Monday, September 23, 2024

SALEM SUNDARI- 51

 SALEM SUNDARI- 51

சேலம் சுந்தரி- -51

 நோ நோ நோ It is a pleasure, kindly don't  deny it  என்று மொத்தமாக மடக்கி விட்டார் ராமசாமி.

PK மனைவியுடன் ஆலோசித்தார்.

உமா மேடம் -"சரி, உள்ளூர்க்காரா பேச்சை கேக்கறது நல்லது. அவாளும் கல்யாணத்துக்கு வர போறவா தானே பின்ன என்ன எல்லா ஏற்பாடும் நன்னா பண்ணிக்குடுத்துடுவா அதுனால Mr RAMASAMI ப்ரோபோசல் அக்செப்ட் பண்ணிக்கோங்கோ, அவருக்கு ரொம்ப தேங்க்ஸ் சொன்னேன் னு சொல்லிடுங்கோ." என்றார். அடுத்த 4 நிமிடத்தில் PK சார் ராமசாமிக்கு நன்றி தெரிவித்து மனைவி சார்பிலும் நன்றி சொல்லி மாடசாமியை ரொம்ப ரொம்பக் கேட்டேன்   என்று சொல்லுங்கள்; A great man of richest integrity and unflinching loyalty; please convey my warm enquiries to Mr Madasami  என்றார் PK தழுதழுத்த குரலில்

சட்டப்படி நடந்துகொண்டாலும், மனம் துன்புறுகிறது மாடசாமியை விசாரணை வளையத்துக்குள் நிறுத்த வேண்டி நேர்ந்ததே என்று..

குற்றம் சுமத்தியவள் ஒருவகை வேதனை அனுபவித்தாள், விசாரித்த அதிகாரி வேறுவகை வேதனையை உணர்ந்தார், நேர்மையாளன் எவ்வளவு துடிதுடித்திருப்பான் என்று தெரியாதா  PK           சாருக்கு..  .இவ்வளவு நேரம் PK யுடன் தான் பேசினார் ராமசாமி என்று பக்கத்தில் இருந்த சுந்தரி புரிந்துகொண்டதும் உயர் அதிகாரியை தன வீட்டில் தங்க வைக்க எவ்வளவு  எளிதில் பேசி முடித்தார்  என வியந்தாள்.

ராமசாமி சொன்னார்   "சுந்தரி, ஒரு கவலை விட்டது

PK சார் எங்கவீட்டுல தங்க ஏற்பாடு க்கு ஒத்துக்கிட்டார். மாடசாமியை ரொம்ப ரொம்ப கேட்டதாக சொல்ல சொன்னார். அவன் காம்ப் போயிருக்கான் [நீ போய் ஆளக் காணும் னு . தந்தி அடிச்சு புகார் பண்ணாத என்று வம்பிழுத்தார்,]

சார் திரும்ப திரும்ப அதை சொல்லாதீங்க சார், ரொம்ப வேதனையா இருக்கு சார் அவர் வாயதிறந்து மன்னிச்சேன் னு சொல்லமாட்டேங்கறாரு நீங்களாவது என்னை மன்னிக்கக்கூடாதா? என்றாள்..                          நான் சொன்னது சும்மா உன்னை வம்பிழுக்க, வருந்த வைக்க இல்லை,, போய் வேலைகளைப்பாரு என்று அனுப்பி வைத்தார்

இப்போது அலுவல்களை மட மடவென்று முடித்தாள் . இதுதான் சமயம் என்று, சுப்புரெத்தினம் அநேக வேலைகளை சுந்தரியை வைத்து முடித்துக்கொண்டு, இறுதி அறிக்கைகளை தயார் செய்து கொண்டார்.

. ஒரு உண்மை புரிந்தது சுப்புரெத்தினத்திற்கு. எவ்வளவு வேலை கொடுத்தாலும் சோம்பல் முறிக்காமல் விரைந்து முடித்துவிடுகிறாள், சாக்கு போக்கு சொல்வது, வேலை அதிகம் என்றால் வீட்டிலிருந்தே போனில் லீவ் கேட்டு வாங்குவது என்று எந்த நரித்தனமும் இல்லை. மாடசாமி போன்றே ஒரு work horse இவள் என்று உணர்ந்து கொண்டார் சுப்புரெத்தினம். அனுதாபப்பட்டு, அம்மா காபி சாப்பிடுறீங்களா, காலைல இருந்து நெறைய வேலை பாத்துகிட்டே இருக்கீங்க, காபி வாங்கிட்டு வரச்சொல்றேன் என்றார்.

உடனே சீனியர் பெண்கள் சரி சார் என்று தலையை பலமாக ஆட்ட, சுந்தரி சாரி சார் வேண்டாம், இன்னும் 10 நிமிடம் வேலைபாத்தா எல்லாமே முடிஞ்சிடும் , அதுனால இப்ப காப்பி  டீ எதுவும் வேண்டாம். அப்பிடி வேணும்னா, நான் போயிட்டு வந்துக்கறேன் சார் பாவம் நீங்க செலவு பண்ணாதீங்க என்று நாசூக்காக காபியை மறுத்தாள்.

சுப்புரெத்தினத்திற்கு கோபம் தலைக்கு ஏறியது. அவ்வளவு வேலையும் செஞ்சவ காபி வேணாம்னு சொல்றா, ஒரு வேலையும் செய்யாம, ஏதாவது வேலை சொன்ன உடனே சார் அங்க வலிக்குது, இங்க இழுக்குது னு நாடகம் போட்டுட்டு, காபி வேணுமா னு கேட்ட உடனே வேகமா பூம்பூம் மாடு மாதிரி தலையை ஆட்டுதுங்க என்று பயங்கர கொந்தளிப்பில் சுப்புரெத்தினம்.

ஆமா இப்ப என்ன வேலைபாத்து கிழிச்சுப்புட்டம் னு காபி வாங்கித்தா ங்குறீங்க. இன்னிக்கு எத்தனை தபால் க்ளியர் பண்ணிருக்கறீங்க கொண்டாங்க பாப்போம் என்று கண்ணாடியை அணிந்து கொண்டார்.

சீனியர் இந்திரா 1 லெட்டர், 1 ஸ்டேட்மென்ட்.   எடுத்துக்கொண்டு போனாள்.

இங்க வைங்க பாத்துட்டு சொல்றேன் என்றார்.  

2 .கோமதி -இப்பதான் லெட்டர் அடிச்சுக்கிட்டு இருக்கேன் என்று அதற்குரிய மானுஸ்க்ரிப்ட் உடன் போனாள்..

ஒரு நாளைக்கு 1 லெட்டரா? அதாவது ஒரு ஒரு லெட்டரா [ஒரு ஒரு எளுத்தா]  டைப் அடிக்கிறீங்களாக்கும்; இந்த அளகுல,     காபி வாங்கித்தானு வேற கூசாம கேக்குறீங்க

தொடரும்

அன்பன் ராமன்

No comments:

Post a Comment

TM SOUNDARARAJAN-38

  TM SOUNDARARAJAN-38 டி எம் சௌந்தரராஜன் -38                    POSTING NO. 1225  திரு டி எம் எஸ் அவர்களின் குரலில் வெளிவந்த பாடல்கள் ...