Friday, September 27, 2024

SALEM SUNDARI- 52

SALEM SUNDARI- 52

சேலம் சுந்தரி- -52

இந்த அளகுலகாபி வாங்கித்தானு வேற கூசாம கேக்குறீங்க.

உங்களுக்கே நல்லாருக்கா?. நாளைக்கு எல்லா பேப்பரும்,  நீங்கதான்  அடிக்கணும் முடிக்கணும் ராத்திரி 10 மணி ஆனாலும் முடிக்காம விடமாட்டேன் , போய் மளமள னு வேலையைப்பாருங்க , சும்மா அங்க வலிக்குது இங்க கடிக்குதுனு வேசம் போடாதீங்க என்று குதறிவிட்டார்.

இப்போது ஆபீஸ்-- கப்சிப் மாடசாமி இல்லாமலேயே.. சுந்தரி தலை குனிந்து உள்ளூர சுப்புவின் கோர தாண்டவத்தை ரசித்தாள்..

அனைத்தையும் [14 கடிதங்கள், 6 ஸ்டேட்மென்ட், 1 ஆர்டர்] எல்லாம் கொத்தாக சுப்புவின் டேபிளில் வைத்தாள் சுந்தரி.

தேங்க்ஸ் ம்மா கொஞ்சம் ஓய்வு எடுங்க பாவம் ரொம்ப வேலை செஞ்சிருக்கீங்க. என்று சுப்பு ரெத்தினம் சொல்ல, இந்திரா அ அ என்று வாயைக்கோணி அழகு [கேலி யாக பழித்துக்காட்டி]  காண்பித்தாள் , துரதிர்ஷ்டம் துரத்துகிறது

இந்திரா அ அ என்று வாயைக்கோணி யதை சுப்புரெத்தனம் பார்த்துவிட்டார்.. இந்திராவுக்கு அஷ்டமத்தில் சனி..  

திடீரென்று மாடசாமி எப்படி இவர்களை வழிக்குக்கொண்டு வருவார் என்று மின்னல் வெட்டியது சுப்புரெத்தினத்திற்கு.

மாடசாமியிடம் ஐடியா கேட்டு, அவர் சொல்படி   இவளை ரிப்பேர் பார்க்கவேண்டும், என்று [POLICY DECISION] கொள்கை முடிவு எடுத்தார். சுப்புரெத்தனம்.

அழகு காட்டியதை சுப்புரெத்தினம் பார்த்து விட்டார் என்பதை இந்திராவும் கவனித்துவிட்டாள். உடல்நடுங்குகிறது. பயத்தில் சிறுநீர் பீறிட்டு சிதறும் போல அடிவயிற்றில் சங்கடம். சார் என்று எழுந்து பாத்ரூம் நோக்கி விரைந்தாள்.. முதுகு முகம் எங்கும், குப் என்று வியர்த்து கொட்டுகிறது.

உடல் நடுக்கத்துடன் மீண்டும் இருக்கைக்கு திரும்ப , கோமதி என்ன இப்பிடி ஊத்துது என்று இந்திராவைக்கேட்க அவள் மேலும் வெடவெடத்தாள் .

சார் இந்திராக்கு-- உடல் நடுங்குது ரொம்ப வேர்த்து ஊத்துது என்றாள் கோமதி.

இதுதான் நல்ல வாய்ப்பு என்று சுப்புரெத்தினம் புளியை [நல்ல பழைய புளியாக ]   .நசுக்கி பிழிந்தார். அப்படியா நிச்சயம் ஹார்ட் அட்டாக் தான் ஏன்னா 2 நிமிஷம் முன்னாடி வாய் ஒருபக்கமா இளுத்துக்கிட்டு அடுத்த வினாடியே பாத்ரூமுக்கு வந்துச்சுன்னா ஹார்ட் அட்டாக் தான். [அழகு காட்டியதை நன்கு பயன்படுத்தி வாய் ஒருபக்கமா இளுத்துக்கிட்டு என்கிறார்].

சும்மாவே உக்காந்திருந்தா இப்படித்தான் விகாரமா வாய், கை வெவ்வேறு திசையிலே இளுக்கும்.

 உடம்பு நல்லா ஆனதும், விராலிமலை முருகனுக்கு காவடி எடுங்க என்று அட்வைஸ்.

திரும்பத்திரும்ப ஹார்ட் அட்டாக் தான் என்று சொல்லி இந்திரா கதி கலங்கிக்கொண்டிருக்க, சுப்புரெத்தினம்வைகாசி விசாகத்துக்கு காவடி எடுங்க நாங்கல்லாம் வரோம்என்றார்.

இந்திரா காவடி ஆடினால் எப்படி இருக்கும் என்று கோமதி மனக்கண்ணில் கற்பனை செய்ய சிரிப்பு பொங்கியது. சிரித்தால் விவகாரம் பூதாகாரம் ஆகும் உடனே பெரிதாக லொக் ;லொக் என்று இருமிக்கொண்டே எழுந்துகான்டீன் பகுதிக்கு சென்றாள். பொதுவெளியில் சிரிப்பு தானாக அடங்கினாலும் அவ்வப்போது  எட்டிப்பார்த்தது.

சுமார் 1 மாத காலமாக நிம்மதி இல்லாத மன நிலையில் துவண்டு கிடந்த சுந்தரிக்கு இப்போது நடப்பதெல்லாம் பெரும் பொழுதுபோக்காக இருந்தது .ஆனாலும், தான் ஏதாவது பேசி அதனால் பொல்லாப்பு நேர்ந்தால்?       பட்டதே போதும் என்று வாய் மூடி மௌனி ஆனாள், எனினும் சுப்புரெத்தினம் லேசுப்பட்டவர் இல்லை. எனக்கு வகுரு பொடச்சுக்கிட்டு இருக்கு னு மாடசாமி சார் கிட்ட சொன்னார் னு வெட்கப்பட்டேன் .இப்ப இந்திரா வேலைசெய்யாம இருந்ததை குத்திக்காட்டறாரே -சும்மாவே உக்கார்ந்தியிருந்தா ஹார்ட் அட்டாக் வரும் னு டாக்டர் போல சொல்றார். மாடசாமி சார் இல்லை- இருந்தா ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போவார்.   சரியான நேரத்துல ட்ரான்ஸ்பெர் அது இது னு மாட்டிவிட்டுருவார் சுப்புரெத்தினம். .

அனுபவஸ்தர் களிடம் ரொம்ப கவனம் தேவை. நல்லவேளை, நான் முதலிலேயே பட்டுட்டேன் .நல்ல பாடம்.  வேலை தவிர வேறு எதுவும் நம்மது அல்ல  "ஆஞ்சநேயா" என்று பிரார்த்தனை செய்தாள் .

தொடரும்

அன்பன் ராமன்

1 comment:

  1. Sundari keeps Anjaneyar and Samayapuram Mariamman busy always.

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...