Tuesday, September 24, 2024

OLD MOVIE SONGS -3

 OLD MOVIE SONGS -3

பழைய திரைப்படப் பாடல்கள்-3

பூர்வாங்க விவரங்கள், கதையில் பாடல் வரும் இடம், அதன் [பின்னர் மீண்டும் இதே பாடல் ஒலிக்கவேண்டிவருமா என்ற கேள்வி பேசப்படும். ஏனெனில் ஒரே அமைப்பில் சோகமும் , இன்பமும் தோன்றும் இரு பாடல்கள்எனில்\கவிஞர் மிக கவனமாக பாடலைஎழுதுவார்.. சில சொல் மாற்றங்கள் மூலம் பாடல் காட்சிக்கேற்ற அமைப்பைப்பெறும். இப்போது இசை அமைப்பாளர் இரண்டு பாடல்களிலும் பாவங்கள் முறையாக வருமாறு கவனமாக இசையமைப்பார். ஆனால் பாவத்திற்கேற்ப இசைக்கருவிகள் மாறும். அது போன்ற சூழல்களில் இரண்டு பாடல்களையும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் பாடி பயிற்சிபெற்று பதிவிடுவது நல்ல பலன் தரும் . எனவே ஆர்கெஸ்ட்ரா வின் அமைப்பும் கருவிகளின் எண்ணிக்கையும் முடிவு செய்யப்பெற்று தயாரிப்பாளரிடம் ஒப்புதல் பெற்று பாடல் பதிவு நடைபெறும் .

 பதிவுக்கூடமும் -தயாரிப்பாளரும்

பாடல் பதிவில் விசேஷ தேவைகள் இருப்பின் சில குறிப்பிட்ட பாடல் பதிவு ஸ்டூடியோக்கள் தேவைப்படும்;  அப்போது தயாரிப்பாளர் ,இசை அமைப்பாளர் ஆலோசனையுடன் குறிப்பிட்ட பதிவுக்கூடத்தில் வேண்டிய வசதிகளுடன் இடம்             பிடித்து தருவார்.. அதற்கென்று நேரம் ஒதுக்கப்பட்டு பாடல் பதிவு நடை பெரும். ஆகவே இசைக்குழுவினர் அனைத்து பதிவுக்கூடங்களிலும் மாறி மாறி பணி  புரிவர்.

பதிவுக்கூட என்ஜினீயர் /இசை அமைப்பாளர் / இசைக்குழுவினர் / பாடுபவர்கள் .

இவர்கள் ஒருங்கிணைந்து பாடிப்பாடி பல முறை ஒத்திகைகுக்குப்பின் பாடல் பதிவு துவங்கும். அது ஒரு திருமண நிகழ்வு போல் அன்றாடம் கூட்டமும் கலகல ப்புமாக   இருக்கும் . அந்த களம் மிகவும் மாறு பட்டது. அந்த நாளில் பாடல் பதிவு துவங்கிவிட்டால் எப்போது முடியும் என சொல்ல இயலாது. நீண்ட நேரம் செயல் பட வேண்டியிருக்கும் என்பது அனைவருக்குமே தெரியும் .

இசைக்குழுவின் தலைவர் இசை அமைப்பாளர் தான் எனினும் பாடல் பதிவு பல ஒருங்கிணைப்பாளர் கள் பங்கு கொள்ளும் ஒரு கம்பீர நிகழ்வு. ஆம் ஆங்காங்கே ஒருங்கிணைப்பாளரால் கட்டுப்படுத்தப்படும்                       குழுக்களாக இயங்குவது தான் இசை குழுக்கள் . அதாவது வயலின்கள், கிட்டார்கள் , மாண்டலி ன், சித்தார் , வீணை, சந்தூர் , சாரங்கி [சௌரங்கி] போன்ற நரம்புக்கருவிகள் அனேகமாக முன் வரிசையில் இருப்பவை[1 ஒருங்கிணைப்பில்]. பிற ஒலிக்கருவிகள் செல்லோ , ஷெனாய் , க்ளாரினெட் , இவை பின் கடைசி [2ம் ஒருங்கிணைப்பு],  கிட்டரில் லீட் கிட்டார், ரிதம் கிட்டார்  இருவகைகள் -லீட் கிடார் வழிகாட்ட பிற பின் தொடர ரிதம் கிடார் தளத்துக்கு அனுசரணையாக]ஒரு பக்கவாட்டில் ட்ரம் , போங்கோ, காங்கோ தவில் தபலா போன்ற தாளக்கருவிகள்.. இவை அனைத்துமே 2 அல்லது 3 மைக் வழியே பதிவிடப்பட்டு  ஒலித்தவையே. பாடகர்கள் ஒரு ஓரத்தில் 1 மைக்கில் மாறி மாறி காதல் டூயட் கூட பாடிய காலம் அது. ஆனால் அன்றைய பாடல்களில் ஒலித்த தெளிவும் துல்லியமும் எங்கே போயின? சரி இத்துணை வசதிகள் இன்று இருந்தாலும் ஒலி  என்ற இடம் மாறி, இரைச்சல் என்ற சந்தைக்கடை ஒலி பாடலில் வரக்காரணம்?

அன்று எல்லாப்பாடல்களும் கருவிகளும் பாடலுக்கென்றே ப்ரத்தியேகமாய் வாசிக்கப்பட்டு பதிவிட்டனர். ஆனால் மைக் எண்ணிக்கை மிகக்குறைவு அதுகூட ஒரு காரணம் .  ஒலிக்கட்டுப்பாட்டிற்கு .மேலும் ஒருங்கிணைப்பு வெகு கவனமாக செயல் பட்டது.

இவ்வளவு இருந்தாலும் சவுண்ட் என்ஜினீயர் கண்குத்திப்பாம்பாய் கவனித்து ஒலியை அவ்வப்போது ஏற்றியோ மெல்ல இறக்கியோ பாடலை பரிமளிக்க செய்வார். இசை அமைப்பாளர் பதிவறையில் உள்ளே இருக்க ஏனையோர் வெளியில் இருந்து ஒலி க்க பாடல் பதிவாகும். . அந்நாளைய 'வானம் பாடி" படத்தில் வந்த தூக்கணாங்குருவிக்கூடு 'பாடல் பதிவிடுவதாக அமைந்த காட்சியை ப்பாருங்கள் .

https://www.google.com/search?q=tamil+song+thookkanan+kuruvikkoodu+video+song&oq=tamil+song+thookkanaankuruvikkoodu+video+&gs_lcrp=EgZjaHJvbWUqCQgBECEYChigATIGCAAQRRg5MgkIARAhGAoYoAEyCQgCECEYChigATIJCAMQIRgK

பாடகிக்கு வியர்த்தால் கூட fan [மின் விசிறி ]ஓடாது , ஒலி இடையூறு வரக்கூடாது என்பதற்காக , அதுவும் கூட தேவிகாவின் தலைக்கு மேல் ஓடாத மின் விசிறியைக்காணலாம் .

கருவி களின் நேர்த்தியான ஒலியை துல்லியமாய் காட்டிய பாடல் 1964 கலைக்கோயில்  "நான் உன்னை சேர்ந்த செல்வம்' கேட்டு ரசியுங்கள்

https://www.google.com/search?q=nan+unnai+serndha+selvam+video+song&newwindow=1&sca_esv=8d08fdb92d3dc4d4&sca_upv=1&sxsrf=ADLYWII6b9ISa5fxphNDi7j4vS-35Th3YA%3A1727172353498&ei=AY_yZpyKHtOYseMP_dWhqAk&oq=nan+unnai+serndha+selvam+&gs_lp=Egxnd3Mtd2l6LXNlcnAiGW5hbiB1bm5haSBzZXJuZGhhIHNlbHZhbSAq

தொடரும்

அன்பன் ராமன்  

2 comments:

  1. தித்திக்கும் தேனான பழைய பாடல்களுக்கு இணையேது ? என்று டாக்டர் கே வெங்கடராமன் தெரிவித்துள்ளார்

    ReplyDelete
  2. திரைமறைவில் பணியாற்றும் கலைஞர்களின் திறமைகளை வெளிச்சமிட்டுக் காட்டியதற்கு நன்றி..

    ReplyDelete

THE CARPENTER

  THE CARPENTER   Yet another weakening artisan is the carpenter. Well, readers may construe that I am exaggerating and that carpenters ar...