Monday, September 16, 2024

OLD MOVIE SONGS -2

 OLD MOVIE SONGS -2

பழைய திரைப்படப் பாடல்கள்-2

திரைப்படப்பாடல்களை ப்பற்றிய கண்ணோட்டம் ஒரு குறைகாண முயலும் முயற்சியாகவே இருந்து வந்திருக்கிறது; ஏனெனில் அது பாரம்பரிய இசை போல் ஒரு கட்டுப்பாட்டில் இயங்குவதல்ல என்றே குற்றம் சொல்கின்றனர். ஆனால் திரைப்பாடலின் தேவையும், பார்வையும் கட்டுப்பாட்டில் இயங்குவதல்ல. ஆயினும் அவற்றிற்கும் எண்ணற்ற சங்கிலிப்பிணைப்புகளும் , கருத்துசார் செழுமையும் கொண்டே அப்பாடல்கள் கதைக்கான விறுவிறுப்பை முன்னெடுக்க இயலும்

அதாவது நல்ல பாடல் என்பது கதையின் ஓட்டத்தை குலைக்காமல் காட்சியின்  சுவையை வலுப்படுத்தவேண்டும். அது பாடல் வடிவில் இயங்க பல தேவைகளை செவ்வனே நிறைவேற்றிட வேண்டும்.. கதையின்/ குறைந்த பட்சம் காட்சியின் உள்ளார்ந்த தன்மையை  உணர்த்துவதே பாடல். இந்த ஒரு கருத்தை முன்னிலைப்படுத்தி வடிவமைக்கப்பெற்ற பலபாடல்கள் வெற்றி அடைந்தவை. அதை சாத்தியப்படுத்த பெரும் கூட்டு முயற்சி தேவை என்பதே பழைய பாடல்களின் செயல் முறையாக இருந்தது. இப்போது சூழலும் அணுகுமுறைகளும் வேறு ;எனவே இந்நாளைய பாடல்கள் நீர்க்குமிழிகள் போல் அவ்வப்போது வெடித்துச்சிதறும் .பண்பின. . அவை நினைவில் தங்குவதே இல்லை

அதன் அடிப்படை என்னவெனில் , பாடல் கள் .  காட்சிகளோடு ஒன்றாமல் , வெறும் இரைச்சலும் ஆரவாரமும் ஏற்படுத்தி , அவற்றை ரசிக்க வைக்க எந்த உந்துதலும் இல்லை. பாடலில் கவிதைப் பண்புகள் இல்லாமல் வெறும் கொச்சைச்சொற்களாக வடிவம் கொண்டு பாடல் என்ற பெருமையை இழந்துவிட்டவை. ஆனால் பழைய பாடல்களின் நிலை வேறு. அவை கூட்டுமுயற்சியின் . பலனாக விளைந்தவை .

பாடல் உருவான முறை [பழைய செயல் முறை ]

விவாதம் 1 

கதாசிரியர் இயக்குனர், தயாரிப்பாளர் கூடி பேசி பாடல் எங்கெங்கு அமைய வேண்டும் என்று விவாதிப்பர்.. சில தருணங்களில் இசை அமைப்பாளர் அழைக்கப்பட்டு அவர் என்ன ஆலோசனை தருகிறார் என்று தெரிந்து கொள்வர்.

கிட்டத்தட்ட அப்போதே   பாடல் எண்ணிக்கைநிர்ணயம் செய்யப்படும். பாடல்களுக்கான பட்ஜெட் பற்றி இசை அமைப்பாளர் தெரிந்து கொள்வார். பொருளாதார நிலையைப்பொறுத்து பாடலின் தேவைக்கு இசைக்கலைஞர்கள் எவ்வளவு பேர் என்று முடிவு செய்து இவை அனைத்தும் தெளிவாக குறித்துக்கொள்வர்..

இந்த விவாதத்தில் முக்கியப்புள்ளி கதை தான்; அதற்கேற்ப பாடலின் அமைப்பு நிர்ணயிக்கப்படும் . சரியான அடிப்படை புரிதலுடன் கூட்டம் நிறைவடையும். அவ்வளவு விவரங்களையும் பல்வேறு உதவியாளர்கள் கவனமாக குறித்துக்கொள்வர     

விவாதம் -2

மொத்தப்பாடல்களும் அவற்றிற்கான இடங்களும் முடிவான பின் கவிஞர் , இசை அமைப்பாளர் இருவரும் திரைப்படம் தயாரிக்கும் அலுவலகத்தில் கூடி விவாதம் செய்வர். 

 முக்கிய பொருள் பாடலுக்கு மெட்டா , மெட்டுக்குப்பாடலா என்பதே. நிச்சயம்

வெற்றிப்பாடலாக்க வேண்டும் எனில் மெட்டு அமைத்து அதற்கான பாடல் [மீட்டருக்கு மேட்டர்] எழுதுவார் கவிஞர். பாடலின் உணர்வு பாவம் முக்கியம் எனில் முதலில் பாடல் எழுதப்பட்டு , பின்னர்[மேட்டருக்கு மீட்டர்]ட்யூன் என்னும் மெட்டு அமைக்கப்படும் . சிறு சிறு மாற்றங்கள் செய்து அழகான பாடலை  உருவாக்கிவிடுவர்.

படத்தில் யார் பாடப்போகிறார்கள் என்பதற்கேற்ப பாடகர்கள் [ஆண்/பெண் ] முடிவு செய்வர்.

விவாதம் 3

பாடகர்கள், இசை அமைப்பாளர், இயக்குனர் அனைவரும் பாடலைப்பாட ஒத்திகை பார்ப்பர். இந்த ஒத்திகை ஐந்து, ஆறு , முறை நிகழும்அதன் பின்னர் இசைக்குழுவினர் , பாடகர், இசை அமைப்பாளர் அனைவரும் பாடலை திரும்பத்திரும்ப இறுதி வடிவத்திற்கான ஒத்திகை பார்ப்பார்கள்.

இந்த கட்டத்தில் பாடல் மெருகு ஏற்றப்பட்டு பொலிவாக விளங்கும். இவ்வாறு பலரும் நேரடியாக பங்கு கொண்டு உருவாக்கிய பாடல்கள் உயிரோட்டமான அமைப்பில் வெளிவந்ததில் வியப்பென்ன?   [மீட்டருக்கு மேட்டர். மேட்டருக்கு மீட்டர் என்பன மெல்லிசை மன்னரின்           [MSV] இசைக்குழுவினர் உபயோகித்த சங்கீத சங்கேதங்கங்கள்

தொடரும்

அன்பன் ராமன்  

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...