Sunday, September 15, 2024

TEACHER BEYOND YOUR IMAGE-`14

 TEACHER BEYOND YOUR IMAGE-`14

ஆசிரியர்- உங்கள் பிம்பத்தை தாண்டி-14

 

மனங்களில் நுழைவது எவ்வாறு?

ஆசிரியப்பணியில் நுழையும் பலரும் வெற்றி அடையவே விரும்புவர். வெற்றி என்பது நமது எதிர்பார்ப்பு ஆனால் அதை எட்ட அனைத்து தேவைகளையும் நிறைவேற்றினால் தான் வெற்றி நோக்கி பயணிக்க முடியும் .குறைந்தது தொடர்ந்து ஒருவர் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது சிறப்பாக செயல் படாமல், வெற்றிக்கு விழைவது -தவறான நிலைப்பாடு.

ஆசிரியப்பணி பிற பணிகள் போன்றதன்று. என்ன செய்தாலும் விமரிசனம் முதலில் தோன்றும் , மெல்ல மெல்ல விமரிசனம் வேர் ஊன்றவோ  அன்றி செத்துமடிவதோ ஆசிரியன் வெளிப்படுத்தும் ஆளுமையின் அடிப்படையில் அரங்கேறும்.

வேறெந்த புறப்பண்புகளும் [செல்வம், குடும்பபெருமை, இன்னபிற விளையாட்டுத்தகுதிகள் மற்றும் பொதுவெளியில் பரிச்சயம் ] ஆசிரியனின் பெருமை தன்னை உயர்த்தாது.  இவை ஏதுமின்றி, முறையான செயல் பாட்டினால் ஆசிரியர் வெற்றி ஈட்டவும், அதை தொடர்ந்து தக்க வைக்கவும் இயலும். அவற்றை முறையாக கடைப்பிடிக்க வெற்றி நோ க்கி நகர முடியும்.

அதன் முதல் படிதான், பயில்வோர் மனங்களில் நுழைந்து பீடம் அமைத்து அமர்தல். அந்த முதல் படியின் தேவை ஒவ்வொருநாளும் ஆசிரியர் தெளிவாக கருத்துகளை விளக்கி, எவ்வித குறையும் தோன்றாவண்ணம் பாடப்பகுதிகளை பயில்வோரை புரிந்துகொள்ள எதுவாக வரிசை தவறாமல் எடுத்துரைப்பது என்ற முதல் பண்பு.

இப்பண்பில் தென்படும் ஒவ்வொரு பிழையும், குறையும் , ஆசிரியப்பணியை விமரிசனத்துக்கு உள்ளாக்கும். மாணவருக்கு என்ன தெரியும்-- என்ற அலட்சியப்போக்கு ஆசிரியருக்கு ஒன்றும் தெரியவில்லை என்ற சமூகப்பார்வையை ஆசிரியரின் மீது கறை போல் படிய வைக்கும்.   

அதனால், ஒவ்வொரு கருத்தையும் தெள்ளத்தெளிவாக ஆசிரியர் விளங்கிக்கொள்ள வேண்டும். அதனால் தான் பல நூல்களை நாடிப்பயில வேண்டும் என்பது தேவை.  இவ்வாறு   ஆசிரியப்பணிக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும்.. அது ஆசிரியனுக்கு-- மனப்பயிற்சி.   

பின்னர் அரங்கேற்றவேண்டியது --செயல் பயிற்சி.

செயல் பயிற்சி என்பது, கள நிலை சார்ந்து அமைத்துக்கொள்ளப்பட வேண்டியது. அது ஒவ்வொரு குறிப்பிட்ட வகுப்பு [பயில்வோர் திறன் அடிப்படையில்] சூழலுக்கேற்ப செயல் பயிற்சியை வடிவமைத்துக்கொள்ள  வேண்டும்  .

செயல்பயிற்சி

பாடத்தில் உள்ள வாசகங்களை, நன்கு ஊன்றிப்படியுங்கள்.

உங்களுக்கு என்ன பொருள் தெரிகிறது?. அவ்வாசகத்தை மாணவ மாணவியர் பொருள் மாறாமல் புரிந்துகொள்ள இயலுமா என்று யோசியுங்கள். அவர்களால் முடியும் எனில் வாசகத்தை மாற்றாமல் அப்படியே வகுப்பில் பலமுறை [4+] திரும்பத்திரும்ப சொன்னால் , வாசகம் மனதி பதியும்.

அவ்வாசகத்தின் பொருளை-- குறைந்தது 3 முறை ஒரே வகுப்பில் சொல்லுங்கள். பொருள் புரிந்த வாசகம் எளிதில் மறக்காது. வகுப்பு முடியும் தருவாயில் ஒரு 2 நிமிடம் அன்றைய பகுதியின் முக்கிய வாசகங்களை நினைவு கூறுங்கள்.கருத்துகள் பயில்வோர் மனதில் நன்றாகப் பதியும்..

தொடர்ந்து இந்த முறையை ஆசிரியரே பின்பற்றிவர , பயில்வோர் எளிதில்     2 ம் முறை யிலேயே நன்றாக புரிந்து கொள்ளும் தன்மைக்கு முன்னேறி யிருப்பர்.. இதுதான் மனங்களில் நுழைய நேர்மையான அணுகுமுறை..

அடுத்தடுத்து தொடர்முயற்சியாக ஆசிரியர் மாணவர் நிலையில் தன்னை நிறுத்தி பாடங்களை புரிந்து கொண்டால், பயில்வோருக்கு எந்த இடங்களில் குழப்பம் தோன்றும், அதை எவ்வாறு புரிந்துகொண்டு முன்னேற வேண்டும் என்று மிக எளிதில் விளக்கம் தர-- ஆசிரியர் மாணவ மனங்களில் சிம்மாசனம் கொள்ளுவது சர்வ நிச்சயம்.

பிற வழிமுறைகளை வரும் பதிவுகளில் காண்போம்.

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

PATTU IYENGAR –THE LYRICIST-3

  PATTU IYENGAR –THE LYRICIST-3 பாட்டு எழுத வந்த   பட்டு ஐயங்கார் -3 கீழே இறங்கி வந்த திருப்பதி , ஐயங்காரை பக்கத்து அறை   டேபி...