TM SOUNDARARAJAN –23
டி எம் சௌந்தரராஜன்-23
திரு டி எம் எஸ்ஸின் குரல்
முழங்கும் பாடல்கள் இன்றைய பதிவில் இடம் பெறுகின்றன . ஒவ்வொன்றும் தனி சிறப்பு கொண்டவை.
அதென்னாவோ தெரியவில்லை இன்றைய தேர்வு பாடல்களின் அமைப்பில் இசையின் ஆதிக்கமும் கவிதைக்கு
சமமாக போட்டியிட்டு 'நீயா நானா' என்பது போல் அமைந்துள்ளவை.. அந்த நாளைய ஆக்கங்கள் அனைத்துமே
பன்முகத்தன்மை கொண்டவை.
இரவும் நிலவும் [கர்ணன்
-1964] கண்ணதாசன், வி ரா , டி எம் எஸ், பி சுசீலா
பாடல் முழுவதிலும் தேவிகா
முன்னே ஓட, சிவாஜி கணேசன் துரத்திக்கொண்டு ஓடுவதாக காட்சி பதிவாகியுள்ளது. பல ஆண்டுகளாக
[60 ஆண்டுகள்] அறிந்த பாடல் எனினும் ஒருஉண்மை இப்போது தான் மனதில் தோன்றிகிறது . ஆம்
பாடலில் சரணங்களில் சுபாங்கி யே முன்னே செல்ல, கர்ணன் பின் சென்று பதிலிறுத்துப்பாடும்
நயம் மாறுபட்ட. ஒரு அமைப்பு. பாடலில் சரண வரிகளை ஆழ்ந்து கவனியுங்கள் நான் சொல்வது நன்கு விளங்கும். பாடல் ஹம்பி – பேலூர்--ஹளே
பீடு கோயில்களில் படமாக்கப்பட்டுள்ளது ஹொய்சால சாம்ராஜ்ஜிய பாரம்பரியத்தை காட்சிப்படுத்தியுள்ளார்
பந்துலு.
நாளெல்லாம் கேட்டாலும் சலிப்புத்தட்டாத
பாடல் . இசைக்கருவிகள் கூட்டாக ஒலித்து, நம்மை மொத்தமாக வீழ்த்திய விந்தை கர்ணன் படப்பாடல்கள்
கொண்ட தனிச்சிறப்பு..
கேட்டு மகிழ இணைப்பு.
சுபஸ்ரீ அவர்களின் குழுவினர் இப்பாடலை வழங்கி நம்மை மேலும் தகவல் அறிய வைத்துள்ளனர், இணைப்பு
நல்லதொரு குடும்பம் [தங்கப்பதக்கம் -1974] கண்ணதாசன் , எம் எஸ் வி, டி எம் எஸ் , பி சுசீலா
நல்ல குதூகலப்பாடல் ; கேளிக்கைக்கு பஞ்சமே இல்லை. சிவாஜியின் நடன அசைவுகள், இசையின் ஆதிக்கம் என பல அம்சங்கள் கொண்ட பாடல். காட்சியும்
மிக
பெரிது.
பாத்திரங்கள்
அதிகம்
எனினும்
எம்
எஸ்வி
இசையில்
பின்னி
பிரித்து
மேய்ந்துவிட்டார் எனில் தவறில்லை. அவர் இசைக்கருவிகளை பிசிறில்லாமல் ஒருங்கிணைப்பதில் நிகரற்ற வித்தகர். பாடலை ஆழ்ந்து கவனியுங்கள். இணைப்பு இதோ
https://www.google.com/search?q=nallathoru+kudumbam+palkalaikalagam+song+download&newwindow=1&sca_esv=4d564c34da167c02&sca_upv=1&sxsrf=ADLYWILDO6kmiat_T1IMIO41_CRhPZ2JBg%3A1727246300060&ei=3K_zZu-mA46o4-EP0qCYsQ8&oq=nallathoru+kudumbam+video+so thangapadhakkam
kd mev tms ps
வணக்கம் பலமுறை சொன்னேன் [அவன் ஒரு சரித்திரம்] கண்ணதாசன் , எம் எஸ் வி,
சுசீலா
டி
எம்
எஸ்
கவியரசரின் கம்பீரமான கவிதை மேற்கத்திய இசையில்; ஆயினும் இந்திய பண்பின் மாண்புதனைப்பேசிய பாடல். பாடல் நெடுகிலும்
நம்மை
தலை
நிமிரச்செய்யும் கருத்துகள் நிறைந்த பாடல். மேற்கத்திய இசையில் துவங்கி, வெகு இயல்பாக தென்னாட்டு இசைக்குள் நுழைந்து கலக்குவது எம் எஸ் வியின் பாணி. எங்கிருந்து வந்தது எனும் படி, வணக்கம் வணக்கம் வணக்கம் என்று துவங்க பாடல் பயணிப்பதென்னவோ தவில் துணையில். தான். இதென்ன ஒரு வசீகரக்கலவை, சொற்களும் இசையும் நட்புகொண்டு குதூகலிப்பது எத்துணையோ முறை பார்த்துவிட்டோம் எனினும் இந்தப்பாடல் தன்னிகரில்லாத இசைஜாலம். இது போன்ற ஒலிஜாலங்களை ஒரு கை விரலில் அடக்கிவிடலாம்.. மிகவும் கம்பீரமான இசையும் கவித்துவமும் அதிகம் பெறமுடியாத ஒன்று. கேட்டு மகிழ இணைப்பு
https://www.google.com/search?q=vanakkam+pala+murai+sonnen+video+song+tamil&newwindow=1&sca_esv=4d564c34da167c02&sca_upv=1&sxsrf=ADLYWIKlQOmkqC9e7TMfRg3JzoMcWy54Mw%3A1727246583783&ei=97DzZvq-L_GZ4-EP-cLU6AI&o
avan oru sarithiram 1977 kd mev ps tms
படத்திற்கு என பதிவிட்டு ஆனால் விலக்கப்பட்ட பாடல் மகாராஜன் உலகை ஆளலாம் [கர்ணன் ] பிசுசீலா, டி எம் எஸ் . நம்மைக்கிறங்கச்செய் யும் நளினம் இப்பாடல். கிடைத்த காட்சிகளை தொகுத்துள்ளார் ; பாடல் நம்மை நிச்சயம் ஆட்கொள்ளும் முழுத்திறன் கொண்ட ஒரு யதார்த்தக்கவிதை . இணைப்பு இதோ.
https://www.dailymotion.com/video/x7nkte2
karnan maha rajan ps tms kd
உரிய நேரத்தில் கர்ணன்
இசை
குறித்து விரிவாக அலசுவோம். ஒரே படத்தில் இத்துணை வெற்றிப்பாடல்களா? வியப்பே மேலிடும் என்ன செய்ய இயலும் / வியப்போம்/ வியர்ப்போம் .
நன்றி அன்பன் ராமன் .
"ஒலி ஜாலங்களை ஒரு கை விரலில் அடக்கிவிடலாம்"- புரியவில்லை.
ReplyDelete" மகராஜன் உலகை ஆளலாம்"-
கேட்டதில்லை