞ்சப்பா , தும்பா சேகர் , தபலா பிரசாத் , மீசை முருகேஷ் [மோர்சிங் , உறுமி, து ந்தனா, தவில் அனைத்தையும் அவ்வப்போது வாசிக்கிறார்]. . பாடலின் இறுதியில் எம் எஸ் வி எத்துணை வகை தாளங்களை இயக்கி பிரமிக்க வைக்கிறார். அந்த சூழலில் பரபரப்பாக கை  தட்டும் மஞ்சள் சட்டை முன் வழுக்கை சதன் அனைவரையும் காணலாம். முத்தாய்ப்பாக தபலாவில் பிரசாத் 'என்னடி ராக்கம்மா'  பாடலை வாசிப்பதும் மீண்டும் அனைத்துக்கருவிகளும் போட்டிபோட்டு முழங்கி முடிவதும் எம் எஸ் வியின் ஆளுமைக்கு சான்று. அனால் ஒன்று பொறுமையாக கேளுங்கள் ரசிப்பதற்கு பல கட்டங்கள் உள்ளன, இணைப்பு இதோ

https://www.google.com/search?q=kettukkodi+urumi+melam+MSV+ORCHESTRA+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=2e926f43141c8c40&sca_upv=1&sxsrf=ADLYWIJ3j_3h_YK6CAEBK3-8pUWUYv2CDw%3A1726321966409&ei=LpXl MSV TROUPE

மற்றுமோர் அதகளம்

வில் சிங் பார் யூ [ மனிதரில் மாணிக்கம் =1973] வாலி எம் எஸ் வி, டி எம் எஸ்

சிவாஜி கணேசனின் அபிநயம் தனிச்சிறப்பு .கரகர பிரியாவில் ஒலிக்கும் பாடல், ஆங்காங்கே ஆங்கில சொற்கள்.

 பைத்தியத்திடம் சிக்கிய சிவாஜி -மனோரமாவின் துயரமே பாடல். வெகு நேர்த்தியான பாடல், இசை நடனம் , நடிப்பு .

 கத்தியுடன் பிரமீளா கதி கலக்குகிறார். கேட்டு ரசியுங்கள் டி எம் எஸ்ஸின் இசை நுணுக்கங்களை.

https://www.dailymotion.com/video/xh5rr5 i will sing manidharil 1973 vali msv tms

நன்றி

அன்பன் ரா மன்

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...