Thursday, September 26, 2024

MUSIC DIRECTOR V.KUMAR-3

 MUSIC DIRECTOR  V.KUMAR-3

இசை அமைப்பாளர் வி குமார் -3

பல தரப்பட்ட பாடல்களை வடிவமைத்தவர் குமார். அவரின் திறனுக்கு சான்றாக இன்று சில பாடல்களைக்காண்போம்

புன்னகை மன்னன் பூ விழி கண்ணன் [ இருகோடுகள் 1969] வாலி , குமார் , ஜமுனாராணி , சுசீலா. இரு பெண்கள் ஒரு கணவனுக்காக போராடுவதாக பாடல் . பாடலின் அமைப்பில் உரிமையும் சோகமும் வெளிப்படும் ம்வகை இசை அமைப்பு. இப்பாடல் அந்நாளில் ஒலிக்காத நிகழ்ச்சிகளே இல்லை எனலாம் . கேட்டு மகிழ இணைப்பு இதோ

https://www.google.com/search?q=PUNNAGAI+MANNAN+POOVIZHIKKANNAN+VIDEO+SONG+&newwindow=1&sca_esv=708ca891a389fdf3&sca_upv=1&sxsrf=ADLYWIKn8CoiKjtmf_CBqO1tkNkAkG3hAg%3A172 IRU KODUGAL 1969 VAALI, V K   JAMUNA RANI , P SUSEELAA

உனக்கென்ன குறைச்சல் [வெள்ளி விழா 1972] வாலி, குமார் , குரல் எம் எஸ் விஸ்வநாதன் .

ஒரு இசையமைப்பாளர் வேறொரு இசை அமைப்பாளரை பாடவைத்த முதல் சம்பவம் [ ஏனெனில் எம் ராஜ அடிப்படையில் பாடகர் , பின்னர் இசையமைக்க தொடங்கினார்., எனவே அது கணக்கில் வராது ] எம் எஸ் வியை பாடச்சொல்ல குமார் தயங்கியபோதும் , உற்சாகமாகப்பாடினார் எம் எஸ் வி . இப்பாடல் மிகவும் கூர்ந்து கவனித்தால் பல பாவங்கள் தென்படக்காணலாம் . இணைப்பு இதோ  

https://www.google.com/search?q=UNAKKENNA+KURAICHAL++VIDEO+SONG&newwindow=1&sca_esv=708ca891a389fdf3&sca_upv=1&sxsrf=ADLYWIJoiRseiUf5awNemt_DwV-DIGzK4g%3A1726115509884&ei=t  VELI VIZHA 1972  VALI, V K,  MSV

காவேரி தண்ணியில குளிச்சவடி [ஆயிரம் பொய் ] வாலி , குமார் குரல்கள் மனோரமா , எல் ஆர் ஈஸ்வரி

இது ஒரு நாடகமேடைப்பாடல். எனவே இசையின் பயணமும் கருவிகளும் அதை நினைவூட்டும் வகையில் இருப்பன, இவ்வகைப்பாடல்களையும் நயமுடனே வடிவமைத்துள்ளார் குமார் .கேட்டு ரசிக்க இணைப்பு இதோ.

https://www.google.com/search?q=movie+aayiram+poi+kaveri+thanniyila+kulichavadi+video+song+download&newwindow=1&sca_esv=0e099c037747d24f&sca_upv=1&sxsrf=ADLYWIKN2QWLe92FKJFqh0qZvc2- 1000 poi manorama lre drama song

வெள்ளிவிழா படத்தில் மற்றுமோர் உத்தியை செயல்படுத்தினார் குமார் . ஆர்ப்பாட்டமான பாடல்களைப்பாடி புகழ் பெற்ற எல் ஆர் ஈஸ்வரி யை 'காதோடுதான் நான் பேசுவேன் ' என மென்மையாகவும், அதே சமயம் இக்கட்டான சூழலை வெளிப்படுத்தும் சற்று விரக்தி நிறைந்த குரலில் ஈஸ்வரி பாடியுள்ளார். முற்றிலும் அமைதியே பாடலின் வடிவம் . இணைபோப்பு இதோ.

https://www.youtube.com/watch?v=xYD5qqBqjKw KADHODU THAAN VELLI VIZHA 1972 VALI V K  LRE

அதே வெள்ளிவிழா படத்தில் பிறிதொரு பாடலை மேன்மைப்பாடல் பாடும் சுசீ லாவின் குரலில் அதிரடியாக நான் சத்தம் போட்டு தான் பாடுவேன் என்று அலறி, பக்கத்து அறை ஆசாமி கதிகளங்க ஒரே அதகளம் இப்பாடல்.             கேட்டு ரசிக்க இணைப்பு

https://www.youtube.com/watch?v=xYD5qqBqjKw NAN SATHTHAM POTTU VELI VIZHA 1972 VALI, V K,  P S

மிக மென்மையான பாடல்

உன்னிடம் மயங்குகிறேன் [தென் சிந்துதே வானம் ] வாலி குமார் ஜேசுதாஸ் மிகவும் அமைதியான ராக அமைப்பு மற்றும் ஒலிகளின் கலவை. இரவில் கேட்க அற்புதமான பாடல் . இது போன்ற பாடல்களை விளக்குவது எளிதன்று. பாடலுக்கு இணைப்பு

https://www.google.com/search?q=then+sindhudhe+vaanam+video+song&newwindow=1&sca_esv=d21f97ffd6d7790a&sca_upv=1&sxsrf=ADLYWIL8CZEBRGh-H4NEPjpBxzTmTGO5OQ%3A1726216818471&ei=cvrj PONNUKKU THANGA MANASU spb sj

மரியாதைக்குரிய பல பாடல்களை வழங்கிய வீ குமார் உரிய அங்கீகாரம் பெற்றாரா எனில் கேள்விக்குறியே. சாதனைக்குரியவர் மறைந்தார் என்பது வேதனையே.

அன்பன் ராமன்

1 comment:

  1. Thanks for highlighting that such hit songs were set by V. Kumar. Alas he was an insung hero.

    ReplyDelete

SRIRANGAPATNA

  SRIRANGAPATNA Curiously, the name has no association with either Srirangam of Tamilnadu or Patna of Bihar; in its own right –it is Srira...