Monday, September 16, 2024

SALEM SUNDARI-49

 SALEM SUNDARI-49

சேலம் சுந்தரி- -49

சென்ற பதிவில்

சுந்தரி: “நீ சந்தோசமா இருந்தா  போதும் எனக்கு என்ன வேணும்” ? என்றாள்  தமக்கை .

ஐயோ இந்தப்பெண்  புருஷனோடு சண்டைக்கு தயாராய் இருப்பாள் போலிருக்கிறதே ஆஞ்சநேயா இது என்ன சோதனை ? என்று பிரார்த்தனை செய்ய  ஆஞ்சநேயன்    " நீ ஏன் கவலைப்படுகிறாய்?

நீ படித்து பட்டம் வாங்கி,, அரசாங்க வேலையில் கௌரவமான ஆட்களுடன் இருக்கிறாய். அவள் அதிகம் படிக்காமல் கார்மெண்ட் அலுவலகத்தில் டிசைனர் ஆக பல கிராதர்கள் மத்தியில் வேலை செய்கிறாள். சின்னப்பெண் என்று அவளை சீண்டியவர்கள் பலர், பல், மூக்கு , கை , கால் இவை பிரத்தியேகமாக உடை பட்டு ஆளை விட்டால் போதும் என்று  ஓடி மறைந்தனர். அவளின் உக்கிரத்தைப்பார்த்த முதலாளி அம்மாள்,, உண்மை உணர்ந்து பிரச்னை செய்யும் ஆண்களை வெளியேற்றி விட்டாள். கிட்டத்தட்ட, இப்போது பெண்களே நிர்வகிக்கும் நிறுவனம்; ஒரே ஒரு ஆண் வேன் டிரைவர் கந்தசாமி கௌண்டர்-- [55] ரொம்ப கௌரவமானவர். நாணயஸ்தர். இதெல்லாம் உனக்கு தெரியாது.

ஏன்?  நீ அரசாங்க பரீட்சைக்கு படித்துக்கொண்டிருந்தாய் .அக்காவை இதை எல்லாம் சொல்லி சஞ்சலப்படவைத்தால்,, படிப்பு தடைப்படும் என்று தானே சமாளித்து, முதலாளி அம்மாவிற்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி, இப்போது விசாலாட்சிக்கு கல்யாணம்.

முதலாளி மகிழ்ச்சியுடன் விசாலாட்சியை அனுப்ப தயார். ஆனால் தலைமை டிசைனர் ?? உள்ளூர வருத்தம்.

 இன்டர்வ்யூ வைங்கம்மா நல்ல டிசைனரா  செலெக்ட் பண்ணுவோம் என்று விசாலாட்சி சொல்லி இப்போது 4 விண்ணப்பங்கள் [பெண்கள் ] பரிசீலனையில் உள்ளனர். விசாலாட்சி ஐடியா சொன்னாள்  "மேடம் நீங்க கொஞ்ச நாளைக்கு சீப் டிசைனர் னு சொல்லி வந்தவளை எக்சிக்யூட்டிவ்   டிசைனர் னு வேலைக்கு வெச்சுக்குங்க. எந்த டிசைன் தந்தாலும், இன்னும் நல்லா வேணும் னு சொல்லுங்க. பேச்செல்லாம் போன்லேயே பண்ணுங்க நடுங்கிகிட்டு வேலை நடக்கும்.

ஏதாவது வேணும் னா வாட்ஸாப் போடுங்க எனக்கு. நான் தெரிஞ்ச கரெக்ஷன் சொல்லறேன். நீங்களும் வாட்சப் லியே பேசி முடிங்க. பிசினஸ் சூப்பரா ஓடும் என்றாள்.

இந்த குட்டை பயங்கர கில்லாடி தான் னு முதலாளி மேடம் உள்ளூர வாழ்த்து சொல்லி விசாலாட்சிக்கு ஏதாவது செய்யணும் னு ஆர்வமா இருக்காங்க,                 நீ கவலையே கொள்ளாதே.

மாப்பிளை சுப்பிரமணி-- மிகுந்த நேர்மையாளன் விசாலாட்சியின் வாய்க்கு, இடமே இல்லாமல் நடந்து கொள்வான்.   .

 நல்ல பையனை பிடித்திருக்கிறாய். உன் தங்கை அமோகமாக இருக்கப்போகிறாள்.. பஞ்சாபகேசன் குடும்பம்-- ஒழுக்கத்தின் தலைமைப்பீடம்.

அவ்விடம் தான் உன் தங்கை இனிமேல் சார்ந்து வாழும் இடம் கவலை விடு, கடமை எடு என்று ஆஞ்சனேயத்வனி அவளை உந்த கண் திறந்தாள் மணி 9.10. விரைவாக தயார் செய்து கொண்டு அலுவலகம் சென்றாள்.

கீழே நுழை வாயில் அருகே, ராமசாமி சார்.

கைகூப்பி-- வணக்கம் தெரிவித்தாள்.

என்ன? ஏற்பாடெல்லாம் நடக்கிறதா ? என்றார் ராமசாமி.

உங்களுக்கு தெரியாம-- நான் என்ன ஏற்பாடு செய்ய முடியும் சார்?    ஆமா        PK சார் பேமிலி வருவங்கள்ல ?

ராசா:  ஆமாம் 

சுந்தரி: அவங்களுக்கு ரூம் போடணும் இல்ல?

ராசா : இரு நல்ல வேளை ஞாபகப்படுத்தின . அவர், ரொம்ப பெரிய அதிகாரி.; அதுக்கு தகுந்த மாதிரி ரூம் போட்டா உனக்கு கட்டுப்படியாகாது. அதுனால நான், எங்க வீட்டுக்கு கூட்டிகிட்டு போய்டறேன்.

 நல்ல பெரிய கெஸ்ட் ரூம் இருக்கு AC பண்ணி இருக்கு  4 பேர் ஈசியா தங்கலாம். பாக்கி எல்லாம், நான் பாத்துக்கறேன். சுபத்திரா மேடத்துகிட்ட சொல்லிட்டா      நியாயமான ரேட்ல பெரிய வண்டி 2  ஏற்பாடு பண்ணிட்டா போக வர சரியா இருக்கும் . அப்படியே சுத்துவட்டார கோயில்   போகணும் னா மேடத்தை ஏற்பாடு பண்ண சொல்லி நல்லா பண்ணிடலாம், என்று டைரியில் குறித்துக் கொண்டார்

கல்யாணத்து அப்புறம் சமயபுரம்   போகணும்னு   சிலதுக கிளம்புங்க  , முக்கியப்பட்டவங்கள வேன் அனுப்பிட்டு கூடவே மாடசாமி/ சுபத்திரா போகட்டும அவங்களுக்கு அங்க பயங்கர செல்வாக்கு., நல்ல தரிசனம் கிடைக்கும்.

சுந்தரி வியந்தாள் ‘அப்பா எவ்வளவு ஈடுபாடும் ஆர்வமும் காட்டறாரு

,அதுமட்டுமா --ஒரு வினாடியில் கம்பியூட்டராய் யோசிக்கிறார் என்று வியந்தாள் சுந்தரி.

தங்கைக்கு, போன் போட்டாள் சுந்தரி.  ஏண்டி? உங்க மேடம் உன்னை, கல்யாணத்துக்கு பிறகு அனுப்ப சம்மதிச்சுட்டாங்களா?

வேற வழி?  அதுவும் மாப்பிள்ளை வேற ஊருன்னா போய்தானே ஆவணும் ?  அவங்களே அப்பிடி தானே ராஜபாளையத்துலேந்து வந்தவங்க. மனசு  இருக்காதுதான். ஆனா நீ எங்க இருந்தாலும் நல்லா  இருப்பனு பத்திரிகை வாங்கிகிட்டு வீட்டு உள்ள கூட்டிக்கிட்டு போய் சாமி ரூம்ல 500/- பணமும் காமாட்சி அம்மன் போட்டோவும் குடுத்திருக்காங்க . உன்னோடயே வெச்சுக்கனு சொல்லி   லேசா கண் கலங்கிட்டாங்க. கல்யாணத்துக்கு அவசியம் வாங்க னு சொல்லிகேட்டுக்கிட்டேன்.. அவசியம வரேன்னு சொல்லிருக்காங்க..

அவங்களுக்கு-- ரூம் ஏற்பாடு செய்யணுமா? -      வேண்டாம் அவங்க அண்ணன் வீடு திருச்சியில் இருக்கு அவர் திருச்சி DSP னு சொன்னாங்க..  

ஏதோ நண்பர்கள் உதவியால ஏற்பாடெல்லாம் நடந்துட்டுருக்கு என்று நிறைவாக பேசினாள் சுந்தரி..

தொடரும்

அன்பன் ராமன் .

 

No comments:

Post a Comment

ANGER AND EGO -8

  ANGER AND EGO -8 கொந்தளிப்பும் அகம்பாவமும்-8 SEEKING- FEED-BACK   கருத்து கோரி பெறுதல் இது ஒரு மனித செயல்பாடு குறித்த அளவீ...